Saturday, April 7, 2018

ஏப்ரல் 8 2018 ஞாயிறு நற்செய்தி சிந்தனை மறையுரை


ஏப்ரல்  8 2018 ஞாயிறு நற்செய்தி சிந்தனை மறையுரை
பாஸ்கா கால 2ம் ஞாயிறு

Acts 4:32-35
Ps 118:2-4, 13-15, 22-24
1 John 5:1-6
John 20:19-31
யோவான் நற்செய்தி

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16-20; மாற் 16:14-18; லூக் 24:36-49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்
 என்றார்.

22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி
தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.


23
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா
 என்றார்.
இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.

25மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்என்றார்.
26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
 என்று வாழ்த்தினார்.
27பின்னர் அவர் தோமாவிடம்
இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்
 என்றார்.
28தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!என்றார்.
29இயேசு அவரிடம்
நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்
 என்றார்.
முடிவுரை: நூலின் நோக்கம்
30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.

31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
(thanks to www.arulvakku.com)


"நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!"  என்று  தோமா ஆச்சர்யத்துடன் இயேசுவை நோக்கி  குறிப்பிடுகிறார். இதே ஆச்சரியத்துடன் நாமும் தினமும் திருப்பலியில் திவ்ய நற்கருணையை நோக்கி நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு திருப்பலியிலும் இதனை புதுபித்து கொள்ளவேண்டும். இது மிக பெரிய சந்தோசமான நிகழ்வு, கிறிஸ்துவை ஆண்டவர் என்று அவரின் பிரசன்னத்தை நோக்கி (அப்பமும் ரசமுமாக) நாம் ஏற்றுகொள்வது நமக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
புனித இரண்டாம் ஜான் பால் திவ்ய நற்கருணை பற்றிய அவருடைய குறிப்பில் "கிறிஸ்துவை பற்றி நாம் சிந்திக்கையில், கிறிஸ்து பல வேறு பரிமானங்களில் , அவரின் பிரசன்னத்தை நாம் ஏற்றுகொள்ளும்போது, இதை எல்லாவற்றையும் விட கிறிஸ்து திவ்ய நற்கருணையிலும் , திராட்சை இரசத்திலும்  இருப்பது தான் மிக உயர்ந்த பிரசன்னம்"  என்று கூறுகிறார்.
இயேசு உண்மையாகவே உயிரோடு திரும்பி வந்துள்ளார் என்பதை அவரது சீடர்கள் சரியாக புரிந்து அவர்கள் ஏற்று கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் இயேசு செய்தார். அவர் முழு உடலோடு திரும்பி வந்துள்ளார் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். முதலில் சீடர்கள் அவரை ஆவி என்றே நினைத்தனர். அல்லது அவரை எப்படி ஏற்றுகொள்வது என்று குழம்பி போயினர். உயிர்த்தெழுதலையும் ஒரு அற்புத நிகழ்வாக ஏற்றுகொண்டனர்.
இயேசு அவர்களின் மன கண்ணை திறந்தார். அந்த அற்புதத்தை அவர்கள் நம்ப , அவரின் காயங்களை காட்டினார். ஒவ்வொரு திருப்பலியிலும் அதே காயங்களை நமக்கும் காண்பிக்கிறார்.

நம் சொந்த அறிவிலும், அனுபவத்திலும், சாதாரன அப்பத்தில் கிறிஸ்துவின் உடல் இருப்பதை நாம் உண்மையாக அறிந்திருக்க சாத்தியம் இல்லை.  -- உடைந்த , உடல் காயமடைந்து இரத்தம் சிந்திய அதே உடல் தான் இங்கே திருப்பலியில் இருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை , அப்படியிருக்கையில் அங்கே  உயிர்த்தெழுந்த இயேசுவும் இருக்கிறார்  என்பதை நாம் எப்படி அறிய போகிறோம்.   
திருப்பலியில், கிறிஸ்துவோடு இணைந்து நித்திய வாழ்வில் இணைய நாம் செல்கிறோம். நமது பாவங்களுக்காக கிறிஸ்து பெரிய வெள்ளியில் செய்த தியாகத்தை நாமும் நமது சொந்த வாழ்வில் செய்ய வேண்டும். என்று நாம் அறிந்து கொள்ளும் பொழுது, அவரின் காயங்களை பார்த்து நாம் உண்மையை அறிந்து கொள்வோம். அதன் பிறகு தான் நாம் திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார் என்ற உண்மை நமக்கு புலப்படும்.
இதன் முதல் அடியாக, நாம் திவ்ய நற்கருணையை முழுதுமாக விசுவசித்து, கிறிஸ்து நமக்காக இறந்தார் , உயிர்த்தெழுந்து நம்மை மோட்சத்திற்கு மீட்டு செல்கிறார் என்று நம்புவோம். இறுதி செயலாக நாம் இயேசுவோடு இணைந்து செல்ல நாம் ஆசைப்படும்போழுது , அதற்காக அவர் நம்மிடம் வர வேண்டும் என ஏங்கி அவரை நம்முள் ஏற்று கொள்ளும் பொழுது , அவர் நம்மையும் அவரை போல மாற்ற வேண்டும் என விரும்புகிறோம். எப்படி நம்மை இயேசு மாற்ற விரும்புகிறாரோ அதே போல மாற்ற நாம் அவரை அனுமதிக்க வேண்டும். நாம் எப்பொழுதெல்லாம் திவ்ய நற்கருணையை பார்க்கிறோமோ அப்போதெல்லாம் , "என் ஆண்டவரே ஏன் கடவுளே" என்று அழைப்போம்.
© 2018 by Terry A. Modica


No comments: