Friday, October 14, 2011

அக்டோபர் 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Is 45:1, 4-6
Ps 96:1, 3-5, 7-10
1 Thes 1:1-5b
Matt 22:15-21

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22
சீசருக்கு வரி செலுத்துதல்
(மாற் 12:13 - 17; லூக் 20:20 - 26)
15 பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, ' போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும் ' என்று அவர்கள் கேட்டார்கள்.18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, ' வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள் ' என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.20 இயேசு அவர்களிடம், ' இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ' என்று கேட்டார்.21 அவர்கள், ' சீசருடையவை ' என்றார்கள். அதற்கு அவர், ' ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.22 இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு "நீங்கள் வரி கொடுக்கும் பொற்காசினில் பொறிக்கப்பட்டுள்ள உருவம் யாருடையது" என்று கேட்கிறார். இதனை வைத்து உங்கள் இதயத்தில் ஒரு உருவத்தை செதுக்க நமக்கு போதனை செய்கிறார். நமது இதயம் கடவுளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ரோமானியர்கள் அவர்களுடைய அரசர்கள் தான் தெய்வம் என்று நினைத்திருந்தனர். அதனால், ரோமானியார்களின் பொற்காசுகளை வைத்திருந்தால், அவர்களின் மனித கடவுளை தாம் வைத்திருப்பதாக அவர்கள் நினைத்து கொண்டிருந்தனர். பரிசேயர்களுக்கு இயேசுவிடம் கேள்வி கேட்கும்போது, இந்த ரோமானியக் கடவுளை பத்தி தெரியும்.

சீசருக்கு வரி கொடுப்பது என்பது , அரசிற்கு வரி கொடுப்பதை விட அதற்கு மேல் பரிகாரமாக கொடுக்கிறோம் என்று நினைத்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சமயத்தோடு வரி கொடுப்பதை இனைத்திருந்தார்கள். அவர் யூதர்களுக்கு எதிராக பேசவேண்டும் என்றும், வேறு நாட்டின் அரசாங்கத்தையும், அதன் வரி கொடுமையையும் இயேசு மெசியாவாக விரட்டி அடிக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர்.
நாம் கடவுளின் மக்களாக இருந்தால், இயேசு தான் நம் இதயத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். பாவத்தின் அழிவிலுருந்து நம்மை மெசியாதான் காப்பாற்றினார். நமது பாவங்களினால் உண்டான அழ்விலிருந்து இயேசு நம்மை காப்பாற்ற நாம் அவருக்கு அனுமதி அளித்தோம்.
மற்றவர்கள் உங்களை பார்க்கும்பொழுது, இயேசுவை தான் உங்களில் அவர்கள் பார்க்கினறனரா? இயேசு உங்கள் இதயத்தில் பொறிக்கப்பட்டிருப்பதை பார்க்கிறார்களா? ஓரளவிற்கு இயேசுவை பார்ப்பார்கள், அதே அளவிற்கு நீங்கள் இறையரசோடு இணைந்து உள்ளீர்கள்!

© 2011 by Terry A. Modica

No comments: