செப்டம்பர் 30 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Numbers
11:25-29
Ps 19:8, 10, 12-14
James 5:1-6
Mark 9:38-43, 45, 47-48
Ps 19:8, 10, 12-14
James 5:1-6
Mark 9:38-43, 45, 47-48
மாற்கு நற்செய்தி
இயேசுவின் பெயரால் பேய் ஓட்டியவர்
(லூக் 9:49-50)
(லூக் 9:49-50)
38அப்பொழுது யோவான் இயேசுவிடம், “போதகரே , ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.
39அதற்கு இயேசு கூறியது:
“தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.
40ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.✠
41நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”✠
பாவத்தில் விழச்செய்தல்
(மத் 18:6-9; லூக் 17:1-2)
(மத் 18:6-9; லூக் 17:1-2)
42“என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
43உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.✠
45நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது
47நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.✠
48நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.✠
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் ,
நமக்கெதிராக இல்லாதவர்கள் நம் சார்பாக இருக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார். இதன்
உண்மை தன்மை நம்மை பல நேரங்களில் ஆச்சரியத்திற்கு கொண்டு வருகிறது.
மாறாக, சில நேரங்களில்,
நமக்கு எதிராக ஒருவர் இருக்கிறார் என நாம் நினைக்கலாம், ஆனால் அவர் அப்படி
நினைத்திருக்கவே மாட்டார். எடுத்து காட்டாக ஒருவர் நீங்கள் கேட்க கூடாத உண்மையை
சொன்னால், நாம் அவரை எதிரியாக நினைத்து கொள்கிறோம். ஆனால் , அவர் உண்மையில் கடவுள்
கொடுத்த தூதர் ஆவார்.
அதே போல , பல வேளைகளில் பலர்
நம்மோடு ஓட்டியிருப்பர், அவர்களின் நலனுக்காக நம்மோடு இருப்பர். கடவுள் நமக்கு
இட்ட அழைப்பை பற்றி கவலை பட மாட்டார்கள்.
மற்றும் சில நேரங்களில் சிலர்
இறைபணிகளை செய்வார்கள், ஆனால், அவர்கள் நாம் விரும்பும் படி செய்ய மாட்டார்கள்.
அதனால் , கடவுள் விரும்பும் படி அவர்கள் செய்வதில்லை என்று நாம் நினைத்து
கொள்கிறோம். நீங்கள் யாரிடமாவது உங்களுக்காக ஜெபிக்க கேட்டுள்ளீர்களா? அவர்கள்
அதற்கு மாறாக ஜெபித்தார்களா?
பல வருடங்களுக்கு முன்பு,
எனது கணவர் வேலை செய்யும் இடத்தில் , பலரை வேலை விட்டு அனுப்பினர். எனது நண்பர்
ஒருவரை, எனது கணவருக்கு புது வேலை கிடைக்க ஜெபிக்க சொன்னேன். ஆனால் அவளோ அவரின் கம்பெனிக்காக வேண்டினாள் ,
அதனால் எனது கணவர் வேலை விட்டு செல்ல வேண்டியதில்லை. எனது எதிர்பார்ப்போ, அவருக்கு
நல்ல கம்பெனி கிடைக்க வேண்டும் என்பது தான், அதனால், அவளின் ஜெபத்தை நான்
ரசிக்கவில்லை. ஆனால் இறுதியில், கடவுள் என்ன விரும்பினார் என்று அவள் மட்டும் தான்
வேண்டினாள்.
இதனையெல்லாம் நாம்
அறிந்து கொள்ள, யார் நம்மோடு இருக்கிறார்கள், அல்லது நம் பிரசினைகள் எதற்காக
வந்தது, என்று நாம் முழுதும் அறிந்து கொள்ள , இயேசுவோடு தனிமையில் நேரம் செலவிட்டு
நாம் அறிந்து கொள்ள வேண்டும்.நமது பயத்தையும், கோபத்தையும், அவரிடம் கொடுத்து
விட்டு, யாரையெல்லாம் மன்னிக்க வேண்டுமோ அவர்களை மன்னித்து , தெய்வீக
செய்திகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும். இயேசுவிடமிருந்து நமக்கு தேவையான
செய்திகள் வரும்.
உண்மையாகவே ஒருவர் நமக்கு
எதிராக இருந்தால் கூட, நாம் அமைதியாக ஜெபத்தில் நேரம் செலவிட்டு, நமக்கு பரிசுத்த
ஆவியிடமிருந்து ஞானம் கிடைக்க வேண்டினாள், கடவுள் நம்மமோடு இருக்கிறார், அது தான்
நமக்கு மிகவும் முக்கியம். அவர் நமக்கு உற்சாகத்தையும் , சக்தியையும் கொடுத்து நம்
பிரசினைகள் சமாளிக்க உதவி செய்வார்.
© 2018 by Terry A. Modica
No comments:
Post a Comment