Friday, January 24, 2014

ஜனவரி 26 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி    26 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Isaiah 8:23--9:3
Ps 27:1, 4, 13-14
1 Corinthians 1:10-13, 17
Matthew 4:12-23

மத்தேயு நற்செய்தி

இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(
மாற் 1:14 - 15; லூக் 4:14 - 15)
12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:15 ' செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!16காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. '17அதுமுதல் இயேசு, ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

முதல் சீடர்களை அழைத்தல்
(
மாற் 1:15 - 20; லூக் 5:1 - 11)
18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.19 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்றார்.20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.21அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.22உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(
மாற் 3:7 - 12;லூக் 6:17 - 19)
23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
(thanks to www.arulvakku.com)
உங்களை யார் தொந்தரவு செய்கிறது? இன்றைய நற்செய்தியில், எசாயா கொடுத்த வாக்கு நிறைவேறியதை முதல் வாசகத்தில் பார்க்கிறோம். இருளில் வாழ்ந்த மக்கள், இயேசுவின் மூலம் ஒளியை பார்த்தார்கள், அதன் மூலம் அவர்கள் குணமடைவார்கள் என்று அறிந்தார்கள். பாவ வாழ்வினால், உண்டான, துக்க  பிடையான வாழ்வை துடைத்து எரிய யார் எந்த முயற்சியும் அடைவதில்லை.?  சாத்தானின் இறப்பையும், அழித்தலையும் தன்னுள்ளே வைத்து கொள்பவர்கள் யார்? யாருடைய பிடிவாதம் உங்களை வேதனை படுத்துகிறது?
உங்கள் ஜெபத்தினாலும், விசுவாசமான அன்பினாலும், இயேசுவை அவர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்த உண்மையை எதிர்த்து, அவர்கள் சண்டையிட்டாலும், இயேசுவிடமிருந்து அவர்கள் மறைந்து இருந்தாலும், கிறிஸ்துவின் மிக பெரிய வெள்ளமென உள்ள ஒளியை யாரும் மறைக்க முடியாது. மிக விரைவில், இந்த ஒளி சந்தோசத்தை கொடுக்கும், உங்களுக்கு மட்டுமல்ல, யாரையெல்லாம், மீட்க வேண்டுமோ அவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

லூக்கா நற்செய்தியில் (12:49-50), இயேசு இருளில் வாழும் மக்களை பற்றி கூறுகிறார்: “அது நிறைவேறுமளவும், நான் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்”. இதன் மூலம் உங்கள் வேதனையை அவர் அறிகிறார் , அவரும் அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார். இன்னும் ஈடுபாட்டுடனும், மிகவும் ஆர்வத்துடன் உங்கள் வேதனையில் பங்கு கொள்கிறார். நீங்கள் அறிந்ததை விட, அவர் இன்னும் அதிகமாகவே செய்து கொண்டிருக்கிறார். எந்த வெற்றிக்காக வேண்டிகொள்கிறிர்களோ அதற்காக , அதனைசெய்து முடிக்க  எல்லா வகையிலும் – முடியாத காரியாமாக இருந்தாலும் – அதனை முழுமையுடன் செய்ய அயராமல் உழைத்து கொண்டிருக்கிறார்.
ஒவ்வொருவரின் கலகம் செய்யும் தன்மைகள், இறைவனிடம் வராமல் இருப்பதற்கான குணங்கள், அனைத்தும், உடைந்து போக, இறைவனின் அருளால், அவர்கள் கடவுளிடம் நெருங்க நாம் ஜெபிக்க வேண்டும். கடவுள் மற்றவர்கள் மூலம் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர இறைவனிடம் நாம் வேண்டுவோம். அவர்கள் ஒளி பெற வேண்டுவோம் , கடவுள் அவர் வழியில் (இந்த வழி நாம் நினைக்கும் வழியாக இருக்காது) அவர்களின் கடினமான மறுப்பு கொள்கையை உடைத்தேரிக்க இறைவனிடம் நாம் ஜெபிப்போம். மனம் திரும்பியவுடன், அவர்கள் கிறிஸ்துவின் ஒளியை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல ஜெபிப்போம். அவர்கள் மனம் திரும்புதல், உறுதியான , என்றென்றும் நிலைத்திருக்கும் , ஆழமான மண மாற்றமாக இருக்க வேண்டும் என ஜெபிப்போம்.
நாம் கடவுளின் மனதை மாற்ற ஜெபிக்க வேண்டியதில்லை; அவர் ஏற்கனவே, கிறிஸ்துவின் ஒளியை இருளில் வாழ்வபவர்களுக்கு கொண்டு உழைத்து கொண்டிருக்கிறார். நாம் அவர்களை கடவுளின் கைகளுக்கு கொண்டு செல்ல ஜெபிப்போம். ஏனெனில், அதனை அவர்களாகவே செய்வதில்லை.
© 2014 by Terry A. Modica



No comments: