செப்டம்பர் 29, 2013
ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Amos 6:1a, 4-7
Psalm 146:(1b) 7-10
1 Timothy 6:11-16
Luke 16:19-31
Psalm 146:(1b) 7-10
1 Timothy 6:11-16
Luke 16:19-31
செல்வரும் இலாசரும்
19 '
செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து
நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.20 இலாசர் என்னும் பெயர் கொண்ட
ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர்
அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.21 அவர் செல்வருடைய
மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர்
புண்களை நக்கும்.22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில்
கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.23 அவர்
பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது
மடியில் இலாசரையும் கண்டார்.24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்;
இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை
அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று
உரக்கக் கூறினார்.25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே
பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள்.
இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.26 அன்றியும்
எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து
ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள்
எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார்.27 ' அவர், ' அப்படியானால்
தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.28எனக்கு
ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர்
அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார்.29அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும்
அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார்.30 அவர், '
அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம்
மாறுவார்கள் ' என்றார்.31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும்
செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப
மாட்டார்கள் ' என்றார். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில்,
பணக்காரனின், பாவம் என்ன? அவன் இறப்பிற்கு பிறகு எதனால் அவன் வேதனை அடைந்தான்?
செல்வம் மிகுந்தவனாக அவன் இருந்ததாலா? அவனது ஆண்மாவை துன்புறுத்த செய்தது எது
என்றால், அவனின் செல்வத்தை லாசருடன் பங்கிட்டு கொள்ளாதது தான் (அவனுக்கு வாய்ப்பு
இருந்தும்).
மரணம் வாழ்வின் முடிவு
அல்ல; நமது ஆண்மாவை திறந்து, அதனால், நாம் முழுவதும் கடவுளின் அன்பில் வாழலாம்.
மரணத்தின் மூலம், கடவுளை யார் என்று முழுமையாக நம்மால் அறிய முடியும். அவர் கொடுத்த
திறமைகளை, அன்பளிப்பை எந்த அளவிற்கு நாம் உபயோகபடுத்தியிருக்கிறோம் என்று நம்மால்
அப்பொழுது அறிய முடியும்.
நமக்கு கிடைத்த
செல்வத்தை, நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோமோ, நாம் கடவுளின் இறையரசில்
முதலீடு செய்கிறோம். கடவுளின் பொருளாதார கொள்கையில், நம் முதலீடுகள் பல மடங்கு
திருப்பி தரப்படும். நாம் கொடுத்ததை விட பல மடங்கு திருப்பி பெறுவோம். அதன் மூலம்
இன்னும் அதிகம் நம்மால், பகிர்ந்து கொள்ள முடியும்.
இதற்கு மாறாக, நாம் நமது
செல்வத்தை நம்மிலே வைத்து கொண்டு பாது காத்தால், மலர்கள் கருப்பு பெட்டிக்குள்
வைத்து இருப்பது போன்று, அது வாடிய நிலையில் இருப்பது போன்று நமது செல்வமும்
ஆகிவிடும். இருட்டு அறையில் மலர்களால் வளரவோ , ப்ரகாசிக்கவோ முடியாது.
எதையெல்லாம், நாம் பாதுகாக்க செய்கிறோமோ, அதுவெல்லாம் உபயோகமில்லாமல் ஆகிவிடும்.
சில நேரங்களில், கெட்டு போய் விஷமாகிவிட கூடும்; பரிசுத்த வாழ்விலும், நம்
உணர்விலும், அப்படியே தேங்கி நின்றுவிடுவோம். எல்லா செல்வங்களும்,
வீணாகிபோய்விடும். நம் சுயனலத்தினால், கடவுளோடு உள்ள உறவு கெட்டுவிடும். அவர்
தான், தாராள மனத்தின் அரசராவார்.
ஒவ்வொரு
நாளும், நாம் பகிர்ந்து கொள்ள பல வாய்ப்புகள் உள்ளன. – கடவுளிடமிருந்து வந்த
ஆசிர்வாதம் – நாம் மற்றவர்களுக்கு தரவேண்டியவையாக கூட இருக்கலாம். இன்றைய
நற்செய்தியில் வரும் கதையில் கூட, செல்வந்தார் இலாசரிடம் இருந்து ஒதுங்குவதற்கு,
இலாசரின் நோயும் ஒரு காரணமாக இருந்தது. அவர் உடலெங்கும் புண்கள் ஆக இருந்ததால்,
அவர் தொழு நோயால் பாதிக்கபட்டிருக்கலாம் என்று அனுமானித்து விடுகிறோம்.
இதன் மூலம் ஒரு கேள்வி
எழுகிறது: அவர்களை பார்த்து ஒரு வித அசிங்கமான உணர்வினால், நாம் அவர்களிடம்
மிகவும் குறைவாக கொடுக்கிறோமோ? அல்லது அச்சம் தான் நம்மை ஒதுங்க வைக்கிறதோ? அல்லது
ஒரு வித மன்னிக்க முடியாத கோபத்தினால் நாம் நம்மிடம் உள்ளதை கொடுப்பதில்லையா?
கடவுளோடு இனைந்து, நிரந்தரமான மகிழ்ச்சியை அனுபவிக்க, இந்த மாதிரியான பகிர்தல்
இல்லாத வாழ்வு இடம் கொடுக்காது. நம்மில் அன்பு தான் முதன்மை இடத்தை பிடித்து, அதன்
மூலம் ஊக்குவிக்கபட்டு, அன்பினால் எல்லா காரியங்களையும் செய்தல் வேண்டும்.
அன்பிற்கு எல்லை இல்லை. அன்பு எப்பொழுதுமே தாராள குணத்தையே கொடுக்கும்.
இரண்டாவது வாசகத்தில், “விசுவாச
வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு” என்று சொல்வதை நாம் கேட்கிறோம்.
யாரோடு போராடுவது? நம்மோடு! நேற்றைய விட, இன்று இன்னும் பரிசுத்தமாக இருக்கிறோமோ?
தாராள குணம் இன்னும் வளர்ந்திருக்கிறதா? பரிசுத்த வாழ்வில் இன்னும் சக்தியோடு,
ஆற்றலுடன் இருக்கிறீர்களா? உங்கள் கடின உழைப்பினால், இன்னும் அதிகம் அன்பு
செலுத்துபவர்களாகவும், தாராளாமாக கொடுப்பதிலும் தயாராய் இருக்கிறீர்களா?
© 2013 by Terry A.
Modica