Thursday, May 21, 2015

மே 24 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 24 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

தூய ஆவியின் ஞாயிறு

Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15

யோவான் நற்செய்தி

.26தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.27நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

12' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.

(thanks to www.arulvakku.com)

நமது வாழ்வை முழுமையாக பரிசுத்த வாழ்வில் எழுந்தருள்வோம்

கிறிஸ்துவின் பரிசுத்த ஆவி நமக்கு தாராளமாக கொடுக்கபட்டிருக்கிறது , அதன் முலம் நாம் பரிசுத்த வாழ்வில் நிலைத்து , கிறிஸ்து தொடங்கிய இறைபணியை தொடரலாம். நாமாகவே இயேசுவை போல இருக்க முடியாது, நம்மில் இருக்கும் பரிசுத்த ஆவியினால் தான் , நாம் கிறிஸ்துவை போல மாற முடியும், அதன் மூலம், கிரிசுதுவின் பரிசுத்தம், விசுவாசம், அளவு கடந்த அன்பு , அமைதி , நம்பிக்கை , விடாமுயற்சி, மேலும் நாம் இயேசுவில் காணும் அனைத்தும் நம்மிடமும் இருக்கும்.


உங்கள் ஞானஸ் நாணத்தின் பொது, நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்று கொண்டீர்கள். அதன் தொடர்ச்சியாக உறுதி பூசுதலில் , நம்மில் பரிசுத்த ஆவி இருப்பதை உறுதி செய்ய .படுகிறது . பெந்தகொஸ்தே நாளிலிருந்து , தூய ஆவியானவர் வர ஆரம்பித்த பிறகு , கடவுள், இவ்வுலகை , அவரது இறையரசிற்கு பணி புரிபவர்கள் மூலம் மாற்றி கொண்டிருக்கிறார். அவர் தாராளமாக அவரின் ஆவியை வழங்கி, அதன் மூலம் , அவர் நம்மிடம் என்ன செய்ய சொல்கிறாரோ அதனை வெற்றியுடன் செய்து முடிக்க ஆவியால் முடியும். ஆனால் , அந்த ஆவியானவர் எந்த அளவிற்கு ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறார் என்பது நம்மை பொருது இருக்கிறது.

பரிசுத்த ஆவியின் இந்த ஜெபத்தில் என்னோடு இணைந்து ஜெபியுங்கள்.
அன்பு ஏசுவே; உமது தூய ஆவியை முழுதுமாய் என்னிடம் நிரப்பும், உமது பரிசுத்த சக்தியோடு நான் வாழ உதவி அருளும். உம்மை பற்றிய உண்மையை அறிந்து கொள்ள உதவி அருளும். உமது உண்மைய ஏற்று கொள்ள , எமது இருதயத்தை திறந்தருளும் (அதனை புரிந்து கொள்ளும் முன்பே )

பரிசுத்த ஆவியே, இறையரசை பற்றி நான் இன்னும் தெரிந்து கொள்ள உதவும். மற்ற எல்லா வற்றையும் விட, கடவுளின் அரசை நான் தேடி தெரிந்து கொள்ள உதவி அருளும். உனக்கு தேவியில்லாது எதுவோ அது என்னிடம் இருந்தால் அதனை அறிந்து கொண்டு, அதனை என்னிடமிருந்து துரத்த உதவி யருளும். அதற்கான சக்தியை எனக்கு கொடும். எனக்கு நி மட்டுமே வேண்டும்.

பரிசுத்த ஆவியே எனது பாவங்களை நான் அங்கீகரித்து, உண்மையாகவே அது ஏற்படுத்தும் அழிவுகளை நினைத்து மனம் வருந்த எனக்கு உதவி அருளும். எனது மன்னிப்பு கோரும் துக்க நிலையில் என்னை தேற்றி அருளும். பரிசுத்த ஆவியில் வாழ்வதால் ஏற்படும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்தருளும். மேலும், இந்த கருணையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க எனக்கு உதவி செய்தருளும்

இயேசு " உலகம் அனைத்தும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் " என்று நமக்கு கட்டளை இட்டுள்ளார். என்னில் உள்ள திறமையையும், ஆற்றலையும், உபயோகித்து இவ்வுலகில் மாற்றம் கொண்டுவர உதவி அருளும். என்னுள்ளே , நான் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது , என்று ஒரு செயல் திட்டம் உள்ளது. நான் இப்போது உன்னிடம் சரணடைகிறேன் என் எண்ணம் செயல்கள் அனைத்து உன்னிடம் வைக்கிறேன். உமக்கு உபயோகமாக இருக்க ஆசைபடுகிறேன். நீங்கள் என்னை எங்கே அழைத்து செல்கிறீர்களோ அங்கே செல்ல ஆசைபடுகிறேன். நீங்கள் என்னை அழைத்து செல்லுங்கள், பரிசுத்த ஆவியே எனக்குள் எல்லா அருளையும் , ஆற்றலையும் கொடுத்து இயேசுவின்வெற்றியின் அன்பை இவ்வுலகம் எங்கும் பரப்பிட எனக்கு வரம் தாரும்.

© 2015 by Terry A. Modica


No comments: