மார்ச் 20 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
குருத்து ஞாயிறு
Readings for the Entrance
Procession:
Luke
19:28-40
Readings for Mass:
Isaiah
50:4-7
Ps 22:8-9,
17-20, 23-24
Phil 2:6-11
Luke
22:14--23:56
லூக்கா நற்செய்தி
இயேசுவின் சீடர்கள் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தபின்
நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.
அப்போது அவர் அவர்களை நோக்கி,
``நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு
இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன். ஏனெனில் இறையாட்சியில் இது
நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.
பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து,
கடவுளுக்கு நன்றி செலுத்தி
அவர்களிடம், ``இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் இதுமுதல் இறையாட்சி
வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான்
உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.
பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி,
அதைப் பிட்டு,
அவர்களுக்குக் கொடுத்து,
``இது உங்களுக்காகக் கொடுக்கப்படும்
எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்'' என்றார்.
அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து,
``இந்தக் கிண்ணம் உங்களுக்காகச்
சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான். மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே
போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக்
கேடு'' என்றார்.
அப்பொழுது அவர்கள்,
``நம்மில் இச்செயலைச் செய்யப்போகிறவர்
யார்'' என்று தங்களுக்குள்ளே
கேட்கத் தொடங்கினார்கள். மேலும்
தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே
எழுந்தது.
இயேசு அவர்களிடம்,
``பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை
அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என
அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர்
சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா?
அல்லது பணிவிடை புரிபவரா?
பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா?
நான் உங்கள் நடுவே பணிவிடை
புரிபவனாக இருக்கிறேன். நான்
சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை
கொடுத்திருப்பதுபோல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே என் ஆட்சி
வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க
அரியணையில் அமர்வீர்கள். ``சீமோனே,
சீமோனே,
இதோ கோதுமையைப்போல் உங்களைப்
புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை
தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன்
சகோதரர்களை உறுதிப்படுத்து'' என்றார்.
அதற்குப் பேதுரு,
``ஆண்டவரே,
உம்மோடு சிறையிலிடப்படுவதற்கும் ஏன்,
சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்''
என்றார்.
இயேசு அவரிடம், ``பேதுருவே, இன்றிரவு, `என்னைத் தெரியாது'
என மும்முறை நீ மறுதலிக்குமுன்
சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.
இயேசு சீடர்களிடம்,
``நான் உங்களைப் பணப்பையோ வேறு பையோ
மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது,
உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?''
என்று கேட்டார்.
அவர்கள், ``ஒரு குறையும் இருந்ததில்லை''
என்றார்கள். அவர் அவர்களிடம், ``ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக்கொள்ளட்டும்;
வேறு பை உடையவரும் அவ்வாறே
செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக்கொள்ளட்டும். ஏனெனில் நான் உங்களுக்குச்
சொல்கிறேன்: `கொடியவருள் ஒருவராகக்
கருதப்பட்டார்' என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற
வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி
வருகின்றன'' என்றார்.
அவர்கள், ``ஆண்டவரே, இதோ! இங்கே
இரு வாள்கள் உள்ளன''
என்றார்கள்.
இயேசு அவர்களிடம்,
``போதும்''
என்றார்.
இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ
மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப்
பின்தொடர்ந்தார்கள். அந்த இடத்தை அடைந்ததும் அவர்
அவர்களிடம், ``சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்,''
என்றார்.
பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் விலகிச் சென்று,
முழந்தாள்படியிட்டு,
இறைவனிடம் வேண்டினார்: ``தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து
அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்''
என்று கூறினார்.
அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி
அவரை வலுப்படுத்தினார். அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத்
துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.
அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம்
வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களிடம், ``என்ன, உறங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்?
சோதனைக்கு உட்படாதிருக்க
விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்'' என்றார்.
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிந்தபோது,
இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான
யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.
இயேசு அவனிடம், ``யூதாசே, முத்தமிட்டா மானிடமகனைக் காட்டிக்கொடுக்கப் போகிறாய்?''
என்றார்.
அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து,
``ஆண்டவரே,
வாளால் வெட்டலாமா?''
என்று கேட்டார்கள்.
அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத்
தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.
இயேசு அவர்களைப் பார்த்து,
``விடுங்கள்,
போதும்''
என்று கூறி அவருடைய காதைத் தொட்டு
நலமாக்கினார்.
அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல்
தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து,
``ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல
நீங்கள் வாள்களோடும் தடிகளோடும் வந்தது ஏன்?
நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு
இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது''
என்றார்.
பின்னர் அவர்கள் இயேசுவைக் கைது செய்து இழுத்துச் சென்று
தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டுபோனார்கள்.
பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். வீட்டு உள்முற்றத்தின் நடுவில்
நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.
அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர்
அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து,
``இவனும் அவனோடு இருந்தவன்''
என்றார்.
அவரோ, ``அம்மா, அவரை எனக்குத் தெரியாது''
என்று மறுதலித்தார்.
சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர்,
``நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்''
என்றார்.
பேதுரு, ``இல்லையப்பா'' என்றார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மற்றொருவர்,
``உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்;
இவனும் கலிலேயன்தான்''
என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, ``நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது''
என்றார்.
உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோதே,
சேவல் கூவிற்று.
ஆண்டவர் திரும்பி,
பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: ``இன்று சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்''
என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப்
பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
இயேசுவைப் பிடித்து வைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து
நையப்புடைத்தார்கள். அவரது முகத்தை மூடி, ``உன்னை அடித்தவர் யார்?
இறைவாக்கினனே,
சொல்''
என்று கேட்டார்கள். இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள். பொழுது விடிந்ததும்
மக்களின் மூப்பர்களும் தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடி வந்தார்கள்;
இயேசுவை இழுத்துச் சென்று தங்கள்
மூப்பர் சங்கத்தின் முன் நிறுத்தினார்கள். அவர்கள், ``நீ மெசியாதானா? எங்களிடம் சொல்'' என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம்,
``நான் உங்களிடம் சொன்னால் நீங்கள்
நம்பமாட்டீர்கள்; நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்லமாட்டீர்கள். இதுமுதல் மானிடமகன் வல்லவராம்
கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்'' என்றார்.
அதற்கு அவர்கள் அனைவரும்,
``அப்படியானால் நீ இறைமகனா?''
என்று கேட்டனர்.
அவரோ, ``நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்''
என்று அவர்களுக்குச் சொன்னார்.
அதற்கு அவர்கள், ``இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா?
இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே''
என்றார்கள். திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப்
பிலாத்தின்முன் கொண்டு சென்றனர். ``இவன் நம் மக்கள்
சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்;
தானே மெசியாவாகிய அரசன் என்று
சொல்லிக்கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்'' என்று அவர்கள் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தத்
தொடங்கினார்கள்.
பிலாத்து அவரை நோக்கி,
``நீ யூதரின் அரசனா?''
என்று கேட்க,
அவர்,
``அவ்வாறு நீர் சொல்கிறீர்''
என்று பதில் கூறினார்.
பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும்
பார்த்து, ``இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை''
என்று கூறினான்.
ஆனால் அவர்கள், ``இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும்
மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்''
என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
இதைக் கேட்ட பிலாத்து,
``இவன் கலிலேயனா?''
என்று கேட்டான்;
அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு
உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.
இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்;
ஏனெனில்,
அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு
அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்;
அவர் அரும் அடையாளம் ஏதாவது
செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர்
அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை. அங்கு நின்ற தலைமைக் குருக்களும்
மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள். ஏரோது தன் படைவீரரோடு
அவரை இகழ்ந்து ஏளனம் செய்து,
பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி
அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான். அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய்
இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.
பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும்
மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.
அவர்களை நோக்கி, ``மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம்
கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற
எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும்
இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை
செய்வேன்'' என்றான்.
விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய
கட்டாயம் அவனுக்கு இருந்தது.
திரண்டிருந்த மக்கள் அனைவரும்,
``இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை
செய்யும்'' என்று கத்தினர். பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில்
ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன்.
பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும்
அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.
ஆனால் அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும்,
சிலுவையில் அறையும்''
என்று கத்தினார்கள்.
மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி,
``இவன் செய்த குற்றம் என்ன?
மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும்
இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை
செய்வேன்'' என்றான்.
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில்
வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே
வென்றது. அவர்கள் கேட்டபடியே பிலாத்து
தீர்ப்பு அளித்தான். கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள்
கேட்டுக்கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்;
இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய
விட்டுவிட்டான்.
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன்
ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல்
இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச்
சுமந்துகொண்டுபோகச் செய்தார்கள். பெருந்திரளான
மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே
சென்றார்கள்.
இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி,
``எருசலேம் மகளிரே,
நீங்கள் எனக்காக அழவேண்டாம்;
மாறாக உங்களுக்காகவும் உங்கள்
மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது `மலடிகள் பேறுபெற்றோர்'
என்றும் `பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறுபெற்றோர்'
என்றும் சொல்வார்கள். அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, `எங்கள் மேல் விழுங்கள்'
எனவும் குன்றுகளைப் பார்த்து,
`எங்களை மூடிக்கொள்ளுங்கள்'
எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு
செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!'' என்றார்.
வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரண தண்டனைக்காக அவர்கள்
அவரோடு கொண்டு சென்றார்கள். மண்டை ஓடு எனப்படும்
இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக
அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அப்போது இயேசு, ``தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று
இவர்களுக்குத் தெரியவில்லை'' என்று சொன்னார்.
அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில்
பங்கிட்டுக்கொண்டார்கள். மக்கள் இவற்றைப்
பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
ஆட்சியாளர்கள், ``பிறரை விடுவித்தான்;
இவன் கடவுளின்
மெசியாவும்,
தேர்ந் தெடுக்கப்பட்டவனுமானால்
தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்'' என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,
``நீ யூதர்களின் அரசனானால் உன்னைக்
காப்பாற்றிக்கொள்'' என்று எள்ளி நகையாடினர்.
``இவன் யூதரின் அரசன்''
என்று அவரது சிலுவையின் மேல் எழுதி
வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில்
தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன்,
``நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று'' என்று அவரைப் பழித்துரைத்தான்.
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு,
``கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா?
நீயும் அதே தீர்ப்புக்குத்தானே
உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!'' என்று பதிலுரைத்தான்.
பின்பு அவன், ``இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்''
என்றான்.
அதற்கு இயேசு அவனிடம்,
``நீர் இன்று என்னோடு பேரின்ப
வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்''
என்றார்.
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று
மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை
நடுவில் கிழிந்தது. ``தந்தையே,
உம் கையில் என் உயிரை
ஒப்படைக்கிறேன்'' என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.
(
இங்கு முழந்தாளிட்டு,
சிறிது நேரம் மௌனமாக இருக்கவும்)
இதைக் கண்ட நூற்றுவர் தலைவர்,
``இவர் உண்மையாகவே நேர்மையாளர்''
என்று கூறிக் கடவுளைப் போற்றிப்
புகழ்ந்தார். இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த
மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு,
மார்பில் அடித்துக்கொண்டு
திரும்பிச் சென்றனர். அவருக்கு அறிமுகமான
அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும்
தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர்,
நல்லவர்,
நேர்மையாளர். தலைமைச் சங்கத்தாரின்
திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச்
சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.
அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றி,
பாறையில் குடைந்திருந்த கல்லறையில்
வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில்
அடக்கம் செய்ததில்லை.
அன்று ஆயத்த நாள்;
ஓய்வுநாளின் தொடக்கம். கலிலேயாவிலிருந்து அவரோடு
வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்துவிட்டு,
திரும்பிப்போய் நறுமணப்
பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
(Thanks to www.arulvakku.com)
குருத்து ஞாயிறு புனித வாரத்தை துவக்கி வைக்கிறது. அதே நாள் உங்களுக்கும்
பரிசுத்த வாழ்வை துவக்கி இயேசுவோடும் , அவரின் ஆழ்ந்த அன்போடும் உங்களை இனைக்குமா?
இன்றைய திருப்பலியின் ஆரம்பத்தில் " இது ஆண்டவருக்குத் தேவை" என்ற முக்கியமான
வசனம் வருகிறது. ஆண்டவரோடு நீங்கள் இணையும் அனுபவத்தை சுருக்கி சொல்கிறது.
இயேசு எவ்வாறு கழுதை குட்டியை பெற்றார் என்று நற்செய்தியாளர் விளக்கி சொல்ல
வேண்டும் என்பதை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
நம் தற்போதைய சூழ்நிலைக்கு ஒரு
விளக்கத்தை கொடுக்கிறது. நம் வாழ்விலும் நம்மோடு ஒரு குட்டி இணைக்கப்பட்டுள்ளது.
அது எது வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அது கிறிஸ்துவோடு இன்னும் பகிர்ந்து
கொள்ள படவில்லை. அது நம்மிடம் உள்ள பணம்
ஆக இருக்கலாம்., திறமையாக இருக்கலாம், படைப்பு திறன் அறிவாக இருக்கலாம், நேரம்
செலவிடலாம், ஆற்றலை செலவிடலாம் , இன்னும் பல. அது ஆண்டவருக்கு தேவையாக இருக்கிறது.
ஆனால் பல நேரங்களில் நாம் நம் சொந்த தேவைகளுக்காகவும் மட்டும் தான் நம் பணத்தையும்
, ஆற்றலையும் , திறமையையும் உபயோகிக்கிறோம். ஆனால் இயேசுவிற்கு அது தேவையாக
இருக்கிறது. எப்படி அந்த கழுதை
இயேசுவிற்கு உதவியாக இருந்த்து , அவர் புகழ் படும்போழுது பங்கேற்றதோ அதே போல
நாமும் இயேசுவின் புகழ் பாட , அவரை உலகெங்கும் கொண்டு செல்ல பங்கேற்போம்.
இயேசுவின் அற்புதமான அன்பிற்காக , நாம் அவரை புகழ்ந்து பாட வேண்டும் என
குருத்து ஞாயிறு போதிக்கிறது. அவரின் அளப்பற்கரிய அன்பை சிலுவையில் நாம்
பார்க்கிறோம். உங்களுக்காக வேறு யார் தன உயிரை விடுவார்கள். மிக பெரிய துன்பத்தை
ஏற்று இயேசு தன் உயிரையே , அவர் சுகத்தை , இரத்தத்தை , நம் பாவங்களுக்காக தியாகம்
செய்தார்.
இதற்காக நாம் ஒவ்வொரு வாரமும், இயேசுவை ஓசானா என்றும் , மேலும் அவரை
போற்றியும் பாடவேண்டும், புகழ வேண்டும் . திவ்ய நற்கருனையில், அவரது அளப் பர்கரிய அன்புடன் நாம் இணைவோம் , இணைப்பில், ஏன்
காதலர்கள் இணையும் பொழுது அடையும் மகிழ்வை அடைவதில்லை. ? ஏனெனில் நம்மிடையே
இன்னும் பல "குட்டிகள்" (நமது சொந்த ஆசைகள் ) கட்டப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள திறமைகளை , நேரத்தை இயேசுவுடன்
பகிர்ந்து கொள்ள அவரது சீடர்களை அனுப்புகிறார். அவர்கள் , திருப்பலி பீடத்தில் ,
உங்களுக்காக திவ்ய நற்கருணையை தயார் செய்கிறார்கள். "உதவி தேவை" என்று
அறிவிப்பு பலகையில் எழுதுகிறார்கள். உங்கள் வேலைகள் இடையே மற்றவர்களுக்காக ஜெபம்
செய்ய வேண்டியும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும் நீங்கள் அழைக்கப்படலாம். பல புதியவர்கள், உங்களிடம் நன்கொடை கேட்கலாம்,
இல்லாதவர்களுக்கு உதவ நீங்கள் முன் வர வேண்டும்.
கடவுளின் இறையரசின் திட்டத்தில் உங்களை இன்னும்
அதிகம் ஈடுபட வேண்டும் என நீங்கள் அழைக்கப்படுகிறீர்களா ?
© 2016 by Terry A. Modica