Saturday, April 15, 2017

ஏப்ரல் 16 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஏப்ரல் 16 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு
Acts 10:34a, 37-43
Psalm 118:1-2, 16-17, 22-23
Colossians 3:1-4 or 1 Cor. 5:6b-8
John 20:1-9
யோவான் நற்செய்தி

இயேசு உயிர்த்தெழுதல்
(மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; லூக் 24:1 - 12)
1வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.

2எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!என்றார்.
3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.

4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.

5அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.

6அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,

7இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

8பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.

9இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
(thanks to www.arulvakku.com)

இயேசு உங்களுக்கு எப்படி உதவி செய்தார் ?
இயேசு எப்படி உங்களுக்கு உதவி செய்தார் என்ற நற்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா? எது உங்களை  தடுக்கிறது? உங்கள் வாழ்வில் நடந்த மரணம் (தியாகங்கள், நம்பிக்கையின்மை, பிரிந்த உறவுகள் , இன்னும் பல ) அனைத்தும் மீண்டும் வெற்றியின் புதிய  வாழ்வை கொடுத்திருக்கிறது என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா ?

நமக்கு இருக்கும் அதே தயக்கம் தான், ஈஸ்டர் ஞாயிறன்று சீடர்களுக்கும் இருந்தது என்று யோவான் நற்செய்தியில் குறிப்பிடுகிறார்.
ஆனால், திரு தூதர் பணிகள்  நூலில், இராயப்பரின் நடவடிக்கைகள் வேறு மாதிரியாக கொடுக்கப்பட்டுள்ளது! சீடர்களுக்கு அவர்களின் அழைத்தல் புரிந்து நடந்து கொண்டார்கள்: இயேசு தான் மீட்பர், என்றும் அவர்களின் இறைபணியை முழுமையாக ஏற்று கொண்டு, நடக்க அவர்களுக்கு ஆற்றலும், துணையும் கொடுக்கப்பட்டுள்ளது போல நடந்து கொண்டார்கள்.

இயேசு எவ்வாறு உங்கள் துக்கங்களையும், துன்பங்களையும் வெற்றியாக மாற்றுகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?
"சாட்சி" சொல்வது என்பது நமது சொந்த அனுபவத்தை , அதன் மேல் உள்ள உண்மையை மற்றவர்களுடேன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இராயப்பர் தனியாக வலியுறுத்தி சொல்கிறார் : இயேசுவை நம்பினவர்கள் அனைவரும் பாவத்தின் மன்னிப்பை பெறுவார்கள். கண்டிப்பாக அவர் மன்னிப்பை பெற்று கொண்டார்!  இரயப்பருக்கு கிறிஸ்துவின் மன்னிப்பை பெறுவதும், அதன் தேவையையும் முதல் ஆளாக தெரிந்து கொண்டவர்.

நமது துன்பங்கள் எல்லாம் நம்மை புதிய ஆசிர்வாத வாழ்க்கைக்கு அழைத்து சென்றுள்ளது என்பதை நாம் அதிகம் பேச பேச தான் நன்றாக புரிந்து கொள்வோம்.முதல்  முதலாக அதன் உள்ளார்ந்த பயன்களை, அர்த்தங்களை நம் நெருங்கிய தோழர்களுடன் பேச ஆரம்பிக்க வேண்டும். மேரி மகதலா முதன் முதலாக அவரோடு  இராயப்பர் மற்றும் யோவானிடம் சென்று காலியாக கிடந்த கல்லறையை பற்றி சொன்னார்கள். அதன் பிறகு மற்ற சீடர்களுக்கு சொன்னார்கள் .

அவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து இருக்கும்பொழுது -இயேசு அவர்களிடையே தோன்றி, அவரின் உயிர்ப்பை வெளிக்காட்டினார். தொடர்ந்து இதனை மற்ற நண்பர்களோடு கலந்து உரையாடிய பின்பு, பரிசுத்த ஆவியானவர் , அந்த சீடர்களிடம் ஆற்றலையும், அனுமதியும் கொடுத்து அவர்களின் அனுபவத்தை , யாரெல்லாம் கேட்க ஆசைபடுகிரார்களோ அவர்களிடம் நற்செய்தியை பகிர்ந்து கொள்ளவும், இந்த உலகை மீட்கவும் அனுப்ப படுகின்றனர்.
© 2017 by Terry A. Modica


No comments: