Saturday, May 26, 2007

பரிசுத்த ஆவியின் ஞாயிறு May 27th

பரிசுத்த ஆவியின் ஞாயிறு:

யோவான் (அருளப்பர்) நற்செய்தி http://www.arulvakku.com

அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

Acts 2:1-11
Ps 104:1, 24, 29-30, 31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)
http://www.gnm.org

இன்றைய அருளப்பர் நற்செய்தியில், 20 வது அதிகாரத்தில், யேசு "அமைதி உங்களுக்கு உரித்தாகுக " என இரண்டு முறை கூறுகிறார். முதலில் அமைதியின் அன்பளிப்பை அவர்களுக்கு வழங்கி, அவர்கள் அதனை பெற்றுகொண்டு, அவர்கள் கவலைகளை மறந்து, யேசுவை அடையாளம் கண்டு கொண்டு, அவரை பார்க்க வேண்டும் என்று முதல் முறை கூறினார். அதற்கு அப்புறம், இரண்டாவது முறை கூறி, அவர்கள் அவரது பணியை தொடர வேண்டும் என்பதற்காக கூறுகிறார். பரிசுத்த ஆவியோடு சேர்ந்து, கடவுளரசிற்காக சேவை செய்யவேண்டும் என்ற கட்டளையோடு அவர்களுக்கு பரிசுத்த ஆவியை வழங்குகிறார்.

யேசு நம்மோடு இருக்கிறார் என்று நினைத்து நாம் அமைதியோடும், உறுதியோடும் இருக்கிறோம். யேசுவை மற்றவர்களுக்கு சொல்லும்போது அமைதியாய் இருப்பது என்பது, மிக பெரிய சவாலாகும். இதனால், நாம் குறையுள்ளவர்களாகவும், அல்லது மிகவும் சந்தோசமடைந்தவர்களாகவும், அல்லது நம்மை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்கிற பயத்துடன் நாம் இருக்கிறோம். இதனால் தான், கடவுள் நமக்கு பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்தார்.

கடவுள் நம்மை என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர் நமக்கு தேவையானதையெல்லாம் கொடுக்கிறார். நாம் உண்மையாக போதுமான அறிவாற்றலோடு இல்லையென்றாலும், நமமை ஒதுக்கி தள்ளுபவர்களோடு நமக்கு ஆறுதலாய் இல்லாவிட்டாலும்,பரிசுத்த ஆவியானவர் அதனையெல்லாம் நிவர்த்தி செய்கிறார். பரிசுத்த ஆவியின் ஆற்றலோடு, யேசுவோடு நாம் சேர்ந்து இறைசேவை செய்யும்போது நமக்கு கிடைக்கும் பரிசு என்னவென்றால், நமக்கு கிடைக்கும் "உள் அமைதி" ஆகும். இந்த உள் அமைதி நமக்கு என்ன நடந்தாலும், மற்றவர்கள் நமக்கு என்ன செய்தாலும், நாம் நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் நடவடிக்கை எப்படி இருந்தாலும், இந்த அமைதி நம்மோடு இருக்கும். பரிசுத்த ஆவியோடு இருப்பதன் விளைவு இந்த அமைதியாகும். அமைதி நம்மில் நடக்கும் பரிசுத்த ஆவியின் செயலாகும்.

இந்த நற்செய்தியின் முடிவில், யேசு அப்போஸ்தலர்களுக்கு அவர் சார்பாக மற்றவர்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்குகிறார். அப்போதுதான், பாவமன்னிப்பு என்னும் அருட்சாதனத்தை வழங்குகிறார். பரிசுத்த ஆவ்யின் ஆற்றல், இந்த அமளிதுமளியான உலகத்தில் அமைதியை அனுபவிக்க வைக்கிறது. நம்மை வேதனைபடுத்துபவர்களை நாம் மன்னிப்பது நமக்கு அமைதி அளிக்கிகிறது, அவர்கள் திருந்தாவிட்டாலும் கூட நாம் அமைதி பெறுகிறோம். நாம் கோபத்தை வைத்துகொண்டு, அவர்களை பழிவாஙகவேண்டும் என்றால், நமது கோபம் நம்மை கட்டுபடுத்துகிறது. நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது. ஆனால், நாம் மன்னிக்க முடிவு செய்தால், நாம் நம்மில் அமைதியை பரிசுத்த ஆவ்யின் உதவியோடு அனுபவிக்க முடியும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
எந்த விசயம், உன்னை அமைதியின்றி இருக்க செய்கிறது.? , அது மாதிரியான நேரங்களில் யாரை நீங்கள் மன்னிக்க வேண்டும்.? நீ எல்லாரையும் மன்னித்து விட்டாலும், இன்னும் அமைதியை அடையாவிட்டால், நீ உன்னையே மன்னிக்க வேண்டுமா? நல்ல குருவானவரிடம் அல்லது மத ஆலோசகரிடம் சென்று அவரிடம் ஆலோசித்து, யேசு உன்னிடத்தில் என்ன இருக்க வேன்டும் என்று விரும்புகிறாரோ அதனை அடையவேண்டும்.

No comments: