டிசம்பர் 22, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால 4ம் ஞாயிறு
Isaiah 7:10-14
Psalm 24:1-6 (with 7c & 10b)
Romans 1:1-7
Matthew 1:18-24
Psalm 24:1-6 (with 7c & 10b)
Romans 1:1-7
Matthew 1:18-24
மத்தேயு
நற்செய்தி
18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய
நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம்
செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய
வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்.
அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக்
கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச
வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய
பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். 22 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப்
பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர்
உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 23இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.24 யோசேப்பு தூக்கத்திலிருந்து
விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
(thanks to www.arulvakku.com)
திருவருகை கால நான்காவது ஞாயிறின்
முக்கிய நோக்கம்/கருத்து அன்பு தான். அன்பின் விளக்கமான கருத்து என்ன என்று முதல்
வாசகத்தில் நாம் பார்க்கலாம். பைபிளில் ஆருடம் கூறியதை நடந்துள்ளது”: இம்மானுவேல்
என்றால், “கடவுள் நம்மோடு” . அன்புடன் இருப்பது என்பது “கடவுள் நம்மோடு “ இருப்பது
என்பதாகும். அன்பினை கொடுப்பது என்பது கடவுள் நாம் நம்மோடு இருப்பவர்களுக்கு
கொடுப்பது.
மற்றவர்களை அன்பு செய்ய உங்களால் முடியவில்லை என்று என்றாவது நீங்கள் நினைத்தது உண்டா? அது மாதிரி நாம் இருக்க முடியாது. நாம் சில நேரங்களில் பொறுமை இழ்ந்து விடுவோம். மற்றவர்களிடம் இருந்து வரும் அன்பை விட நாம் அதிகம் கொடுக்கும் அன்பினால் நாம் சோர்வடைந்து விடுகிறோம். அன்பே உருவான கடவுள் நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார்.
நாம் எவ்வளவு
தான் அன்பு செய்தாலும், மற்றவர்கள் அதற்கு பதிலாக நம்மிடம் அன்பு செலுத்தாமல்
நம்மை நின்த்தித்தால், நாம் வெறுமையா நம் மனதில் எண்ணுவோம் . இது மாதிரியான
நேரத்தில், நாம் கடவுளின் அன்பை நாம் கேட்டு அதன் முலம் நாம் அன்பு செய்ய
வேண்டும். இது மாதிரியான வேண்டுதல் கண்டிப்பாக பலன் கொடுக்கும். இப்படிதான் நாம்
கடவுளின் அன்பை பகிரும் இவாஞ்சளைசர் நாம் மாற முடியும்.
யாரெல்லாம்
அன்பு செய்ய முடியாமல் இருக்கிறார்களோ , அவர்களிடம் நாம் அன்பு செய்தால், நம்மில்
உள்ள கடவுளை நாம் அவர்களுக்கு தெரியபடுத்துகிறோம்.
நம்மில் பலர்
கிறிஸ்துவாக நம்மிடம் இருப்பதில்லை. கடவுள் அவர்களிடம் கேட்டுள்ளது போல நாம் அவர்கள்
நம்மை அன்பு செய்யாமல் இருக்கலாம். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன
என்றால், மற்றவர்களை சார்ந்து நாம் இருக்க வேண்டியதில்லை. கடவுள் நம்மோடு. அவரை
தான் நாம் நாட வேண்டும். நம்மோடு இருக்கும் கடவுள் , நம்மை முழுவதுமாக அன்பு
செய்கிறார். நிபந்தனையின்றி நம்மை கடவுள் அன்பு செய்கிறார். நாம் அதற்கு
தகுதியானவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அன்பு செய்து கொண்டிருக்கிறார்.
மற்றவர்கள் நம்மை
அதிகம் அன்பு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாம் இருந்தோமானால், நாம்
அவர்கள் அன்பு செய்யவில்லை என்று தான் எண்ணுவோம். ஆனால் இயேசுவின் மேல் நாம்
கண்களை திருப்பினால், அவர் எங்கெல்லாம் வெற்றிடம் உள்ளதோ அங்கே இயேசுவின் அன்பால்
முழுதும் நிறைத்துவிடுவர்.
இம்மானுவேல், கடவுள்
நம்மோடு என்று எல்லா காலமும் நாம் அதன் நினைப்பிலே இருத்தல் வேண்டும.
இம்மானுவேல்,
அது தான் நமக்கு சின்னம். அதனை கடவுள் நாம் ஒவ்வொருவருக்கும் இந்த கிறிஸ்துமஸ்
அன்பளிப்பாக நமக்கு தருகிறார்.
© 2013 by Terry A. Modica
No comments:
Post a Comment