Saturday, May 26, 2018

மே 27 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை


மே  27 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை
மூவொரு கடவுளின் திருவிழா
Deut 4:32-34, 39-40
Ps 33:4-6, 9, 18-20, 22 (with 12b)
Rom 8:14-17
Matt 28:16-20

மத்தேயு நற்செய்தி

இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14-18; லூக் 24:36-49; யோவா 20:19-23; திப 1:6-8)
16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.
17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.

18இயேசு அவர்களை அணுகி
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
 என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)
மூவொரு கடவுளுக்கு  நீங்கள் என்றுமே சிறப்பானவர்கள்!
கடவுளுக்கு நீங்கள் முக்கியமானவர்கள். நீங்கள் கடவுளோடு சேரந்தவர்கள் -- அனைத்து கடவுளோடும்: தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவி அனைத்திலும்  நீங்கள் சேர்ந்தே இருக்கிறீர்கள்.
இன்றைய ஞாயிறு நற்செய்தியில் இயேசு மூவொரு கடவுள் பெயரால், திருமுழுக்கு கொடுங்கள் என்று சொல்வது போல,  ஏன் இது முக்கியமானது? ஏன் மூவொரு கடவுள்  பெயரால் திருமுழுக்கு கொடுங்கள் என்று சொல்கிறார். ஏன் நமது மீட்பர் இயேசுவின் பெயரால் மட்டும் திருமுழுக்கு கொடுக்க கூடாது என்று நாம் கேட்கலாம், ஏனெனில், கடவுள் அந்த மூவொரு பிரசன்னத்தில் தான் முழுமை அடைகிறார் , முழு கடவுளாக இருக்கிறார். உங்களோடு தனிப்பட்ட உறவை வைத்து கொள்ள விரும்பிகிறார், உண்மையான நட்புடன் இருக்க விரும்புகிறார்.

மூவொரு கடவுளோடும் நம் உறவுகள் உண்டு என்பத புரிந்து கொண்டு, நாம் அவர்களோடு அமர்ந்து, தந்தை கடவுளோடும், மீட்பர் மகனோடும், பரிசுத்த ஆவியுடனும் நீங்கள் பேசமுடியுமா? நீங்கள் சோர்ந்திருக்கும் போது, தந்த கடவுளின் மடியில் அமர்ந்து, அவரின் ஆறுதலை பெற்று இருக்கிறீர்களா? பல சோதனைகளோடு போராடி கொண்டு இருக்கும் பொழுது, இயேசுவின் ஆற்றல் நம்மில் வருவதை நீங்கள் உணர்ந்து உள்ளீர்களா? கவலையோடு இருக்கும்போது , குழப்பத்தில் இருக்கும்போது , விசுவாசத்தில் வாழ நாம் போராடும்போது, பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை நாம் அறிவோமா?
இயேசுவின் தந்தை , நமக்கும் சொந்த "அப்பா" தான்.  மனித தந்தை போல நம்மை கண்டிக்கும் அதிகாரம் கொண்டவராக இருக்கிறாரா? இல்லை. உங்கள் திருமுழுக்கில் தந்தை கடவுள் உங்களை தத்து எடுத்து கொண்டுள்ளார். ஏனெனில் நாம் அனைவருக்கும் அவரே தந்தை. நம் தேவைகளை அறிந்து அனைத்தும் கொடுக்கிறார்.
பரிசுத்த ஆவி இதனை உறுதி செய்கிறார். கடவுளின் ஆவி நம்மை அரவணைத்து , ஆறுதல் கொடுத்து, நாம் என்ன செய்ய வேண்டும், எவ்வாறு வாழ வேண்டும், கடவுளின் அன்பில் சந்தோசத்துடன் எவ்வாறு இருக்க வேண்டும் என நமக்கு அறிவுறுத்துகிறார். அதே அன்பினால் தான் இயேசு தன்னையே தியாகம் செய்து, நம் தண்டனையிலிருந்து , பரிசுத்த ஆவியின் துணையுடன் நம்மை காத்தார்.
கடவுள், மூவொரு பிரசன்னத்தில் , உதவியாளராகவும், நோய் தீர்ப்பவராகவும், நமக்கு சக்தி கொடுப்பவராகவும், விசுவாசத்தை உருதியாக்குபவர்களாகவும் இருக்கிறார். அவரது முழு தெய்வீகத்தில், நாம் முழுமையாக வாழவேண்டும் என விரும்புகிறார்.! அவரிடமிருந்து அனைத்தும் பெற்று நாம் பலன் அடைய விரும்புகிறார்.
திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவனாக, அர்ச்சிக்கப்பட்ட கத்தோலிக்கர்களாக , கடவுளின் முழு பிரசன்னமும் திவ்ய நற்கருணையில் நம்ம்மிலும் இருப்பதால், எதனை பற்றிய கவலையும் நமக்கு தேவை இல்லை.
© 2018 by Terry A. Modica

No comments: