Friday, August 18, 2017

ஆகஸ்டு 20 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆகஸ்டு  20 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 20ம் ஞாயிறு
Isaiah 56:1, 6-7
Ps 67:2-3, 5-6, 8 (with 4)
Romans 11:13-15, 29-32
Matthew 15:21-28

மத்தேயு நற்செய்தி

கானானியப் பெண்ணின் நம்பிக்கை
(
மாற் 7:24 - 30)
21இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.

22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்எனக் கதறினார்.

23ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்என வேண்டினர்.

24அவரோ மறுமொழியாக
இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்
 என்றார்.

25ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்என்றார்.

26அவர் மறுமொழியாக
பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல
 என்றார்.

27உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமேஎன்றார்.

28இயேசு மறுமொழியாக
அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்
என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
(thanks to www.arulvakku.com)
அயல் குலத்தவர்கள்
இன்றைய நற்செய்தி நாம் மற்றவர்களை பற்றி கருத்து சொல்வதை நாம் நமக்கு சுய சோதனை செய்து கொள்ள வேண்டும் என நமக்கு சவால் விடுகிறது. கானானிய பெண்னை பற்றி இயேசுவின் சீடர்கள் , இயேசு அவளை கண்டு கொள்ள வேண்டியதில்லை என இரண்டு காரணங்களால் அவர்கள் அந்த முடிவை எடுத்தனர். ஒன்று அவள் ஒரு பெண் மற்றும் அவள் இஸ்ரேயலர் அல்ல.
கண்டிப்பாக இயேசு உலக மக்கள் அனைவருக்கும் மிட்பாராக தான் வந்தார், ஆனால் அந்த சீடர்கள் அதனை அறிந்திருக்கவில்லை. அவர்கள் அறிவை விருத்தியாக்க, நமக்கும் அறிவுருத்தவும், இயேசு அந்த கானானிய பெண்ணின் விசுவாசத்திற்காக இயேசு காலம் தாழ்த்தினார். அந்த விசுவாசம் அந்த  பெண்  மேல் உள்ள அணைத்து குறைகளும் துடைத்து எறிந்து விடும்.
இறையரசிற்கு வருவதற்கு தயாராய் இல்லாதவர்களை தான் இயேசு அயல் குலத்தவர் என்று கருதினார். ஆனால் நாம் இன்னும் அந்த நிலைக்கு நாம் வரவில்லை. நமது திருச்சபையில் எல்லோருமே மிக தவறாக கணிக்கபட்டவர்களாக தான் இருக்கிறோம். பலர் தங்களையே வெளியாளாக தான் நாம் நினைத்து கொள்கிறோம். மிகவும் சுலபமாக நாம் நம்மை பற்றி தவறான முடிவிற்கு வருகிறோம்.
எடுத்து காட்டாக, கோவிலில் உங்கள் அருகில் இருப்பவரோடு கை குலுக்கி சிநேகம் கொள்ள நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா?  திருப்பலி முடிந்த பின்பு, எந்த அளவிற்கு சவுகரியத்தொடு , பிரீயாக நீங்கள் கவலையோடு இருப்பவர்களை அழைத்து பேசுவிர்களா?  தனியாக இருக்கும் தந்தையை அல்லது தாயை நீங்கள் கோவில் காரியங்களில் விழாக்களில், அவர்களை அழைத்து, கலந்து கொள்ள செய்து, அவர்கள் குழந்தைகளை நீங்கள் கவனித்து கொள்வீர்களா ?
நீங்கள் டைவர்ஸ் செய்தவர்களாக இருந்தால், உங்களை எல்லோரும் ஒதுக்கி வைக்கிறார்கள் என நீங்களே நினைத்து கொள்கிறீர்களா? அதுவும் தவறான கணிப்பு தான்.
ஓரினசேர்க்கை கொண்டவர்களும் ஒதுங்கி கொள்கிறார்கள், ஆனால், திருச்சபை, அவர்களை கனிவோடு பரிசுத்த வாழ்விற்கு திரும்பி வாருங்கள் என்று அழைக்கிறது ?
ஏன் பலர், குருவானவரோடு ஒரு நட்பில் இல்லாமல், தனியே விடப்பட்டுள்ளது போல நடந்து கொள்கிறார்கள்?
நமது சக கிறிஸ்தவர்களை தவறாக கணிப்பது அவர்களுக்கு துன்பம் கொடுப்பதாகும்.  மேலும், திருச்சபைக்கு தேவையான பல செயல்கள் செய்ய முடியாமல் போகும். ஏனெனில் அதனை யார் செய்ய வேண்டுமோ அவர்களை நாம் ஒதுக்கி விடுகிறோம்.  ஆனால், நாம் சுய சிந்தனையோடு, மற்றவர்களை பற்றி தவறான எண்ணம் கொள்ளாமல், இயேசுவின் ஆற்றலை பெற்று கொண்டு, கிறிஸ்துவாக அவர்களுக்கு நாம் இருந்து, கிறிஸ்துவை அவர்களிடமிருந்து பெற்று கொள்வோம்.
© 2017 by Terry A. Modica


No comments: