Friday, May 29, 2015

மே 31 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 31 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மூவொரு கடவுள்

Deut 4:32-34, 39-40
Ps 33:4-6, 9, 18-20, 22 (with 12b)
Rom 8:14-17
Matt 28:16-20


மத்தேயு நற்செய்தி

இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(
மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)

16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.18இயேசு அவர்களை அணுகி,' விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் 'என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)


மூவொரு கடவுளுக்கு நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள்!

நீங்கள் கடவுளுக்கு முக்கியமானவர்கள். நீங்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள் . – தந்தை மகன் தூய ஆவி அனைவருக்கும் சொந்தமானவர்கள்.

தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு நீங்கள் பெற, முக்கியமான காரணம் . இருக்கிறது , மூவொரு கடவுளும் ஒன்றாகவும் , தனி தனியேயும் உங்களோடு தொடர்பு வைத்து கொள்ள விரும்புகிறார்கள். உண்மையான நட்பை உங்களோடு தொடர விரும்புகிறார்கள்.

மூவொரு கடவுளின் ஒவ்வொருவரிடமும் , தனி தனியே அன்பினால் ஆனா நட்புடன் நீங்கள் இருக்கிறிர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ? தந்தை கடவுளோடும், இயேசு மிட்பாரோடும், பரிசுத்த ஆவியின் கடவுளோடும் தனியே அமர்ந்து , அவர்களுடன் பேசி இருக்கிறிர்களா? உங்களுக்கு துன்பம் ஏற்படும் போது , தந்தை மடியில் அமர்ந்து , அவரின் ஆறுதலை பெற்று இருக்கிறிர்களா ? சோதனைகளை எதிர் கொள்ளும் பொழுது , இயேசுவின் ஆற்றல் உங்களிடம் வருவதை உணர்ந்து இருக்கிறிர்களா? கவலையுடன் இருக்கும்போதோ, கலக்கத்துடன் இருக்கும்போதோ , உறுதியான விசுவாசம் இல்லாமல் இருக்கும்போதோ , பரிசுத்த ஆவியின் அறிவுரையை கேட்டு இருக்கிறிர்களா ?


இயேசுவின் தந்தையும் , நம் சொந்த தந்தை, “அப்பா" ( யூத வார்த்தையில் தந்தைக்கு அப்பா என்று பெயர்) , தந்தை ஒன்றும், உங்களுக்கு தண்டனை கொடுக்கும் .அதிகாரம் படைத்தவர் என்று நினைத்து கொண்டு இருக்கிறிர்களா ? உங்கள் திருமுழுக்கு அன்று தந்தை கடவுள் உங்களை தத்து எடுத்து கொண்டார். ஏனெனில், அவர் தந்தையாக நமக்கு தேவையானதை கொடுக்கிறார்.

பரிசுத்த ஆவி நமக்கு தேவையானதை கொடுப்பதாக உறுதி அளிக்கிறார். கடவுளின் ஆவி நம்மை ஆறுதல் படுத்தி, நம் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் , நம் வாழ்வில் முழு அன்புடனும், சந்தோசத்துடனும் வாழ அனைத்தையும் பெற நமக்கு ஆலோசனை வழங்குகிறார். அந்த அன்பில் தான், இயேசு நமக்காக தியாகம் செய்தார். அதனால், நமக்கு கிடைக்க வேண்டிய பாவத்தின் தண்டனைஇலிருந்து விடுபட்டு இருக்கிறோம். அதன் மூலம் பரிசுத்த ஆவியின் உதவியோடு நாம் பரிசுத்த வாழ்வோம்

கடவுள் மூவொரு விதமாக நமக்கு இருக்கிறார். உதவி செய்பவராக, குணப்படுத்துவராக, நம்மை ஆற்றல் கொண்டவராக , விசுவாசத்தை உறுதி ஆக்குபவராக இருக்கிறார். அவரது தெயவிகத்தில் முழுதும் இருக்க நம்மை அழைக்கிறார். அவரிடமிருந்து எல்லாவற்றையும் பெற்று அதன் முலம் பயன் பெற வேண்டும் மென விரும்புகிறார்
திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவனாக, புனிதமான கத்தோலிக்கர்களாக, நாம் கடவுளின் பிரசன்னம் நம்மோடு திவ்ய நற்கருணையில் இருக்கும் கடவுளோடு நாம் என்றும் இருக்கிறோம். அதனால், நம்மில் எதுவும் குறையில்லை.



© 2015 by Terry A. Modica

Thursday, May 21, 2015

மே 24 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 24 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

தூய ஆவியின் ஞாயிறு

Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15

யோவான் நற்செய்தி

.26தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.27நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

12' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.

(thanks to www.arulvakku.com)

நமது வாழ்வை முழுமையாக பரிசுத்த வாழ்வில் எழுந்தருள்வோம்

கிறிஸ்துவின் பரிசுத்த ஆவி நமக்கு தாராளமாக கொடுக்கபட்டிருக்கிறது , அதன் முலம் நாம் பரிசுத்த வாழ்வில் நிலைத்து , கிறிஸ்து தொடங்கிய இறைபணியை தொடரலாம். நாமாகவே இயேசுவை போல இருக்க முடியாது, நம்மில் இருக்கும் பரிசுத்த ஆவியினால் தான் , நாம் கிறிஸ்துவை போல மாற முடியும், அதன் மூலம், கிரிசுதுவின் பரிசுத்தம், விசுவாசம், அளவு கடந்த அன்பு , அமைதி , நம்பிக்கை , விடாமுயற்சி, மேலும் நாம் இயேசுவில் காணும் அனைத்தும் நம்மிடமும் இருக்கும்.


உங்கள் ஞானஸ் நாணத்தின் பொது, நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்று கொண்டீர்கள். அதன் தொடர்ச்சியாக உறுதி பூசுதலில் , நம்மில் பரிசுத்த ஆவி இருப்பதை உறுதி செய்ய .படுகிறது . பெந்தகொஸ்தே நாளிலிருந்து , தூய ஆவியானவர் வர ஆரம்பித்த பிறகு , கடவுள், இவ்வுலகை , அவரது இறையரசிற்கு பணி புரிபவர்கள் மூலம் மாற்றி கொண்டிருக்கிறார். அவர் தாராளமாக அவரின் ஆவியை வழங்கி, அதன் மூலம் , அவர் நம்மிடம் என்ன செய்ய சொல்கிறாரோ அதனை வெற்றியுடன் செய்து முடிக்க ஆவியால் முடியும். ஆனால் , அந்த ஆவியானவர் எந்த அளவிற்கு ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறார் என்பது நம்மை பொருது இருக்கிறது.

பரிசுத்த ஆவியின் இந்த ஜெபத்தில் என்னோடு இணைந்து ஜெபியுங்கள்.
அன்பு ஏசுவே; உமது தூய ஆவியை முழுதுமாய் என்னிடம் நிரப்பும், உமது பரிசுத்த சக்தியோடு நான் வாழ உதவி அருளும். உம்மை பற்றிய உண்மையை அறிந்து கொள்ள உதவி அருளும். உமது உண்மைய ஏற்று கொள்ள , எமது இருதயத்தை திறந்தருளும் (அதனை புரிந்து கொள்ளும் முன்பே )

பரிசுத்த ஆவியே, இறையரசை பற்றி நான் இன்னும் தெரிந்து கொள்ள உதவும். மற்ற எல்லா வற்றையும் விட, கடவுளின் அரசை நான் தேடி தெரிந்து கொள்ள உதவி அருளும். உனக்கு தேவியில்லாது எதுவோ அது என்னிடம் இருந்தால் அதனை அறிந்து கொண்டு, அதனை என்னிடமிருந்து துரத்த உதவி யருளும். அதற்கான சக்தியை எனக்கு கொடும். எனக்கு நி மட்டுமே வேண்டும்.

பரிசுத்த ஆவியே எனது பாவங்களை நான் அங்கீகரித்து, உண்மையாகவே அது ஏற்படுத்தும் அழிவுகளை நினைத்து மனம் வருந்த எனக்கு உதவி அருளும். எனது மன்னிப்பு கோரும் துக்க நிலையில் என்னை தேற்றி அருளும். பரிசுத்த ஆவியில் வாழ்வதால் ஏற்படும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்தருளும். மேலும், இந்த கருணையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க எனக்கு உதவி செய்தருளும்

இயேசு " உலகம் அனைத்தும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் " என்று நமக்கு கட்டளை இட்டுள்ளார். என்னில் உள்ள திறமையையும், ஆற்றலையும், உபயோகித்து இவ்வுலகில் மாற்றம் கொண்டுவர உதவி அருளும். என்னுள்ளே , நான் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது , என்று ஒரு செயல் திட்டம் உள்ளது. நான் இப்போது உன்னிடம் சரணடைகிறேன் என் எண்ணம் செயல்கள் அனைத்து உன்னிடம் வைக்கிறேன். உமக்கு உபயோகமாக இருக்க ஆசைபடுகிறேன். நீங்கள் என்னை எங்கே அழைத்து செல்கிறீர்களோ அங்கே செல்ல ஆசைபடுகிறேன். நீங்கள் என்னை அழைத்து செல்லுங்கள், பரிசுத்த ஆவியே எனக்குள் எல்லா அருளையும் , ஆற்றலையும் கொடுத்து இயேசுவின்வெற்றியின் அன்பை இவ்வுலகம் எங்கும் பரப்பிட எனக்கு வரம் தாரும்.

© 2015 by Terry A. Modica


Saturday, May 16, 2015

மே 17 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 17 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் விண்ணேற்றம்

Acts 1:1-11
Ps 47:2-3, 6-7, 8-9
Ephesians 1:17-23 or Ephesians 4:1-13
Mark 16:15-20

மாற்கு நற்செய்தி

நற்செய்தி பறைசாற்ற அனுப்புதல்
(
மத் 28:16 - 20; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 -
15இயேசு அவர்களை நோக்கி,' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.16நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.17நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;18பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் 'என்று கூறினார்.

இயேசுவின் விண்ணேற்றம்
(
லூக் 24:50 - 53; திப 1:9 - 11)
19இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.20அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
(thanks to www.arulvakku.com)



பரிசுத்த ஆவியோடு முன்னெடுத்து செல்வோம்

சில நேரங்களில், முதல் வாசகத்தில் கூறி இருப்பது போல, சீடர்கள் அண்ணாந்து பார்த்ததை போல , நாமும் இருக்கிறோம். வானத்தை அண்ணாந்து பார்த்து இயேசுவை தேடுகிறோம். ஒண்ணுமில்லாத இடத்தை பார்த்து வெறித்து கொண்டிருக்கிறோம் . இயேசு வந்து இந்த உலகை சாத்தானின் பிடியிலிருந்து நம்மை மீட்பார் என காத்திருக்கிறோம்.


கிறிஸ்து இன்னும் அவர் பணியை முடிக்க வில்லை என்று எல்லோரும் நினைக்கிறோம். நமது உலகம் அவரை இன்னொரு முறை வர வேண்டும் என நினைக்கிறது - இப்பொழுதே , என் இன்னும் வாவில்லை ?

ஆனால், இயேசு நம்மை இப்படி காத்து கொண்டு இருக்க வேண்டாம், நீங்கள் போய் நற்செய்தியை அறிவியுங்கள் என்று கூறுகிறார். அவர் நமக்கு என்ன கொடுத்திரிக்கிறரோ அதனை கொண்டு மற்றவர்களுக்கு இறைபணி புரியுங்கள் என்று கூறுகிறார். முடிந்த வரையில் பலருக்கும் இறைபணி செய்யுங்கள் என்று கூறுகிறார் .
ஏன் நாம் ஒன்றுமில்லாத வானத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கிறோம். ஏனெனில் நாம் இன்னும் தகுதி குறைவாகவே உணர்கிறோம்

பெற்றோர்களுக்கு இது தெரியும். குழ்ந்தை பிறந்தபின்பு, அதனை கொடுத்த கடவுளோடு இணைந்து, அந்த சின்ன குசந்தையை விசுவாசத்தோடு, பெரிய மனிதனாக வளர்க்கும் வேளையில் இருக்கிறோம் .பல அதிசயம் நிகழ வேண்டும். அப்பொழது தான் குழ்ந்தை நல்ல மன வளத்தோடு, இறைவனின் குழந்தையாக வளரும்.


கல்லுரி படித்தவர்களும், இதே மாதிரி தகுதி குறைவாக எண்ணுகிறோம். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் , அல்லது இறுதி வார்த்தபாடு முடிந்தவுடன் , இறைவனின் இடத்தில் , அவருக்காக உழைக்க காத்திருக்கிறோம். நான், ஒழுங்காக இந்த வேலையை செய்வேனா ? என்றும், நமக்கு பிடிக்காத இடத்திற்கு நம்மை அனுப்பி விடுவார்களோ? என்றும் நாம் நினைக்கிறோம்.


துக்கத்தோடு இருக்கிறவர்கலும, தமக்கு குறைவு உண்டாஇற்று என்று நினைக்கிறார்கள். நமக்கு அன்பானவர்களை கடவுள் அவரிடம் எடுத்து கொள்ளும் பொழுது , நமது வாழ்க்கை மாறி விடுகிறது , இது மாதிரி நடந்திருக்க கூடாது என்று நினைக்கிறோம். காலியாக இருக்கும் இடத்தை எப்படி நிரப்ப போகிறோம். ? நமது நோக்கங்களும் எண்ணங்களும், நம்மை நோக்கியே , நமது சுய சிந்தனை யாகவே இருக்கும் பொழுது நாம் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும். ?


நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு மாற்றமும், அடுத்த நகர்வுக்கு நம்மை அழைத்து செல்கிறது , ஒவ்வொரு இழப்பும் , நம்மை புதிய அழைப்பிற்கு எடுத்து செல்கிறது. ஒவ்வொரு அனுபவும், கடவுள் அரசிற்கு நம்ம செய்ய வேண்டிய வேலைக்கான பயிற்சியாகும் . கடவுள் நம் மூலமாக இதனை செய்ய ஆசை படுகிறார்.


நீங்கள் ஏன் இன்னும், வானத்தை பாரத்து கொண்டு இருக்கிறீர்கள் ? இயேசு உங்களுக்கு போதகராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவர் என்ன இப்போது செய்கிறார் என்று உங்களால் பார்க்க முடியாவிட்டாலும், உங்களை அவர் விட்டு விடவில்லை. அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றுகிறார். “பரிசுத்த ஆவியிடமிருந்து நீங்கள் ஆற்றலை பெற்று கொள்வீர்கள் , மேலும் நீங்கள் எனது சாட்சிகளாய் இந்த உலகத்தில் இருப்பிர்கள் ". ஞானஸ்நாணத்தில், நீங்கள் பரிசுத்தா ஆவியை பெர்ருகொண்டிர்கள் . , கடவுளின் ஆவி இயேசுவின் இறைபணியை தொடர உங்களுக்கு கிடைத்த ஆற்றலையும், தகுதியையும் கொண்டு தொடர ஆசிக்க பட்டிருக்கிரிர்கள்.

நம்பிக்கையோடு நமது காலை எடுத்து வைத்து முன்னேறி , அந்த கால் கிழே வைக்கும் முன்பு, கடவுளிடம் அடுத்த அடியை எங்கே வைக்கிறது என்று கேட்போம். கடவுளிடம் முழு நம்பிக்கையோடு இருந்தால், உங்களுக்கு நல்ல பாலன்ஸ் கிடைக்கும். பரிசத்த ஆவி கிறிஸ்துவின் இறைபணியை உங்கள் முலம் இவ்வுலகில் நிறைவேர்ருகிறார்.

© 2015 by Terry A. Modica


Saturday, May 9, 2015

மே 10 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 10 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு

Acts 10:25-26, 34-35, 44-48
Ps 98:1-4
1 John 4:7-10
John 15:9-17



யோவான் நற்செய்தி

.9என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.12' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.13தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.14நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.15இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.16நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.17நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.
(thanks to www.arulvakku.com)


பணிவிடை செய்வதே உண்மையான கிறிஸ்தவனின் அடையாளம் ஆகும். கடைசி இரவு உணவின் பொது இயேசு இதனை குறிப்பிட்டு சொன்னார். பணி செய்யவே இவ்வுலகிற்கு வந்தேன் என்று சொன்னார் அதே போல நாமும் ஒருவருக்கொருவர் பணி செய்து வாழ்தல் வேண்டும். இயேசுவின் உவமைகளில் , அடிக்கடி இறையரசின் சேவை செய்பவர் என்று குறிப்பிடுவதை நாம் காண முடியும், ஆனால், இன்றைய நர்செய்தியில் , நம்மோடு நண்பர்களாக இருக்க விரும்புகிறார். அவரது அடிமைகளாக அல்ல, அவரே அவர் கருத்தை மாற்றி சொல்கிறாரா ?


அப்படியெல்லாம் இல்லை!, நண்பர்களும் பணிவிடை செய்கிறார்கள், ஏனெனில், அவர்கள் நம் மேல் அக்கறை கொண்டுள்ளார்கள். அடிமைகளும், பணிவிடை செய்கிறார்கள் ஆனால், அவர்களின் கடமை அது மேலும், தண்டிக்கபடுவோம் என்ற பயம் அவர்களிடம் .இருக்கிறது.
இயேசு "நீங்கள் என் கட்டளையை கடைபிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" என்று சொல்கிறார். இதனை நண்பனாக அல்லது அடிமையாக எடுத்து கொள்கிறீர்களா ?


அடிமைகள் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்காவிட்டால், என்ன ஆகுமோ என்று பயப்படுவார்கள். தன்னையே பாதுகாத்து கொள்பவர்கள். ஆனால் நண்பர்களோ கடவுளின் கட்டளைகள் என்ன ஆர்வத்த்துடன் கண்டரிந்து அதனை பின்பற்ற செய்வார்கள், ஏனெனில், அவர்கள் அன்பினால் கட்டளைகளை ஏற்று கொண்டார்கள், பணிவிடை செய்வதை ஒரு வாய்ப்பாக எடுத்து கொண்டார்கள். ஆனால் அடிமைகளோ வேறு மாதிரியான நோக்கத்துடன் பணி செய்தார்கள்


இதுவே என் கட்டளை, நான் உங்களை அன்பு செய்வது போல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் " என்று இயேசு கூறுகிறார். இதுவே எல்லா கட்டளைக்கும் மேலான கட்டளை, நண்பர்களுக்கான கட்டளை என இதனை கூறுங்கள்.
.9என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.”
என்று இயேசு கூறுகிறார். ஒவ்வொரு கட்டளைகளும் அன்பின் அடித்தளத்தை கொண்டு உள்ளதை அவர்கள் நண்பர்களாக புரிந்து கொண்டுள்ளார்கள். திருச்சபையின் போதனைகளும் , நமக்கு எப்படி மற்றும் எவ்வாறு அன்பு செய்ய வேண்டும் என்று சொல்லி தருகிறது.

நாம் இந்த கட்டளைகளை கடைபிடிக்கா விட்டால், கடவுளின் அன்பு நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ ? கண்டிப்பாக இல்லை அவரது அன்பிற்குண்டான நமக்கு உள்ள இடம் போய்விடுமோ , ஆம், அவரின் கட்டளைகளை விட்டு ஆம் விலகி இருக்கும் பொழுது, கடவுள் நம்மை தொடர்ந்து அன்பு செய்து கொண்டிருந்தாலும், அவரின் அன்பில்லாத ஒரு வெறுமையை நாம் உணர்கிறோம்.

இது தான் அடிமை , நம் தவறான நம்பிக்கையினால், அல்லது துன்பத்தினால் (நம்மால் ஏற்பட்ட) காயங்களால், நாம் நமக்கு தேவையான அன்பு கிடைப்பதில்லை என்று நினைக்கிறோம். மேலும் இதிலிருந்து நாம் விலகாமல் , தொடர்ந்து கட்டளைகளை கடைபிடிக்காமல் இருக்கிறோம். ஆனால் கடவுளின் அன்பை மீண்டும் பெறுவதற்கு கட்டளைகளை மீண்டும் கடைபிடிக்கிறோம், அது அடிமை போல ஆகி விடுகிறது.


நண்பர்களோ, கடவுள் நம்மை முழுதும் அன்பு செய்கிறார், என்று தெரிந்து கொண்டு, அந்த அன்பில் திளைத்து , ஒருவருக்கொருவர் பணி செய்து சந்தோசமாய் இருக்கிறார்கள்.


© 2015 by Terry A. Modica