ஜனவரி 29, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு
Zephaniah 2:3; 3:12-13
Ps
146:6-10 (with Matthew 5:3)
1
Corinthians 1:26 -31
Matthew
5:1-12a
மத்தேயு
நற்செய்தி
மலைப்பொழிவு
1இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
2அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
பேறுபெற்றோர்
(லூக் 6:20 - 23)
(லூக் 6:20 - 23)
3“ஏழையரின் உள்ளத்தோர்
பேறுபெற்றோர்;
ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்கு உரியது.
4துயருறுவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில்
அவர்கள் ஆறுதல் பெறுவர்.✠a
5கனிவுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில்
அவர்கள் நாட்டை
உரிமைச்
சொத்தாக்கிக் கொள்வர்.⁕✠
6நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர்
பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள்
நிறைவுபெறுவர்.✠
7இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில்
அவர்கள் இரக்கம் பெறுவர்.
8தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில்
அவர்கள் கடவுளைக் காண்பர்.✠
9அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில்
அவர்கள்
கடவுளின்
மக்கள் என அழைக்கப்படுவர்.
10நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்
பேறு
பெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு
அவர்களுக்குரியது.✠
11என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள்
பேறுபெற்றவர்களே!✠
12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும்
கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும்
அவர்கள் துன்புறுத்தினார்கள்.✠
(thanks to www.arulvakku.com)
பேருபெருதலில் புனிதத்தை தேடி கண்டு
கொள்வது
இன்றைய நற்செய்தியில், நம்மில் உள்ள புனிதத்துவத்தை நாம் பார்க்கிறோம்.
மத்தேயு 5:1-12 , இயேசுவை போல் வாழ்பவர்கள் எப்படி புனிதமாகவும் பேரு பெற் றோருமாகவும்
இருக்க முடியும் என்று விளக்குகிறது. முதல்
நான்கு வசனங்கள், கடவுளுடன் நம் நட்பை , தொடர்பை பற்றி கூறுகிறது; கடைசி
நான்கு வசனங்கள்,நாம் மற்றவர்களோடு கொண்ட தொடர்பை பற்றி கூறுகிறது.
நாமே நம்மை புனிதர் என்று எப்படி கூறி கொள்வது? நன்றாக
நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் புனிதர் தான், நீங்கள் எவ்வளவு குறை உள்ளவர்களாக
இருந்தாலும், நீங்கள் புனிதர் தான், கடவுள் உங்கள் ஞானஸ்தானத்தில் உங்களை புனித படுத்தி உள்ளார். இயேசு சிலுவையில்
உங்களுக்காக பாடுபட்டுள்ளார், அதற்கு அவருக்கு நன்றி கூறுங்கள். அதன் மூலம் உங்களை
இயேசு ஆசிர்வதித்துள்ளார். மேலும், நீங்கள் இயேசுவை அன்பு செய்கிறீர்கள், அவரும்
உங்களை அன்பு செய்கிறார்
கடவுள் ஆசிர்வதிக்கும் அனைத்தும் பரிசுத்தமாக்கபடுகிறது.! அதனால், நற்செய்தியில்
வருவது போல வாழ்பவர்கள்(இயேசுவும் அப்படி தான் வாழ்கிறார்) , கடவுளால்
ஆசிர்வதிக்கப்பட்டு, புனிதர் என்று அழைக்கபடுகிறார். எழ்மையானோர், கடவுளின் அன்பை
அவர்கள் தேடுகிறார்கள், துக்கத்தில் இருப்பவர்கள் பரிசுத்த ஆவியிடம் ஆறுதல்
தேடுகின்றனர். அடக்கத்துடன் இருப்பவர்கள்,
, நீதிக்காக போராடுவார்கள், ஏனெனில், அவர்கள் கடவுளை அன்பு செய்கின்றனர். ஒவ்வொரு
வரியாக தியானித்து, அதில் உங்கள் புனிதத்துவத்தை பாருங்கள், மேலும், எந்த
காரணத்தினால், உங்கள் புனிதத்துவம் தடுக்கபடுகிறது என்று பார்த்து , இயேசுவை போல
வாழ முன்னேறுங்கள்.
திருச்சபை புனிதர்களை அர்சித்து அவர்களுக்கு புனிதர் பட்டம் கொடுக்கிறது. அதன்
முலம் அவர்கள் நமக்கு முன் மாதிரியாக இருக்கிறார்கள். அவர்களின் புனிதத்தை நாம் இன்னும்
அடையவில்ல என்றாலும் கூட, நாமும் அதே புனிதர்களின் சமூகத்தில் இருக்கிறோம்.
கிறிஸ்துவை பின்பற்றி , மோட்சத்திற்கு செல்லும் அனைவருமே புனிதர்கள் தான்,
உததரிக்கிற ஸ்தலத்திற்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் , புனிதர்கள் தான். நாம்
புனிதத்தை நோக்கி முன்னேற, புனிதர்களிடம் உதவி கேட்கலாம், அவர்களும் நமக்கு
வழிகாட்டுவார்கள்.
© 2017 by Terry A. Modica