ஏப்ரல் 24, 2011 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு
Acts 10:34a, 37-43
Ps 118:1-2,16-17,22-23
Colossians 3:1-4 or 1 Corinthians 5:6b-8
John 20:1-9 or Mathew 28:1-10
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 20
இயேசு உயிர்த் தெழுதல்
(மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; லூக் 24:1 - 12)
1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.4 இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
(thanks to www.arulvakku.com)
இயேசு கிறிஸ்து உங்களுக்கு செய்த உதவிகளையெல்லாம் பிரகடனம் செய்ய நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா? அல்லது எந்த விசயம் உங்களை தடுத்து நிறுத்துகிறது? . ஏன் இன்னும் தயங்குகிறீர்கள்? ஏனெனில், உங்கள் வாழ்வில் ஏற்படும் சிற்சில மரணங்கள் ( தியாகங்கள், தோற்றுபோன நம்பிக்கைகளும், அறுந்து போன உறவுகளும், இன்னும் பல) இன்னும் மீண்டுவிடவில்லை என்றும் அல்லது உயிர்த்தெழவில்லை என்றும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
இந்த மாதிரியான தயங்கிய மன நிலையில் தான் ஈஸ்டர் ஞாயிறின் அதிகாலையில் சீடர்களின் மன நிலையில் தான் இருந்தனர்.
இன்றைய முதல் வாசகத்தில், இராய்ப்பரின் மன நிலை இதற்கு மாறாக இருந்தது!. எல்லா சீடர்களும், அவர்களுடைய இறை அழைப்பை உணர்ந்தவர்கள்: சோதனைகளுக்கு உட்பட்டு , இயேசு தான் மீட்பர் என்று உலகிற்கு உரைக்க அவர்களுக்கு அருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அழைப்பை அவர்கள் முழுதும்
எப்படி இயேசு உங்கள் துயரங்களையும், பல கஷ்டங்களையும், வெற்றியாகவும் , பல ஆசிர்வாதங்களுடனும் மாற்றியிருக்கிறார் என்பது தெரியுமா?
"சாட்சியம்" கூறுவது என்பது, உங்கள் அனுபவித்திலிருந்து, நீங்கள் மற்றவர்களிடம் பகிரிந்து கொள்வது ஆகும். இராயப்பார், "இயேசுவை நம்புவர்கள் அனைவரும், அவரின் பாவ மன்னிப்பை பெறுவர்" என்று எல்லோருக்கும் ப்ரகடனம் செய்தார். ஏனெனில், இராய்ப்பருக்கு எப்போது கடவுளின் மன்னிப்பை பெறவேண்டும் என்று முதலிலே அவருக்கு தெரியும்.
நமது கஷ்டங்கள் எப்படி நம்மை ஆசிர்வதிக்கபட்ட வாழ்விற்கு அழைத்து செல்கிறது என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனை பற்றி நாம் உரையாடினால் தான், நம்மால் புரிந்து கொள்ள முடியும். முதலாவதாக, நமது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால, தான் , நம்மால் உணரமுடியும். மகதால மரியா எப்படி , காலியான கல்லறையை பற்றி உடனே இராய்ப்பரிடமும், யோவானிடமும் சொன்னாரோ, அப்படி நாமும் நம் அனுபவத்தை பற்றி சொல்லும்பொழுது, அவர்கள் கேட்டு, அது அப்படியே மற்றவர்களுக்கும் பரவும்.
சிறிது நேரத்தில், அவர்கள் மற்ற குழுவினருடன் இருந்த பொழுது, இயேசு அவர்கள் முன்னே தோன்றி, உயிர்த்தெழுந்ததை தெரிவித்தார், பிறகு, அவர்கள் இதனை பல நண்பர்களிடன் கூறிய பிறகு, பரிசுத்த ஆவியானவர், இவ்வுலகம் முழுதும் சென்று இன்னும் பலரை மணம் மாற செய்வதற்கான அதிகாரத்தை அளித்தார். அதன் மூலம் யாரெல்லாம் அவர்கள் சொல்வதை மனமுவந்து கேட்டார்களொ அவர்களுக்கெல்லாம் அவர்களின் அனுபவத்தை , நற்செய்தியை பகிர்ந்து கொண்டார்கள்.
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment