Saturday, May 20, 2017

மே 21, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே  21, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 8:5-8, 14-17
Ps 66:1-7, 16, 20
1 Peter 3:15-18
John 14:15-21
யோவான் நற்செய்தி

15நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.

16உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

17அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.

18நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.

19இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்.

20நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

21என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.
(thanks to www.arulvakku.com)

இயேசு உங்களுக்கு  வல்லமையுள்ள துனையை தருகிறார்.
இன்றைய நற்செய்தியில், பரிசுத்த ஆவி நம் துணை, நமக்கு ஆலோசகராகவும், நம்மமோடு எப்பொழுதும் இருப்பவர என்றும் இயேசு நமக்கு கூ றுகிறார். கிரேக்க மொழியில், இதற்கு அர்த்தம் "கூடவே இருப்பவர்" என்பது ஆகும். மேலும் "தேற்றுபவர்" என்றும் "அறிவாளன்" என்ற அர்த்தத்தையும் குறிக்கும். இன்னும், வழக்குரைஞர், நீதி மன்ற துணையாளர் என்றும் அர்த்தம் கொள்ளபடுகிறது. நம்மை யாராவது தவறான குற்றம் சாட்டினால், தவறாக கண்டனம் செய்யப்படும்பொழுது நமக்காக பரிசுத்த ஆவியானவர் வாதிடிகிறார்.

இயேசு பரிசுத்த ஆவியை "உண்மையை வெளிபடுத்தும் தூய ஆவியார்" என்று குறிப்பிடுவதை உற்று நோக்குங்கள். மற்றவர்கள் நம்மை பற்றி தவறாக என்ன பேசினாலும், நம்மை பற்றி தவறான எண்ணங்கள் பல இருந்தாலும், கடவுளுக்கு உண்மை தெரியும். அவர்களின் தவறான நடத்தையிலிருந்து கடவுளின் உண்மை நம்மை விடுவிக்கும். கடவுள் நம் மேல் கொண்ட எண்ணம் தான் முக்கியம், நாம் எண்ணுவதை விட கடவுள் நம் மேல் மேலான எண்ணம் நர்மதிப்பும் கொண்டவர்.
அளவிற்கு அதிகமாகவே , நாம் நம் மேல் தவறான மதிப்பிடு கொண்டுள்ளோம். அதனால் தான் நாம் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று அதிகம் கவலை படுகிறோம். நாம் மனம் உவந்து, நம் பாவங்களை எண்ணி, நேர்மையாக ஒப்பு கொண்டு, அதற்காக மனம் வருந்தி, திருப்பலியின் பாவ மன்னிப்பு ஜெபத்திலும்,  அல்லது பாவ சங்கீர்த்தனம் செய்தும் இயேசுவோடு நாம் மீண்டும் உறவை புதுபித்து கொண்டால், இயேசு பாவிகளுக்கு சொன்னது போல :" நானும் தன்டனை கொடுக்க மாட்டேன், இனிமேல் பாவம் செய்யாதே, போ " என்று நம்மிடம் சொல்வார்.
உங்களை யாராவது தவறாக நினைத்து விடும் பொழுது, இயேசு அங்கே நேரிடையாக வரவேண்டும் என்றும் , உங்களை அந்த அநிதி சூழ் நிலையில் இருந்து மீட்க வேண்டும் என்று சில நேரங்களில் விரும்புகிறோம் அல்லவா? இயேசு சொல்கிறார், நம்மை அனாதைகளாக  விட்டு விடமாட்டேன் என்கிறார். -- அவரின் பரிசுத்த ஆவியானவர் நம்மோடு எப்பொழுதும் இருப்பவர், நம்மை காக்க வேண்டிய நேரத்திலு காத்து, நம் நல்ல குணாதியங்களை சொல்லி, மற்றவர்களிடமிருந்து நம்மை காப்பார்.
நாம் பாவம் செய்தால் கூட, உண்மையின் ஆவி, நமக்காக மோட்சத்தின் நீதிபதியிடம் பரிந்து பேசும். "விலைமதிப்பற்ற இந்த குழந்தை உண்மையாகவே பரிசுத்தமாக இருக்க விரும்புகிறது " என்று சொல்லும். நம்மிடம் அதே ஆவியானவர், "நான் உனக்கு பரிசுத்தமாக வளரவும் , பாவங்களை விட்டு விலகவும் சொல்லி தருகிறேன் " என்று சொல்கிறார். மற்றவர்களிடம் "நீங்கள் என்னை அன்பு செய்தால், என் நண்பன் இவரையும் அன்பு செய்யுங்கள்" என்று கூறுகிறார்.
© 2017 by Terry A. Modica




No comments: