செப்டம்பர்,
2 , 2012 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின்
22ம் ஞாயிறு
Deut 4:1-2, 6-8
Ps 15:2-5
James 1:17-18, 21b-22, 27
Mark 7:1-8, 14-15, 21-23
Ps 15:2-5
James 1:17-18, 21b-22, 27
Mark 7:1-8, 14-15, 21-23
மாற்கு நற்செய்தி
|
மூதாதையர் மரபு
(மத் 15:1 - 20)
(மத் 15:1 - 20)
1 ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர்
சிலரும் அவரிடம் வந்து கூடினர்.2 அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது,
கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.3 பரிசேயரும், ஏன் யூதர்
அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;4 சந்தையிலிருந்து
வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக்
கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
5 ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ' உம் சீடர்
மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்? ' என்று கேட்டனர்.6 அதற்கு
அவர், ' வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார்.
' இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு
தொலையில் இருக்கிறது.7மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர்.
இவர்கள் என்னை வழிபடுவது வீண் ' என்று அவர் எழுதியுள்ளார்.8 நீங்கள்
கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள் ' என்று அவர்களிடம்
கூறினார்.
14 இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும்
தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ' நான் சொல்வதை அனைவரும் கேட்டுப்
புரிந்து கொள்ளுங்கள்.15வெளியேயிருந்து மனிதருக்குள்ளே
சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து
வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.
21 ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே
பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை,22 தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு,
மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.23தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத்
தீட்டுப் படுத்துகின்றன 'என்றார்.
(thanks to
www.arulvakku.com)
இன்றைய
ஞாயிறின் நற்செய்தியில், இயேசு பரிசேயரை பார்த்து
கண்டித்தார். பரிசேயர்கள் கடவுளை தனது உதட்டினால்
மட்டும் தான் புகழ்கின்றனர் ஆனால்
அவர்கள் இதயமோ கடவுளிடமிருந்து விலகியிருக்கிறது;
அவர்கள் செய்யும் ஆராய்வில், அன்பில்லை, மேலும் யூத சட்டத்தின்
படி, இயேசுவும் அவரது சீடர்களும் நடந்தார்களா?
என்று பார்த்தார்களே தவிர அவர்கள் அன்புடன்
இருந்தார்களா என்று பார்க்கவில்லை.
மனிதர்களைவிட
சட்டம் தான் அவர்களுக்கு முக்கியமானதாக
இருந்தது. தனக்கு தான் எல்லாம்
தெரியும் என்ற எண்ணத்துடன் : "மற்றவர்களை
விட அதிகம் தெரிந்தவன் தான்
என்றும், நான் உன்னைவிட சிறந்தவன்
என்றும், யூத சட்டங்களை ஒழுங்காக
கடைபிடித்து, தான் தான் சரியானவன்
" என்று கான்பிக்கின்றனர். சட்டங்களுக்கு கீழ்படிதல், அது தான் சரி
என்று நினைப்பது, கபட வேடம் போடுவதாகும். சட்டங்களை
உபயோகித்து, அதனை ஒரு வாய்ப்பாக
பயன்படுத்தி மற்றவர்களை விட தான் மேலானவர்
என்று காட்டுவதாகும். இன்றைய காலகட்டத்தில், சில
குருவானவர்கள் பழைய முறையில் இருந்து
சில மாற்றங்களை செய்து திருப்பலியை நடத்தினால்,
நம்மில் சிலர் குருவானவரை குறை
கூறுகிறோம். ஆனால் அவரோ ரோமன்
திருசட்ட வழிமுறைகளை கடைபிடித்து தான் திருப்பலியை நடத்துகிறார்.
இவ்வாறு நடக்கும்பொழுது, "வீனாக என்னை வழிபடுகிறார்கள்"
என்று இயேசு சொல்கிறார். திருப்பலியின் அர்த்தமே
இல்லாமல் போகிவிடும்.
சட்ட திட்டங்களுக்கு ஒரு வரைமுறை உள்ளது.
சில சட்டங்கள் சில நேரங்களில் மாற்றப்படுகிறது.
கடவுளின் கட்டளைகளில் முதன்மையான
கட்டளை, அது மாறவே மாறாதது.
எல்லோருமே நாமெல்லாரையும்
மோட்சத்திற்கு செல்ல உறுதுணையாக இருக்க
வேண்டும்.
கீழ்படிதல்
இல்லாமால் நடக்கும் ஒரு காரியத்தை நாம்
கண்டிப்பாக அதனை எதிர்த்து குரல்
கொடுக்க வேண்டும். ஏனெனில், நாம் பாவம் செய்பவர்களின்
ஆண்மீக வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர்கள் மேல்
அக்கறை கொள்கிறோம். இதனை கருத்தில் கொண்டு,
அவர்களின் கீழ்படியாமையை நாம் கவனத்தில் எடுத்துகொள்ளாமல்
விட்டு விடலாம். அவர்களின் குறைகளில் உள்ள காரணத்தை முதலில்
அறிந்து, அதனை போக்க நாம்
முயற்சி செய்தால், அவர்களை இன்னும் பரிசுத்த
வாழ்வில் நாம் அழைத்து செல்ல
முடியும்.
இவ்வாறு
செய்தால் தான்: "இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை
ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்."
இவ்வாறு இரண்டாம் வாசகத்தில் கூறியிருப்பது போல, நாம் ஆவோம். சீடர்களின்
பசியை அறிந்து கொள்ள பரிசேயர்களுக்கு
தெரியவில்லை.
© 2012 by Terry A. Modica
No comments:
Post a Comment