ஜூன்
21
2015 ஞாயிறு
நற்செய்தி மறையுரை
ஆண்டின்
12ம்
ஞாயிறு
Job
38:1, 8-11
Ps
107:23-26, 28-31
2
Cor 5:14-17
Mark
4:35-41
மாற்கு
நற்செய்தி
காற்றையும்
கடலையும் அடக்குதல்
(மத் 8:23 - 27; லூக் 8:22 - 25)
(மத் 8:23 - 27; லூக் 8:22 - 25)
35அன்றொரு
நாள் மாலை நேரம்.
இயேசு
சீடர்களை நோக்கி,'
அக்கரைக்குச்
செல்வோம்,
வாருங்கள்
'என்றார்.36அவர்கள்
மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு,
படகில்
இருந்தவாறே அவரைக் கூட்டிச்
சென்றார்கள்.
வேறு
படகுகளும் அவருடன் சென்றன.37அப்பொழுது
ஒரு பெரும் புயல் அடித்தது.
அலைகள்
படகின் மேல் தொடர்ந்து மோத,
அது
தண்ணீரால் நிரம்பிக்
கொண்டிருந்தது.38அவரோ
படகின் பிற்பகுதியில் தலையணை
வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்.
அவர்கள்,
' போதகரே,
சாகப்போகிறோமே!
உமக்குக்
கவலையில்லையா?
' என்று
சொல்லி அவரை எழுப்பினார்கள்.39அவர்
விழித்தெழுந்து காற்றைக்
கடிந்து கொண்டார்.
கடலை
நோக்கி,'
இரையாதே,
அமைதியாயிரு
'என்றார்.
காற்று
அடங்கியது;
மிகுந்த
அமைதி உண்டாயிற்று.40பின்
அவர் அவர்களை நோக்கி,'
ஏன்
அஞ்சுகிறீர்கள்?
உங்களுக்கு
இன்னும் நம்பிக்கை இல்லையா?
'என்று
கேட்டார்.41அவர்கள்
பேரச்சம் கொண்டு,
' காற்றும்
கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!
இவர்
யாரோ!
' என்று
ஒருவரோடு ஒருவர் பேசிக்
கொண்டார்கள்.
(thanks
to www.arulvakku.com)
இப்போது
ப்ளோரிடாவில்,
சூறாவளி
வீசம் காலம்.
சேதத்தை
விளைவிக்க கூடிய இந்த சூறாவளி
கடவுள் அனுப்பும் தண்டனை என
சிலர் நினைக்கின்றனர்.
கண்டிப்பபாக
மக்கள் செய்யும் குற்றங்களுக்கு
தண்டனை கிடைக்கவேண்டும் என
நாம் நினைத்தாலும்,
இயேசு
தந்தை கடவுளின் கோபத்தை தன
உடலில் ஏற்று ,
இரத்தம்
சிந்தி ,
சிலுவையில்
மரணமடைந்தார்.
அதனால்
எல்லா பாவிகளும் தண்டனையிலிருந்து
தப்ப முடிந்தது.
நம்மிடையே
உள்ள புயலை தணிக்கவே இயேசு
விரும்புகிறார் .
அதன்
மூலம் கலகத்தை உண்டாக்க அல்ல
.
நம்மிடம்
உள்ள கஷ்டங்கள் எல்லாம் தண்டனை
அல்ல.
ஆனால்,
அவையெல்லாம்
நாம் கடவுளிடம் இன்னும்
நெருக்கமாக செல்ல ஒரு வாய்ப்பாக
அமைகின்றன.
நம்மில்
எல்லோருக்கும் புயல் காலம்
என்று ஒன்று இருக்க தான்
செய்யும்.
ஒவ்வொரு
புயலும்,
இயேசு
நம்மோடு நடந்து வருகிறார்
என்பதை நாம் புரிந்து கொள்ளும்
தருணம் ஆகும்.
நாம்
அதற்கு தகுதி இல்லாதவர்களாக
இருந்தாலும் கூட அவர் நம்மோடு
நடந்து வருகிறார்.
. அதிக
ஞானத்தையும் ,
அறிவும்,
பெற்று
விசுவாசத்தில் உறுதியாய்
இருக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.
கனிவுடனும்,
எளிமையுடனும்,
இருக்க
நமக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
நாம்
கடவுளை அதிகம் நம்பியிருக்க
வேண்டிய நிலையில் ,
அவரின்
அதீத அன்பை கண்டு கொள்கிறோம்.
ஆனால்,
விளக்கிலிருந்து
வரும் பூதம் போல கடவுளும்
இருக்கிறார்,
அதனால்,
நம்
பிரச்னையை நம் விருப்ப படி
கையாள்வது நல்லதில்லை,
அவரை
தொடர்ந்து நம்பி இருந்தால்
கடவுள் நம் தேவையை செய்வார்.
சில
பிரச்சினைகள் நம்மில் தொடர்ந்து
கொண்டே இருக்கும்,
ஏனெனில்,
கிறிஸ்துவின்
பிரசன்னத்தை நம் அருகில்
கொண்டு வர நாம் போதுமான முயற்சி
செய்வதில்லை. நமது
அனுபவம் மூலம் நாம் கிறிஸ்துவை
கண்டறிந்து, மற்றவர்களுக்கும்,
அவர்கள் புயலை
(பிரச்சினையை)
அமைதியாக்க
உதவ வேண்டும். நாம்
இயேசுவின் கைகளாக இந்த உலகில்
இருந்து , இந்த
புயலை அமைதியாக்க வேண்டும்.
இதன் மூலம்
நமக்கு உள்ள புயலும்,
நம்மை விட்டு
அகலும். நமக்கு
உள்ள கவலைகள் அகலும் வருத்தங்கள்
போய்விடும்
பல
நேரங்களில், நம்
பாவ வாழ்வின் மூலம் நாமே
சூறாவளியை உண்டாக்குகிறோம்.
அனால் கடவுள்
அதற்காக நமக்கு தண்டனை தர
விரும்பவில்லை. அதிக
முறை அவர் நமக்கு எச்சரிக்கை
அனுப்புகிறார் பல வழிகளில்,
ஆனால் நாம்
புயலில் மாட்டி விடுகிறோம்.
இயேசு அவரிடம்
மனம் திரும்பி நாம் சேர்ந்து
விடவேண்டும். கிறிஸ்து
விரும்புகிறார்.
©
2015 by Terry A. Modica
No comments:
Post a Comment