14, டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி
திருவருகை கால 3வது ஞாயிறு
Isaiah 61:1-2a, 10-11
Luke 1:46-50, 53-54 (with Isaiah 61:10b)
1 Thessalonians 5:16-24
John 1:6-8, 19-28
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
'இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை' என்பதை 'இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை' எனவும் மொழிபெயர்க்கலாம். 6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.8 அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, ' நீர் யார்? ' என்று கேட்டபோது அவர், ' நான் மெசியா அல்ல ' என்று அறிவித்தார்.20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.21 அப்போது, ' அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? ' என்று அவர்கள் கேட்க, அவர், ' நானல்ல ' என்றார். ' நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? ' என்று கேட்டபோதும், அவர், ' இல்லை ' என்று மறுமொழி கூறினார்.22 அவர்கள் அவரிடம், ' நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டார்கள்.23 அதற்கு அவர், ' ″ ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது ″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே ' என்றார்.24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25 அவரிடம், ' நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.26 யோவான் அவர்களிடம், ' நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;27 அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை ' என்றார்.28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, யோவான், "ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்" என்று கூறுகிறது. யேசு தான் அந்த ஒளி, அவருடைய ஆவி, நமக்கு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது. அதன் மூலம், நாம் பாவங்களிலிருந்து விடுபட்டு, பரலோகத்திற்கு யேசுவை பின் செல்ல வழி வகுக்கும். ஆனால், யோவானால் கொடுக்கப்பட்ட சான்று தான் என்ன? அவர் ஒளியை குறித்து எவ்வாறு சான்று பகர்ந்தார்?.
யோவானின் சான்று: "அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்' என்னும் சொற்றொடரை 'அவர் தமக்குரிய இடத்திற்கு வந்தார்' எனவும் மொழிபெயர்க்கலாம். 12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்"
யேசுவை பார்க்க முடியாத ஒரு கனத்தை நினைத்து பாருங்கள். உங்கள் கண்களை அவர் பக்கம் திரும்ப வைத்தது எது? யாருடைய குரல், யேசுவின் பக்கம் திரும்ப வைத்தது? முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல, மற்றவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய நேரம் இது, நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதயம் நொறுங்குண்டவர்களுக்கு ஆறுதலாயும், குணப்படுத்த வேண்டும். பாவங்களில் வீழ்ந்தவர்களுக்கு, விடுதலை பெற்று தரவேண்டும். மிகவும் நெருங்கிய நட்புடன் கடவுளிடம், எப்படி அவர் ஆசிர்வாதத்தை பெறுவது என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
யோவானை போல, நாமும் சான்று பகர வேண்டும். அவருக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு போல நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த உலகின் சத்தத்தை விட, நாம் மிகவும் சத்தமாக இந்த உலகில் குரல் கொடுக்க வேண்டும். நிறைய பேர் குழப்பங்களும், நம்பிக்கையின்மையாலும், வலியினாலும், மனசஞ்சலத்தாலும், அவர்கள் ஆன்மா இறையரசை விட்டு விலகி நிற்கிறது. நாம் அவர்கள் தேவையை அப்படியே ஒதுக்கி விடலமா? அவர்களுக்கு உண்மையை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து விடுவது அன்புக்குரிய செயலாகுமா? அப்படி இருக்க கூடாது. ஒரு நால், யேசுவிடம் நாம் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். நமது ஞான்ஸ்நானத்தின் மூலம், நாம் அவருக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற அழைப்பை ஏன் நிராகரித்தோம் என்று அவருக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். அந்த அழைப்ப ஏற்றிருந்தால், சிலருக்கு யேசுவை கண்டு உணர, உதவியாக இருந்திருக்கும்.
உன்னிடத்தில் எது மாதிரியான குரல் இருக்கிறது? ஏனெனில், நமக்கு கிறிஸ்து இருக்கிறார். நம்முடைய சொந்த வாழ்வு தான் நம் குரல் ஆகும். நாம் எப்படி சோதனையை கையாளுகிறோம் , எப்படி யேசுவின் மேல் நமது விசுவாசத்தை காட்டுகிறோம் என்பதே நமது குரலாக, யாரெல்லாம், சிக்கலில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு கேட்க கூடிய குரலாக இருக்கும். நம்மில் அதிக அமைதியும், அதிக அன்பையும் நாம் கொடுத்தோமானால், நமது அழுகை மிகவும் சத்தமாக இருக்கும்.
நமது குரல் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாவிட்டாலும், நாம் இந்த ஒளியில், எப்படி வாழ்கிறோமோ அதுவே ஒளியின் உண்மையை பேசுவதாகும். நாம் எப்படி உண்மையாய் வாழ்கிறோம், அதுவே மிகவும் சத்தமான உண்மையின் குரலாக இருக்கும்.
நாம் கொடுக்கும் செய்தியின் மூலம், அவர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பது அவர்களுடைய விருப்பம். ஆனால், நாம் பேச வேண்டியதை பேச வேன்டும். இதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கபடுகிறது.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment