Friday, March 11, 2016

மார்ச் 13 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 13  2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவகாலத்தின் 5ம் ஞாயிறு
Isaiah 43:16-21
Ps 126:1-6
Phil 3:8-14
John 8:1-11

யோவான் நற்செய்தி
அக்காலத்தில் இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, ``போதகரேஇப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.
இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.
ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால்அவர் நிமிர்ந்து பார்த்து, ``உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்'' என்று அவர்களிடம் கூறினார்.
மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.
இயேசு நிமிர்ந்து பார்த்து, ``அம்மாஅவர்கள் எங்கேநீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?'' என்று கேட்டார்.
அவர், ``இல்லைஐயா'' என்றார்.
இயேசு அவரிடம், ``நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்'' என்றார்.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துவின் இரக்கம்
"மிக சிறியவர்" என்று இயேசு சொல்வது போல , அவர்களை எப்படி நாம் நடத்த வேண்டும் என்று இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்து காட்டுகிறது.  இயேசுவின் இரக்கத்தை மன்னிப்பை பெற்ற நபர், வாழ்வதற்கே தகுதி இல்லாதவர். அந்த சமூகத்தில் பெண் என்றாலே, கொஞ்சம் கீழ் தான்,, மேலும் அவள் அங்கே பாவி, அதனால், தண்டனைக்கு உரியவள். அவளை கண்டிக்கும் கூட்டத்தில், அவள் ஔர்வல் தான் அத்தனை பேச்சுகளுக்கும் ஆளானாள் .  இதை விட இன்னும் ஒருவர், "மிக சிறியவர் அல்லது வறியவர் " என்று எப்படி சொல்ல முடியும் ?
நீங்கள் எப்பொழுது, தனிமைபடுத்த பட்டும், முக்கியமற்றும் உணர்ந்தீர்கள்?  உங்களை பழி சுமத்தும் கூட்டத்தை எதிர் நோக்கி இருப்பீர்கள் ?  மேலும் நீங்களும் யாரையாவது, முக்கியமற்றவராக நடத்தி இருக்கிறீர்களா ? ஆம். அதனால், நாம் யாருமே முதல் கல்லை எரிய முடியாது.
திருச்சபையில்  அதிகம் பேர் , அவர்களை நிரகரித்தவர்களாகவும், பலர் அவர்களை மறந்து விட்டனர் எனவும் இருக்கின்றனர். நமக்கும்  அதில் சிலரை தெரியும். அவர்களின் தனிமை நமக்கு தெரியாமல் போய்  விடுகிறது, ஏனெனில், நாம் நம் சொந்த அலுவல்களில் இருப்பதாலும், நமக்கு முக்கியமான நிகழ்வுகள் எதுவோ அதில் நாம் நேரம் செலவிடுவதாலும், மற்றவர்களுக்காக நாம் நேரம் செலவிடுவதில்லை, அவர்களுக்கு மரியாதை கொடுக்க நாம் தவறி விடுகிறோம். அவர்களின் தேவைகள் நம் சொந்த காரணங்களால் நிராகரிக்க படுகின்றன. பங்கின் மற்ற தேவைகளும் நம் சுய வசதிக்காக தியாகம் செய்ய படுகின்றன.

விவாகரத்தான கத்தோலிக்கர்கள், எல்லோரும் அவர்களை பழித்துரைப்பதாக எண்ணுகிறார்கள். அவர்கள் திருப்பலிக்கு செல்வதை கூட செய்யாமல் , மர்ரவர்களிடமிருண்து விலகி நிற்கிறார்கள். திருச்சபையின் சட்ட திட்டங்கள், அவர்களுக்கு சரியாக தெரியாமல் இருக்கிறது. மேலும் அவர்களை யாரும் அணுகி திருச்சபைக்கு அழைத்து வருவதில்லை. மேலும், திருச்சபையில் ஒரு சிலர் சிறுவர்களை தவறாக பயன் படுத்துகிறார்கள், வயதானவர்கள் சிறு குழந்தைகளை தவறாக பயன் படுத்துவதை , அவர்களை துன்புறுத்துவதை யாரும் கவனிக்க தவறி விடுகிறோம். அதற்கான நியாயம் கிடைக்கபதில்லை. ஏனெனில், சிறுவர்களை சிறுவர்களாக நாம் நினைத்து அவர்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது என்ற என்னத்தில் அவர்களுக்கு ஏற்படும் அநிதிகலை கண்டு கொள்ளுவதில்லை. - அவர்களும் மிகவும் குறைவாகவே அக்கறை காட்டபடுகின்றனர்.
நம்மிடையே தாழ்வான நிலையில் மனதளவிலும், சமூக அளவிலும் உள்ளவர்களை நாம் அனுகி , அவர்களுக்கு தோழமையாக இருப்பது, இந்த தவகாலத்தில் ஒரு நல்ல நடை முறை ஆகும். -- ஆனால் இதே நடை முறை வருடம் முழுதும் தொடர வேண்டும்.


© 2016 by Terry A. Modica

No comments: