Friday, June 12, 2009

ஜூன் 14 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 14 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா
Exodus 24:3-8
Ps 116:12-13, 15-18
Heb 9:11-15
Mark 14:12-16, 22-26


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 14
12 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும்
அந்நாளிலே இயேசுவின் சீடர், ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள்.13 அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள்.14 அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், ' நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? ' என்று போதகர் கேட்கச் சொன்னார் ' எனக் கூறுங்கள்.15 அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள். ' 16 சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
22 அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ' இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல் ' என்றார்.23 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.24 அப்பொழுது அவர் அவர்களிடம், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். 25 இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.26 அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் நற்கருணை மற்றும் யேசுவின் திரு இரத்தத்தை பற்றியும், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்' மற்றும், 'மீட்பின் கிண்ணம்' என்று குறிப்பிடுகிறது. உங்களுக்கு திவ்ய நற்கருணை எந்த அளவிற்கு முக்கியம்?



கிறிஸ்து நமது தலைமை குருவாக பணி செய்யவே இந்த உலகிற்கு வந்தார். பழைய ஏற்பாட்டில் உள்ள யூத குருக்கள், மக்களின் பாவத்திற்கு பரிகாரமாக , ஆட்டின் , கன்று குட்டியின் இரத்தத்தை கொடுக்க சொன்னது போல் இல்லாமல், யேசு நமது பாவங்களுக்காக .அவரின் சொந்த இரத்தத்தால், நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். யேசு "'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்." என்று கூறினார்.. இது தான் புதிய உடன்படிக்கை. மற்ற எந்த குருக்களும் இல்லாமல், நமக்காக நித்திய வாழ்வை பெற்று தந்தார்.

கடவுளின் இரத்தத்தால் மட்டுமே இந்த வெற்றியை கொடுக்க முடியும். ஏனெனில், எவ்வளவு தான், நாம் நல்ல எண்ணங்களை கொண்டிருந்தாலும், குருக்கள் எவ்வளவு பரிசுத்தமாக இருந்தாலும், மீன்டும் , மீன்டும் நாம் பாவத்தைல் விழுந்துவிடுகிறோம். யேசு மட்டும்தான், பரிசுத்தமான மனிதனாக இருந்து, அவரது தெய்வீகம் சாவை வென்றது, அவரால் தான், நித்த்ய வாழ்வின் கதவுகளை திருக்க முடியும்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக, யேசு மிகப்பெரிய விலையை கொடுத்தார். மணம் திருந்தாத பாவத்துடன், திருப்பலிக்கு செல்வதால் என்ன ஆகும்.? நாம் தவறு செய்து விட்டொம் என்று தெரிந்தும், கஷ்டப்பட்டு , அதனை மாற்றி கொள்வது என்பது, யேசு நம்மை மாற்ற வேண்டும் என்று நாம் விரும்புவது சுலபமாக இருக்கலாம். இதில் எது பெரியது? இதனை விட பெரியது எது என்றால், திவ்ய நற்கருணையில் அனைத்து பலன்களையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்று நாம் விரும்புவது ஆகும்.

நம் பாவங்களை நாம் தூர எறிந்து, அதற்கு பரிகாரம் செய்யாமல், நாம் கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் பெறுவது, யேசு, நமக்காக அவர் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசை (அவர் நமக்காக இறந்தார்) நாம் நிராகரிப்பதற்கு சமமாகும். அவர் நமக்காக ஏற்றுகொண்ட , பெருந்துயரை நினைத்து, நாம் அவரின் ப்ரசன்னத்தை, அவரின் இருப்பை, நற்கருணை அருட்சாதனத்தில் இல்லாமல் இருந்தால் நமக்கு நலமாய் இருக்கும் என நாம் நினைப்பது அவர் கொடுத்த அன்பளிப்பை ஏற்று கொள்ளாததற்கு சமம்.

தொடர்ந்து, நமக்கு அளிக்கப்படும் பாவ மன்னிப்பை பெறுவதற்கு , நாம் மனந்திருந்தியிருக்க வேண்டும், நமது பாவங்களை நினைத்து வருந்தி பிறகு நாம் யேசுவை, திருப்பலி அருட்சாதனத்தில், ஏற்று கொள்ள வேண்டும், அப்படி மனம் திரும்பாமல் அவரை ஏற்று கொள்வது, அவரை அவமதிப்பது போல ஆகும். அதே போல யேசுவை கொண்டு நமது பாவங்களை கழுவ நாம் அனுமதிக்காமல் இருப்பதும், அவரை இழிவுபடுத்துவது போல ஆகும்.

பரிசுத்த கடவுளின் திரு உடலும், திரு இரத்தமும், நம்மை அவரை போல ஆக்குவதற்கு , உள்ள ஆற்றல் உள்ளது. திருப்பலியை விட்டு நாம் வெளியேறும்போது, வேறு மனிதராக , திருப்பலிக்கு முன் வந்தது போல இல்லாமல் வெளியேறவேண்டும். இது கடவுளின் திட்டம். முதன்மை குருவாக அவர் தொடர்ந்து பனியாற்றி கொன்டிருக்கிறார். இன்னும் அவர் பனி இன்னும் முடியடையவில்லை.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: