Friday, January 20, 2017

ஜனவரி 22, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி 22, 2017  ஞாயிறு  நற்செய்தி மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Isaiah 8:23--9:3
Ps 27:1, 4, 13-14
1 Corinthians 1:10-13, 17
Matthew 4:12-23

மத்தேயு  நற்செய்தி
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மாற் 1:14 - 15; லூக் 4:14 - 15)
12யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

13அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.

14இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:
15செபுலோன் நாடே! நப்தலி நாடே!
பெருங்கடல் வழிப் பகுதியே!
யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே!
பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!
16காரிருளில் இருந்த மக்கள்
பேரொளியைக் கண்டார்கள்.
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில்
குடியிருப்போர் மேல்
சுடரொளி உதித்துள்ளது.
17அதுமுதல் இயேசு
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது
 எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
முதல் சீடர்களை அழைத்தல்
(மாற் 1:15 - 20; லூக் 5:1 - 11)
18இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.

19இயேசு அவர்களைப் பார்த்து, 
என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்
 என்றார்.

20உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
21அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.

22உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(லூக் 6:17 - 19)
23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்
(thanks to www.arulvakku.com)
இருளில் வாழ்பவர்களுக்கு உதவி செய்தல்
உங்களை யார் தொந்தரவு செய்கிறார்கள்? இன்றைய ஞாயிறின்  நற்செய்தியில், இசையாஸ் இறைவாக்கு நிறைவேறியதை நாம் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவினால் தான், உங்களுக்கு தெரிந்தவர்கள், இருளில் இருப்பவர்கள், ஒளியை பார்த்து  குணமடைகிறார்கள். யாரெல்லாம் தன பாவ வாழ்வில் இருந்து வெளியே வராமல் இருக்கிறார்கள்? சாவின் அழிவில் இருப்பவர்கள் , அதன் நிழலில் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.  பாவ வாழ்வில் இருந்து நான் நகரமாட்டேன் என்று இன்னும் உறுதியாக இருப்பது யார்? அதனால் உங்களுக்கு அதிக கவலையாக இருக்கிறது.
உங்களின் தொடர்ந்த ஜெபத்தினாலும், விசுவாச அன்பினாலும், இயேசுவை அவர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்த உண்மைக்கு எதிராகவும், இயேசுவின் பின் சென்று மறைந்தும் இருந்தாலும், கிறிஸ்துவின் மிக பெரிய ஒளி எதிலும் மறைந்துவிடாது, எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். கண்டிப்பாக மிக விரைவில், கிறிஸ்துவின் ஒளி மிக பெரிய அளவில் அனைவரையும் சென்று அடையும், அதனை யாராலும் மறைக்க முடியாது. எல்லோருக்கும் கிறிஸ்துவின் ஒளி சந்தோசத்தை கொண்டு வரும்.
லூக்கா நற்செய்தியில் (12: 49-50),  இருளில் வாழும் மக்களுக்காக அவர் படும் பாட்டை இப்படி சொல்கிறார்: 49மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.50ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். "
அதே போல உங்கள் மன குறைகளையும் இயேசு அறிந்திருக்கிறார். இன்னும் ஆழமாக , வேகமாகவும் உங்கள் கவலைகளுக்காக , வருத்தத்திற்காக , இயேசு கவலை கொள்கிறார். உங்களுக்கு தெரிந்ததை விட, அவர் இன்னும் அதிகமான காரியங்கள் உங்களுக்காக செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் எதற்காக ஜெப செய்து கொண்டு இருக்கிறீர்களோ , யாருக்காக ஜெபம் செய்கிறிர்களோ, அந்த வெற்றி கிடைக்கும் வரை இயேசு பாடுபட்டு கொண்டிருக்கிறார். முடிந்த , முடியாத விஷயங்கள் அனைத்தும் செய்து, கோரிக்கைகள் நிறைவேற இயேசு உழைக்கிறார்.
இயேசுவிடம் செல்ல வேண்டாம் என பிடிவாதமாக இருப்பவர்களிடம் , அதனால் ஏற்பட போகும் பின் விளைவுகளை தெய்வீக உதவியினால் இறைவன் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ஜெபியுங்கள். கடவுள் அவர்களை மற்றவர்கள் மூலமாக அவரின் ஒளியின் நிழலுக்கு கொண்டு வர வேண்டும் என ஜெபியுங்கள். தெய்வீகத்திற்கு எதிரான நிலையை இயேசு உடைத்து , கடவுளின் வழியிலேயே அவர்களை மாற்ற வேண்டும் என்றும் ஜெபியுங்கள்.  மனம் மாறுதலுக்கு பிறகு, கிறிஸ்துவின் ஒளியை மற்றவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஜெபியுங்கள். அவர்கள் மனம் மறுத்தல், நிரந்தரமாகவும், முழுமையான மாறுதலாகவும் இருக்க வேண்டும் என்று ஜெபியுங்கள்.
கடவுளின் மனது மாற வேண்டும் என ஜெப செய்யாதீர்கள். இருளில் இருப்பவர்களை கிறிஸ்துவின் ஒளிக்குள் கொண்டு வரும் வேலையை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார். அது மாதிரியான மக்களை , நாம் கடவுளின் கரங்களுக்குள் கொண்டு வர ஜெபம் செய்வோம். ஏனெனில், அவர்கள் அதன் போன்ற ஒரு கோரிக்கையுடன் ஜெபம்  செய்வதில்லை.

© 2017 by Terry A. Modica

No comments: