Friday, September 20, 2013

செப்டம்பர் 23, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


செப்டம்பர் 23, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Amos 8:4-7
Psalm 113:1-2, 4-8
1 Timothy 2:1-8
Luke 16:1-13

லூக்கா நற்செய்தி,
அதிகாரம் 16:1-13
முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்
1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார்.3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார்.6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார்.7 பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார்.http://www.arulvakku.com/images/footnote.jpg8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.10மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. ' 
(thanks to www.arulvakku.com)

பல புனிதர்கள் எடுத்துகாட்டாக வாழ்ந்த ஏழ்மையின் வாழ்வு வாழ்வது மட்டும் புனித வாழ்விற்கான பாதை அல்ல. இன்றைய நற்செய்தியில், செல்வமிகுந்த வாழ்விலும் நாம் பரிசுத்த வாழ்வு வாழமுடியும் என்று  நமக்கு அறிவுறுத்துகிறது.

நம் சொத்துகள் எல்லாம் கடவுள் கொடுத்தது என்று, நாம் அங்கீகரித்து, அதெல்லாம், கடவுளின் அரசிற்காக உபயோகப்படவேண்டும் நாம் நினைத்து அதனை செயல்படுத்தினால், நாம் பரிசுத்தமானவர்கள். ஆனால், நாம் , பணத்தோடும், இவ்வுலக செல்வங்களோடும் ஒட்டி, நம் பயன் களுக்காக மட்டும், அதனை பயன்படுத்தினால், நாம் கடவுளை விட்டு பிரிந்து விடுகிறோம். ஏனெனில், கடவுளின் நற்செய்தி, நம் செல்வங்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்காக , நாம் பெற்று கொண்ட அனைத்தும், பகிர்ந்து கொள்ளபட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

நாம்  நம்மிடம் உள்ள சொத்துகளை பகிர்ந்து கொடுப்பதை விட்டு விட்டு, இன்னும் சொத்து சேர்க்க நாம் ஆசைபட்டோமானால், கடவுள் நம் தலைவர் இல்லை. இது நமது சொத்துக்களை மட்டும் குறிப்பதில்லை.  நம்மிடம் உள்ள ஆற்றல்கள், திறமைகள், அனைத்து, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளபடவேண்டும்.

நாமெல்லாம் ஏதோ ஒரு வகையில், பல ஆற்றல்களோடும், திறமைகளோடும், ஆசிர்வதிக்கபட்டிருக்கோம். மற்றவர்களின் நலனுக்காக, நம் ஆற்றல் , திறமை எது தயாராக இருக்கிறது? இயேசு இன்றைய நற்செய்தியில், அனியாயமாக வந்த சொத்து, எதுவும், மற்றவர்களுக்கு சொந்தமானது. என்று சொல்கிறார். மற்றவர்களின் பொருளை நாம் உபயோகிக்கும் பொழுது, நம் சொந்த நலன்களூக்காக உபயோகிக்கும் பொழுது, நாம் கடவுளின் தொண்டர்க்ளாக இல்லை, ஆனால், அதனையும் கடவுளுக்காக செய்தால், நாம் அவரின் காவற்படை வீரன் போல ஆவோம்.

அதேபோல, நம் நேரம் மற்றவர்களுக்கு தேவைபடும்பொழுது, அந்த  நேரத்தில், நாம் நம் சொந்த வேலைகள் செய்தாலும், நாம் இறையரசிற்கு விசுவாசமானவர்கள் அல்ல். இயேசு உங்கள் மூலம் மற்றவர்களை ஆசிர்வதிக்கிறார். அவரின் அன்பளிப்புகளை பகிர்ந்தளிக்க உங்களை அழைக்கிறார். இம்மாதிரியான கடவுளின் பொருளாதார கொள்கைகளை நாம் நிராகரித்தால், “உங்களுக்கு தேவையானதை யார் தருவார்? “ என்று இயேசு கேட்கிறார்.

நமக்கு சொந்தமானது எது? நாம் விசுவாசமில்லாமல் இருந்தால், கடவுளின் தொண்டனாக இல்லாவிடில், நம்மில் உள்ள பெரும் சொத்துகள், இறையரசிற்கான அனைத்தும், நம்மிடமே தங்கிவிடும். பரிசுத்த ஆவியின் செல்வம்; கடவுளின் புகழ், அவரின் முழுமையான அன்பும் நம்மிடமே தங்கிவிடும். இன்னும் பலவும்.

செல்வத்துடன், பரிசுத்த வாழ்வு வாழ்வதற்கு, மற்றவர்கள் மேல் அன்புடன், நம் அன்பை நம்பிக்கையுடன் பகிர்ந்து, கடவுளின் அன்பு மற்றவர்கள் நம் மூலம் பெற உழைத்திடல் வேண்டும். நாம் இவ்வுலக சொத்துக்களை பகிர்ந்தும், இறையரசின் செல்வமான (விசுவாசம், ஞாணம்,  நம்பிக்கை, இன்னும் பல) அதனையும் பகிர்ந்து, நம் நம்பிக்கையின் ஆர்வம் நம்மில் கண்டு கொள்ளலாம்.
© 2013 by Terry A. Modica


No comments: