Friday, August 31, 2012

செப்டம்பர், 2 , 2012 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை



செப்டம்பர், 2 , 2012 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு
Deut 4:1-2, 6-8
Ps 15:2-5
James 1:17-18, 21b-22, 27
Mark 7:1-8, 14-15, 21-23

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 7

மூதாதையர் மரபு
(மத் 15:1 - 20)
1 ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.2 அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.3 பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. 5 ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ' உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்? ' என்று கேட்டனர்.6 அதற்கு அவர், ' வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ' இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது.7மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண் ' என்று அவர் எழுதியுள்ளார்.8 நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.

14 இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ' நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.15வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.

21 ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை,22 தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.23தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன 'என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசு பரிசேயரை பார்த்து கண்டித்தார். பரிசேயர்கள் கடவுளை தனது உதட்டினால் மட்டும் தான் புகழ்கின்றனர் ஆனால் அவர்கள் இதயமோ கடவுளிடமிருந்து விலகியிருக்கிறது; அவர்கள் செய்யும் ஆராய்வில், அன்பில்லை, மேலும் யூத சட்டத்தின் படி, இயேசுவும் அவரது சீடர்களும் நடந்தார்களா? என்று பார்த்தார்களே தவிர அவர்கள் அன்புடன் இருந்தார்களா என்று பார்க்கவில்லை.
மனிதர்களைவிட சட்டம் தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்துடன் : "மற்றவர்களை விட அதிகம் தெரிந்தவன் தான் என்றும், நான் உன்னைவிட சிறந்தவன் என்றும், யூத சட்டங்களை ஒழுங்காக கடைபிடித்து, தான் தான் சரியானவன் " என்று கான்பிக்கின்றனர். சட்டங்களுக்கு கீழ்படிதல், அது தான் சரி என்று நினைப்பது, கபட வேடம் போடுவதாகும்சட்டங்களை உபயோகித்து, அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி மற்றவர்களை விட தான் மேலானவர் என்று காட்டுவதாகும். இன்றைய காலகட்டத்தில், சில குருவானவர்கள் பழைய முறையில் இருந்து சில மாற்றங்களை செய்து திருப்பலியை நடத்தினால், நம்மில் சிலர் குருவானவரை குறை கூறுகிறோம். ஆனால் அவரோ ரோமன் திருசட்ட வழிமுறைகளை கடைபிடித்து தான் திருப்பலியை நடத்துகிறார். இவ்வாறு நடக்கும்பொழுது, "வீனாக என்னை வழிபடுகிறார்கள்" என்று இயேசு சொல்கிறார். திருப்பலியின்  அர்த்தமே இல்லாமல் போகிவிடும்.

சட்ட திட்டங்களுக்கு ஒரு வரைமுறை உள்ளது. சில சட்டங்கள் சில நேரங்களில் மாற்றப்படுகிறது. கடவுளின் கட்டளைகளில்  முதன்மையான கட்டளை, அது மாறவே மாறாதது. எல்லோருமே  நாமெல்லாரையும் மோட்சத்திற்கு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.

கீழ்படிதல் இல்லாமால் நடக்கும் ஒரு காரியத்தை நாம் கண்டிப்பாக அதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். ஏனெனில், நாம் பாவம் செய்பவர்களின் ஆண்மீக வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர்கள் மேல் அக்கறை கொள்கிறோம். இதனை கருத்தில் கொண்டு, அவர்களின் கீழ்படியாமையை நாம் கவனத்தில் எடுத்துகொள்ளாமல் விட்டு விடலாம். அவர்களின் குறைகளில் உள்ள காரணத்தை முதலில் அறிந்து, அதனை போக்க நாம் முயற்சி செய்தால், அவர்களை இன்னும் பரிசுத்த வாழ்வில் நாம் அழைத்து செல்ல முடியும்.

இவ்வாறு செய்தால் தான்: "இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்." இவ்வாறு இரண்டாம் வாசகத்தில் கூறியிருப்பது போல, நாம் ஆவோம்சீடர்களின் பசியை அறிந்து கொள்ள பரிசேயர்களுக்கு தெரியவில்லை.
© 2012 by Terry A. Modica

Thursday, August 23, 2012

ஆகஸ்டு 26, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



ஆகஸ்டு 26, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு
Josh 24:1-2a, 15-18b
Ps 34:2-3, 16-21 (with 9a)
Eph 5:21-32
John 6:60-69


யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6


சீடர் முணு முணுத்தல்
60 அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, ' இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? ' என்று பேசிக் கொண்டனர்.61 இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், ' நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?62 அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?63 வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.64 அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை ' என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.65 மேலும் அவர், ' இதன் காரணமாகத்தான் ″ என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது ″ என்று உங்களுக்குக் கூறினேன் ' என்றார்.

பேதுருவின் அறிக்கை
66 அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.67 இயேசு பன்னிரு சீடரிடம், ' நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா? ' என்று கேட்டார்.68 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.69 நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் உண்மையான திருப்பணியை பற்றி அறிந்த பின்னர், அவரை கேட்டு, அவரை பின் சென்றவர்கள் பலர் உடனே அவரை விட்டு விலகியதை பார்க்கிறோம். அவர் போதனை செய்த விசயத்தை எப்படி அவர்கள் தவற விட்டார்கள்? "நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன" என்று இயேசு கூறுகின்றார். ஆனால் அவர்கள் சாதாரண வார்த்தையை தான் கேட்டனர், உள்ளர்த்ததை அவர்கள் புரிந்துகொள்ள வில்லை. அதனால் இயேசு கொடுத்த வாழ்வை அவர்கள் தவற விட்டுவிட்டார்கள். அந்த வாழ்வு: சந்தோசமான வாழ்வு, வெற்றியின் வாழ்வு, நித்திய வாழ்வு, மற்றும் குணமளிக்கும் வாழ்வு.


இயேசுவை புனிதமாகவோ, ஆண்மீகத்துடனும் அவர்கள் பார்க்கவில்லை. அவரை மனிதனாகவே பார்த்தனர், மெசியாவாக பார்க்கவில்லை, உடல் நோய்களை குணமளிப்பவராகவே பார்த்தனர், ஆண்மாவை குணமளீப்பவராக பார்க்கவில்லை. நமது பாவங்களிலிருந்து விடுதலை அளிப்பவராக பார்க்காமல், ரோமானியர்களிடமிருந்து விடுதலை அளிப்பவராக பார்த்தார்கள்.

அதனால் , அவர உடலையும், இரத்ததையும் (போன வார, ஞாயிறு நற்செய்தியில் வந்த வசணம்), உண்பது என்பது, ஏற்று கொள்ளக்கூடியதாக இல்லை. அதனால், இவ்வார்த்தைகளி அமிழ்ந்து போயிருக்கும், ஆவியும் அதன் வாழ்வையும் அவர்களால் அறிந்து கொள்ளவில்லை. அதனால் இயேசுவை பின் செல்வது என்பது மிகவும் நம்ப முடியாமல், கடினமான ஒன்றான செயலாக ஆனது.

உண்மையான சீடர்கள் - இன்னும் அதிகமாக இயேசுவிடமிருந்து கற்று கொள்ள காத்திருப்பவர்கள் - அவர்களும், இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை உண்மையாக அறிந்திருக்கவில்லை. ஆனால், அவரின் வார்த்தைகளில் தூய ஆவி இருந்ததை அறிந்து கொண்டார்கள்.

இயேசு எத்தனை முறை, மற்றவர்கள் மூலமாக உங்களிடம் வந்திருக்கிறார், ஆனால் அதனை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை? ஏனெனில், நீங்கள், தனி மனிதராக பார்த்தீர்கள், ஏனெனில், கிறிஸ்துவிற்கு மாறான அந்த மனிதனின் குனாதிசியங்களை பார்த்தீர்கள்.

ஒவ்வொரு மனிதனும் கடவுளை போன்றே படைக்கப்பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இவ்வாழ்வை கொடுக்காவிட்டால் எந்த மனிதனும் வாழமுடியாது. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடத்தில் கூட கிறிஸ்து இருக்கிறார். வெற்றியான வாழ்வு வாழ, நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனின் அடியிலும் இருக்கும் இயேசுவை நாம் காணவேண்டும்.
திருப்பலியில் இயேசுவின் ப்ரசன்னத்தை அறிந்து கொள்ள நீங்கள் சிரமபடுகிறீர்களாமற்றவர்கள் மூலம் வரும் இயேசுவை கண்டு கொள்ள பயிற்சி செய்து கொள்ளுங்கள். அதன் மூலம், திவ்ய நற்கருணையை புதிய வழியில் காண்பீர்கள்.
© 2012 by Terry A. Modica

Friday, August 17, 2012

ஆகஸ்டு 19, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை



ஆகஸ்டு 19, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டிம் 20ம் ஞாயிறு
Prov 9:1-6
Ps 34:2-7
Eph 5:15-20
John 6:51-58
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 6
மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ' 
(Thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், திவ்ய நற்கருணை கட்டளையை கேட்கிறோம்: " எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். " இவர் எந்த வாழ்வை குறித்து சொல்கிறார்? அவர் வாழ்வை வாழ்வதற்கும், நம் இப்பிறப்பின் வாழ்விற்கு என்ன வித்தியாசம்?

ஒவ்வொரு திருப்பலியிலும், இயேசு நமக்கு அவரது உடலையும் இரத்ததையும் முழுதுமாக தருகிறார். முழுதும், என்றால், மனிதனாகவும், தெய்வமாகவும் நம்மில் வருகிறார். அவரது அன்பினால் முழு ஊட்டம் பெற விரும்புகிறார். சோதனையை தாங்கிகொள்ள அவரிடமிருந்து ஆற்றலை பெற வேண்டும் என விரும்புகிறார். நமது காயங்களை ஆற்றிகொள்ள அவரிடமிருந்து குணப்படுத்தலை பெற விரும்புகிறார். அதற்கும் மேலாக அவரது முழு வாழ்வையே ,கொடுத்து, மோட்சம் செல்வதற்கும் மட்டும் அல்ல , இவ்வுலக வாழ்விலே முழு கிறிஸ்துவ வாழ்வை வாழ நமக்கு கொடுக்கிறார்.
இயேசுவை பெற்ற பின்பு நாமும் அவரை போல மாற வேண்டும். திவ்ய நற்கருணையில், இயேசு தான் முழு உடலோடும் இரத்தத்தோடும் இருக்கிறார் என்று நம்பினால், நாம் ஏன் ஒவ்வொரு திருப்பலியை விட்டு வெளியே செல்லும்பொழுது, நாம் கிறிஸ்துவை போல மாறி செல்வதில்லை. ?
திருப்பலியின் ஆரம்பத்தில் நடக்கும் மன்னிப்பு வார்த்தைபாட்டில் முழு மனதோடு பங்கு கொண்டு, ஒவ்வொரு திருப்பலி வாசகத்தையும் கவனத்தோடு கேட்டு, குருவோடு சேர்ந்து "உன்னை அடைய நான் தகுதியானவில்லை , ஆனா ஒரு வார்த்தை சொன்னால், என் ஆண்மா குணமடையும்" என்ற ஜெபத்தை சொல்லி, திவ்ய நற்கருணையை, பனிவோடும், ஆவலோடும்  நாம் பெற்று கொண்டேனால், நாம் அவரது இனைந்து ஒரே உடலாகவும், இரத்தமாகவும் ஆவோம்.

இப்போது, நாமும் அவரது உடலும் இரத்தமுமாக இவ்வுலகில் இருக்கிறோம், நம்மை மற்றவர்கள் பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம்கிறிஸ்துவின் உண்மையான ப்ரசன்னத்தை நம் மூலம் அவர்கள் பெற்று ஊட்டமடைய ஒரு வாய்ப்பினை கொடுப்பதாக இருக்கிறோம்.

அன்பை மற்றவர்களிடம் பகிரும்பொழுது, அவர்கள் கடவுளின் அன்பை பெறுகிறார்கள். அவர்கள் அந்த அன்பை திருப்பி கொடுக்காதபொழுது, நம்மை , நம் அன்பை அவர்கள் முழுதும் ஏற்று கொண்டுவிட்டார்கள்! நாம் பெற்றதை விட அதிகம் கொடுத்திருக்கிறோம். அதே போல, இறையரசிற்காக, நமது நேரத்தையும், திறமைகளையும் கொடுக்க்ம்பொழுது, அதற்கு எதிர்பலன் பாராது கொடுக்கும்பொழுது, நாம் திவ்ய நற்கருணையாகிறோம். நாம் இயேசுவோடு ஒரே உடலாக , இரத்தமாகிறோம்.

மற்றவர்கள் நமக்கு கொடுக்காததை, இயேசுவிடமிருந்து முழுதுமாக பெற்றால், நாம் இன்னும் பலருக்கு அவரை முழுமையாக கொடுக்க முடியும். அதனால் தான், ஒவ்வொரு திருப்பலியிலும், நற்கருணை பெறுவது நமக்கு முழு ஊட்டமாக இருக்கிறது. அதுவே நம் வாழ்வின் ஊற்றாகவும் , ஆதாரமாகவும் இருக்க வேண்டும்.

© 2012 by Terry A. Modica