Saturday, May 26, 2018

மே 27 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை


மே  27 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை
மூவொரு கடவுளின் திருவிழா
Deut 4:32-34, 39-40
Ps 33:4-6, 9, 18-20, 22 (with 12b)
Rom 8:14-17
Matt 28:16-20

மத்தேயு நற்செய்தி

இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14-18; லூக் 24:36-49; யோவா 20:19-23; திப 1:6-8)
16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.
17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.

18இயேசு அவர்களை அணுகி
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
 என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)
மூவொரு கடவுளுக்கு  நீங்கள் என்றுமே சிறப்பானவர்கள்!
கடவுளுக்கு நீங்கள் முக்கியமானவர்கள். நீங்கள் கடவுளோடு சேரந்தவர்கள் -- அனைத்து கடவுளோடும்: தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவி அனைத்திலும்  நீங்கள் சேர்ந்தே இருக்கிறீர்கள்.
இன்றைய ஞாயிறு நற்செய்தியில் இயேசு மூவொரு கடவுள் பெயரால், திருமுழுக்கு கொடுங்கள் என்று சொல்வது போல,  ஏன் இது முக்கியமானது? ஏன் மூவொரு கடவுள்  பெயரால் திருமுழுக்கு கொடுங்கள் என்று சொல்கிறார். ஏன் நமது மீட்பர் இயேசுவின் பெயரால் மட்டும் திருமுழுக்கு கொடுக்க கூடாது என்று நாம் கேட்கலாம், ஏனெனில், கடவுள் அந்த மூவொரு பிரசன்னத்தில் தான் முழுமை அடைகிறார் , முழு கடவுளாக இருக்கிறார். உங்களோடு தனிப்பட்ட உறவை வைத்து கொள்ள விரும்பிகிறார், உண்மையான நட்புடன் இருக்க விரும்புகிறார்.

மூவொரு கடவுளோடும் நம் உறவுகள் உண்டு என்பத புரிந்து கொண்டு, நாம் அவர்களோடு அமர்ந்து, தந்தை கடவுளோடும், மீட்பர் மகனோடும், பரிசுத்த ஆவியுடனும் நீங்கள் பேசமுடியுமா? நீங்கள் சோர்ந்திருக்கும் போது, தந்த கடவுளின் மடியில் அமர்ந்து, அவரின் ஆறுதலை பெற்று இருக்கிறீர்களா? பல சோதனைகளோடு போராடி கொண்டு இருக்கும் பொழுது, இயேசுவின் ஆற்றல் நம்மில் வருவதை நீங்கள் உணர்ந்து உள்ளீர்களா? கவலையோடு இருக்கும்போது , குழப்பத்தில் இருக்கும்போது , விசுவாசத்தில் வாழ நாம் போராடும்போது, பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை நாம் அறிவோமா?
இயேசுவின் தந்தை , நமக்கும் சொந்த "அப்பா" தான்.  மனித தந்தை போல நம்மை கண்டிக்கும் அதிகாரம் கொண்டவராக இருக்கிறாரா? இல்லை. உங்கள் திருமுழுக்கில் தந்தை கடவுள் உங்களை தத்து எடுத்து கொண்டுள்ளார். ஏனெனில் நாம் அனைவருக்கும் அவரே தந்தை. நம் தேவைகளை அறிந்து அனைத்தும் கொடுக்கிறார்.
பரிசுத்த ஆவி இதனை உறுதி செய்கிறார். கடவுளின் ஆவி நம்மை அரவணைத்து , ஆறுதல் கொடுத்து, நாம் என்ன செய்ய வேண்டும், எவ்வாறு வாழ வேண்டும், கடவுளின் அன்பில் சந்தோசத்துடன் எவ்வாறு இருக்க வேண்டும் என நமக்கு அறிவுறுத்துகிறார். அதே அன்பினால் தான் இயேசு தன்னையே தியாகம் செய்து, நம் தண்டனையிலிருந்து , பரிசுத்த ஆவியின் துணையுடன் நம்மை காத்தார்.
கடவுள், மூவொரு பிரசன்னத்தில் , உதவியாளராகவும், நோய் தீர்ப்பவராகவும், நமக்கு சக்தி கொடுப்பவராகவும், விசுவாசத்தை உருதியாக்குபவர்களாகவும் இருக்கிறார். அவரது முழு தெய்வீகத்தில், நாம் முழுமையாக வாழவேண்டும் என விரும்புகிறார்.! அவரிடமிருந்து அனைத்தும் பெற்று நாம் பலன் அடைய விரும்புகிறார்.
திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவனாக, அர்ச்சிக்கப்பட்ட கத்தோலிக்கர்களாக , கடவுளின் முழு பிரசன்னமும் திவ்ய நற்கருணையில் நம்ம்மிலும் இருப்பதால், எதனை பற்றிய கவலையும் நமக்கு தேவை இல்லை.
© 2018 by Terry A. Modica

Saturday, May 19, 2018

பரிசுத்த ஆவியின் பெருவிழா


மே  20 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை
பரிசுத்த ஆவியின் பெருவிழா
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15

யோவான் நற்செய்தி

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16-20; மாற் 16:14-18; லூக் 24:36-49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்
 என்றார்.

22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி
தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

23
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா
 என்றார்.
(thanks to www.arulvakku.com)

நம் வாழ்வை முழுமையை பரிசுத்த ஆவியில் எழுப்புவோம்
பரிசுத்த ஆவியானது கிறிஸ்துவின் ஆவி நமக்கு தாராளமாக கொடுக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நாம் நம் கிறிஸ்துவ வாழ்வையும் இறை பணியையும் பரிசுத்தமாக நாம் தொடர முடியும். நம் சொந்த திறமைகளினால் இயேசுவை போல மாற முடியாது. ஆனால் அவரின் ஆவி நம்மில் உயிர்ப்போடு இருந்தால், நாம் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை கொண்டிருப்போம். அவரின் இறைபிரசன்ன அன்பையும் , இறை அமைதியையும், இயேசுவின் பொறுமையையும் , மேலும் இயேசுவில் நாம் காணும் அனைத்தும் கொண்டிருப்போம்.
ஞானஸ்நானம் மூலம் நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்று கொண்டீர்கள். அதன் தொடர்ச்சியாக, உறுதி பூசுதல் மூலம் பரிசுத்த ஆவி நம்மில் இருப்பதை நாம் நம்பிக்கை கொண்டு நம் இறைவாழ்வை தொடர்கிறோம். பெந்தகொஸ்தே நாளில் இருந்து, பரிசுத்த ஆவியை பெற்று கொண்டு, இறை பணியை தொடரும் அனைவர் மூலம் கடவுள் இந்த உலகை மாற்றி கொண்டிருக்கிறார். நமக்கும் அவரின் ஆவியை தாராளாமாக வழங்குகிறார். அதன் மூலம் அவர் நமக்கு கொடுக்கும் இறைபணிகளில் நாம் வெற்றியடைய செய்கிறார். ஆனால், அவரின் பரிசுத்தத்தையும் , ஆற்றலையும் வெளிபடுத்துவது நம்மை பொறுத்தது.
பரிசுத்த ஆவியின் ஜெபத்தில் என்னோடு இணையுங்கள்:
அன்பு இயேசுவே, உமது பரிசுத்த ஆவியின் முழுமையை என்னில் கிளர்ந்து எழ செய்யும். உங்களின் உண்மைகளை நான் முழுமையாக புரிந்து கொள்ள உதவி செய்யும், மேலும், உங்கள் இறை உண்மைகள் முழுதும் புரிந்து கொள்ளும் முன்பே, எனது இருதயத்தை திறந்தருளும்.
பரிசுத்த ஆவியே!, மற்ற எல்லாவற்றையும் விட இறையரசை பற்றி எனக்கு தெரியபடுத்தும். உன்னை அல்லாத வேறு எந்த விஷயத்தாலும் நான் ஆசைபட்டிருந்தால் அதனையும் தெரியபடுத்தும், மேலும், அதனை அனைத்தையும் துரத்த எனக்கு உதவி அருளும். எனக்கு நீ மட்டுமே வேண்டும்.
பரிசுத்த ஆவியே!, எனது பாவங்களை நினைத்து மனம் வருந்தி , அதனால் நான் மற்றவர்களுக்கு செய்த பாதகத்தை நினைத்து மனம் வருந்த எனக்கு உதவி அருளும். எனக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும் என நான் வேண்டும் பொழுது, எனக்கு ஆறுதல் அளித்தருளும், உமது ஆவியில் நான் வளர முழுமையாக என்னிடம் வந்தருளும். மேலும், என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் உம்மால் பயன் பெற நான் அவர்களிடம் உம்மை பகிர்ந்து கொள்ள உதவி அருளும்.
இயேசு "நீங்கள் போய் உலகெங்கும் நற்செய்தியை அறிவியுங்கள்!" என்று அவர்களுக்கு கட்டளை இடுகிறார். எனது திறமைகளை , ஆற்றலை உபயோகபடுத்தி இந்த உலகத்தில் மாறுதலை கொண்டுவாருங்கள் என்று கூறுகிறார். எனக்காக சில விசயங்களை செய்ய வேண்டும் , நானே செய்ய வேண்டும், மேலும் சில வற்றை செய்ய கூடாது என நினைக்கிறேன் ஆனால், தற்போது உன்னிடம் முழுதும் சரணடைகிறேன், எனது எண்ணங்கள், ஆசைகள், என்னால் செய்ய முடியாதவை, மேலும் எனது நோக்கங்கள் அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். உமக்கு உபயோகமான ஆளாக இருக்க விரும்புகிறேன். நீங்கள் எங்கே அழைத்து செல்கிறீர்களோ அங்கே செல்ல விரும்புகிறேன். பரிசுத்த ஆவியே என்னை பல ஆற்றல்களுடனுன் அனுப்பி வை, அங்கே சென்று இயேசுவின் வெற்றியின் அன்பை உலகெங்கும் பரம் ஆணையிடும்.
© 2018 by Terry A. Modica