மே 28, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின்
விண்ணேற்பு பெருவிழா
Acts 1:1-11
Ps 47:2-3, 6-9
Ephesians 1:17-23
Matthew 28:16-20
Ps 47:2-3, 6-9
Ephesians 1:17-23
Matthew 28:16-20
மத்தேயு
நற்செய்தி
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)
(மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)
16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு
மலைக்குச் சென்றார்கள்.
17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.
18இயேசு அவர்களை அணுகி,
“விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.
19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக்
கொடுங்கள்.
20
நான்
உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்.
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்”
என்று கூறினார்
(THANKS to www.arulvakku.com)
கிறிஸ்துவை பின் செல்வதும், இன்னும் அதிகம் இறைபணி செய்ய
நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய நற்செய்தியில், இயேசு மிக பெரிய கட்டளையை
கொடுக்கிறார். இன்னும் ஒவ்வொரு திருப்பலி முடிவிலும் அதே கட்டளை குருவானவர் மூலம்
நமக்கு கொடுக்கபடுகிறது. " நீங்கள் போய் எல்லா
மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்"
சீடர் ஒரு மாணவர் ஆவார். கிறிஸ்துவை அப்படியே
பின்பற்றுபவர்களை நினைத்து கொள்ளுங்கள் , இயேசுவை பின்பற்றுகிறேன் என்று சொல்பவர்கள், எப்படி கிறிஸ்துவை
போல வாழ வேண்டும் என்பதை இன்னும் கற்று கொள்ளாமல் இருப்பவர்கள் , அவர்களின் இறை
கற்றலை நிறுத்தி விட்டவர்கள், பற்றி நினைத்து கொள்ளுங்கள். அவர்கள் விசுவாசம்
மட்டும் இந்த உலகை மாற்றி விட போவதில்லை. ஏனெனில் அவர்கள் இந்த உலக வாழ்க்கை தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், கிறிஸ்துவின் பிரசன்னமாக இந்த உலகில் இருப்பதில்லை.
இயேசு எந்த அளவிற்கு இவர்கள் மேல் அக்கறை
கொண்டுள்ளார் என்று அறியாமல் கவலையோடு இருப்பவர்கள். கிறிஸ்துவை வெளிபடுத்த
அவர்களுக்கு இன்னும் போதுமான பக்குவம் அடையவில்லை.
அவர்களுக்கெல்லாம் சீடர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என
அழைக்கபட்டுள்ளிர்கள். நீங்கள் சீடர்களாக இந்த இறைசெயல்களை செய்ய கட்டளை
இட்டுள்ளார். அதனால், அவை அனைத்துமே செய்ய முடியாதவை அல்ல. இந்த
"கட்டளை" என்ற வார்த்தையை எடுத்து விட்டு, இயேசுவோடு இணைந்து இறைபணி என்று பாருங்கள். “விண்ணுலகிலும் மண்ணுலகிலும்
அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது." என்று இயேசு
கூறுகிறார், அதனால், இயேசுவின் இறைபணியில் நாமும் பங்கு கொண்டு செய்யும்பொழுது ,
அவரின் ஆற்றலில் நாமும் கொஞ்சம் எடுத்து கொள்கிறோம்.
கிறிஸ்துவை சாதாரணமாக பின்பற்றுபவர்களாக நாம்
இருந்தால், மேலும் கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியில் முழுதும் வாழ, நாம் கற்று
கொண்டிருந்தால் , இயேசு நமக்கு எந்த வார்த்தைகளை மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும்
, எந்த மாதிரியான சூழ் நிலையில் அவர்களை நாம் அணுக வேண்டும் என்றும், நமக்கு கற்று
கொடுப்பார்.மேலும் நமக்கு அவர் கொடுத்த கட்டளையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள
வேண்டும் என்றும் இயேசு நமக்கு கற்று கொடுப்பார்.
இயேசுவோடு
இணைந்து, நம் அருகில் உள்ளவர்கள் இருதயத்தை கிறிஸ்துவின் பின்பற்றுபவர்களாக
நம்மால் மாற்ற முடியும். நம் எடுத்து காட்டான வாழ்வால் முதலில் அவர்களை மாற்ற
முடியும். மேலும் ஏன் நாம் கிறிஸ்துவை பின் பற்றுகிறோம் என்று அவர்களுக்கு விளக்கி
சொல்ல வேண்டும். கடவுளின் அன்பை அவர்களும் அறியும் படி நாம் எடுத்து சொல்ல வேண்டும்.
கடவுளின் கட்டளைகளை, மற்றும் கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் நாம் எடுத்து
சொல்ல வேண்டும். ,
" இதோ! உலக
முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்”
என்று
இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதே நமக்கு மிக பெரிய சக்தி கொடுக்கும்.
© 2017 by Terry A. Modica