Saturday, March 20, 2010

21 மார்ச் 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

21 மார்ச் 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு

Isaiah 43:16-21
Ps 126:1-6
Phil 3:8-14
John 8:1-11


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 8

1 (இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,4 ' போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டனர்.6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ' உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் ' என்று அவர்களிடம் கூறினார்.8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.10 இயேசு நிமிர்ந்து பார்த்து, ' அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா? ' என்று கேட்டார்.11 அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம், 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.)

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி, எப்படி நலிவுற்றவரில், மிகவும் சிறியவரை , பாவப்பட்டவரில் மிகவும் மோசமானவரை , எப்படி நாம் நடத்த வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்து காட்டான ஒரு உவமையை சொல்கிறது. யேசு (மத்தேயு 25)ல் சொல்வதை போல மிகவும் வறியவர்கள், சிறியவர்கள் விண்ணரசிற்குடையவர்கள். கிறிஸ்துவின் இரக்கத்தை இன்று பெறும் பெண், வாழ்வதற்கே தகுதியற்றவள் என்று அந்த சமூகம் அவள் மேல் குற்றம் சுமத்தியது. மேலும் அவள் பெண்ணானதால், ஆண்களைவிட, மிகவும் கீழாக அவள் மதிக்கப்பட்டாள். மேலும் அவள் பாவம் செய்ததால், அவள் தண்டனைக்கு உரியவள். அந்த கூட்டத்தினர் அவளை குறை சொல்லியும், அவள் ஒருவளே தனியாக நின்றாள். மற்றவர்களை விட அவள் எவ்வளவு சிறியவராய் இருந்திருப்பாள் என்று நினைக்கிறீர்கள்?

நீங்கள் எப்பொழுது மிகவும் தனியாகவும், எந்த ஒரு மதிப்புமின்றி இருந்தீர்கள்? உங்களை குற்றம் சாட்டும் கூட்டத்தின் முன் கூட நின்றிருக்கலாம். மாறாக, நீங்கள் யாரையாவது உதாசீனப்படுத்தினீர்களா? ஆம், நாம் யார் மேலும் கல்லெறியமுடியாது.

இந்த திருச்சபையில்,பலர் நிராகரிக்கப்பட்டும், மறக்கப்பட்டும் இருக்கின்றனர். நமக்கு அது மாதிரி சிலரை தெரிந்த்திருக்கலாம். நாம் நமது பங்கிலோ அல்லது மறைமாவட்டத்தில் உள்ள இறைசேவை நிலையத்திலோ அல்லது, நமது சொந்த வாழ்விலோ, இது மாதிரி நிராகரிக்கப்பட்டவர்களை, நாம் கண்டு கொண்டு, அவர்களுக்கு நாம் நேரத்தை ஒதுக்கி, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நிச்சயம் மிகவும் சந்தோசமாக இருக்கும். அவர்கள் அனைவரும் இன்னும் முக்கியமற்றவர்களாக இருக்க முயல்வார்கள், அதன் மூலம் உங்கள் நேரத்தையும், உங்கள் நேரத்தையும், அதிக வளங்களையும், நமது விருப்பங்க்களையும் இழக்க வேண்டியிருக்கும்.

நோயுற்றவர்களும், வலியும் வேதனையிலும் இருப்பவர்களை எப்படி கையாள்வது என நமக்கு தெரியாது, அதனால், வேறு பக்கம் பார்த்து கொண்டு திரும்பி விடுகிறோம். திருமண முறிவு ஆனவர்கள் எப்போதுமே, மற்றவர்களின் பழிசொல்லுக்கு ஆளாகிறோம் என்று நினைக்கிறார்கள், மேலும் பலர் திவ்ய நற்கருணை கூட பெறுவதில்லை, ஏனெனில் அவர்களுக்கு சிலர், திருச்சபையின் வழிமுறைகளை, தவறாக சொல்லி விடுகிறார்கள். மேலும் யாரும் அவர்களை, மீண்டும் மாற்ற முனைவதில்லை. அடுத்ததாக, சிறுவர்களுக்கு எதிராக எந்த துன்புறுத்தலும் இருக்க கூடாது என்று திருச்சபை முயற்சி செய்கிறது, ஆனால், பெரியவர்களுக்கு எதிரான துன்புறுத்தலை, யாரும் பேசவோ, அல்லது அதற்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் செய்வது இல்லை.


ஏனெனில் நாம் அதை "மிகவும் குறைவான துன்புறுத்தல்" என்று நிராகரித்து விடுகிறோம். கிறிஸ்தவ நிறுவனங்களை விட, மற்ற சமூக நிறுவனங்கள் "மிக சிறியவர்களுக்கு" அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முனைகிறது. இது மாதிரியான மிகவும் சிறியவர்களை விட சிறியவர்களாக இருக்கிறவர்களை கண்டு கொண்டு, அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த தவக்காலத்தில் முனைவது, ஒரு நல்ல தவக்கால பயிற்சியாகும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

No comments: