நவம்பர் 25 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை
கிறிஸ்து அரசர் பெருவிழா
Daniel
7:13-14
Ps 93:1-2, 5
Revelation 1:5-8
John 18:33b-37
யோவான் நற்செய்தி
Ps 93:1-2, 5
Revelation 1:5-8
John 18:33b-37
யோவான் நற்செய்தி
33பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று
இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.
34இயேசு மறுமொழியாக,
“நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை
வைத்துக் கேட்கிறீரா?”
என்று கேட்டார்.
35அதற்கு பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை
என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டான்.
36இயேசு மறுமொழியாக,
“எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி
போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என்
காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல”
என்றார்.
37பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு,
“அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என்
பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர்
அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்”
என்றார்.✠
38பிலாத்து அவரிடம், “உண்மையா? அது என்ன?” என்று கேட்டான்.✠
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்து அரசர் -
அனைத்துலக அரசர் பெருவிழா
கிறிஸ்து தான் அரசரா என்ற
கேள்வி இன்றைய நற்செய்தியில் வந்த பொழுது, இயேசு
தெய்வீக அரசரை பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள உதவுகிறார். அவர் அரசர் இல்லை
என்று சொல்லாமால், ".
உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்"
, அவர் ஒன்றும் இந்த உலகத்தின் அல்லது ஒரு நாட்டின் அரசர் அல்ல; அவர் உண்மையின்
அரசர், உண்மையை ஆட்சி செய்பவர்.
இயேசு நமது போதகர் என்று
நாம் ஏற்று கொள்ளாமல், இந்த உலக பொய்யான தகவலை கொண்டு, போலியான வாழ்வில் நாம்
இருந்தோமானால், இயேசு தான் உண்மையின் போதகர் என்று இவைகள் அனைத்தும் மறைத்து
விடும். இந்த உலக பொய்கள் அனைத்தும் சாத்தானின் முனைப்பில் நடப்பவை. சாத்தான் இவ்வுலக
ஆட்சியை ஆட்சி செய்கிறது என்ற எண்ணமே சாத்தான் உண்மையை மறைக்கிறது. உண்மையில்
இப்படி நடக்கவில்லை. இயேசு இந்த உலகிற்கு வந்து சாத்தானின் அதிகாரங்களை அழித்து,
உயிரினம் அனைத்தையும் அவரின் இறைய்ரசிற்கு அழைத்து சென்றுள்ளார் என்பதை நாம்
நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் அரசமைப்பை ஏற்று கொண்டவர்கள் அனைவரும்,
அவரின் குரலை கேட்டு , உண்மையில் வாழ்வர் .+
நாம் பாவம் செய்யும்
பொழுது, நாம் உண்மையின் நிலைமையை புரிந்து கொள்ளாததால் நாம் பாவம் செய்கிறோம்.
இயேசு இன்னும் இவ்வுலகின் முழு அரசராக வில்லை.
எடுத்து காட்டாக, யாராவது
உங்களிடம் ஒரு உதவி கேட்டு, அதனை உங்களால் கொடுக்க முடியாத தருணத்தை நினைத்து
கொள்ளுங்கள். கோவில் கட்டுவதற்கு தேவையான
பணமாக இருக்கலாம், நோயுற்ற சகோதரருக்கு உத வேண்டி இருக்கலாம். அல்லது உங்களோடு
வேலை செய்பவர், உங்கள் அளவிற்கு விசுவாசம் இல்லாதவராக இருக்கலாம். அல்லது வயதான
பெற்றோர்கள் உங்கள் உதவியை நாடி இருக்கலாம்.
அவர்களின் தேவையை பூர்த்தி
செய்ய உங்களிடம் போதுமான வசதிகள் இல்லை? நீங்கள் சோர்ந்து போய் இருகிறீர்களா ?
உங்கள் சுமையே உங்களை அழுத்துகிறதா? நம்
உடல் சார்ந்து யோசிக்கும் பொழுது, நாம் அடுத்தவர்களுக்கு உதவ போனால், நாம் எதுவும்
சந்தோசமாக இருக்க முடியாது என்று நினைக்க தோணும். இது தான் உண்மையை மறைக்கும்
சாத்தானின் வேலை. நம் சொந்த வேலைகளை
பார்த்து கொண்டு இருந்தாலே , நமக்கு மகிழ்ச்சி என்று சாத்தான் அடுத்தவருக்கு சேவை
செய்யாமல் இருக்க செய்யும்.
இயேசுவின் குரலை கேட்டு,
நம் வாழ்வை மாற்றினால், அது தான் சந்தோசமான வாழ்க்கை தரும். இது தான் உண்மை.
"நல்ல சமாரியன் போல
இருங்கள், மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள், " "இன்னும் சில தூரம்
செல்லுங்கள்" என்று இயேசு சொல்கிறார். அவரின் போதனைகளை , உண்மையை நாம் நம்ப வேண்டும்.
கடவுளின் விருப்பத்தை
நாம் நிறைவேற்ற, நமது புரிதல் இன்னும் வளரும். நமது இறைபணியில் இன்னும் அதிகம் நாம் கவனம்
செலுத்த, கடவுளை பற்றிய நமது புரிதலும் சந்தோசமும் அதிகரிக்கும். நமது இறைபணியில்
கிடைக்கும் விளைவுகளை, அதனால் வரும் ரிசல்ட் நமக்கு மிக பெரிய சந்தோசம் வரும். ஆனால்
பாவம் செய்யும்போது , இந்த ரிசல்டை நாம் பார்ப்பதில்லை. இதனை தான் கிறிஸ்து இங்கே
சொல்கிறார். அவரின் ஆட்சியில், பரிசுத்த ஆவியின் ஞானத்துடன் , இந்த பாவ வாழ்வை
விட்டு நாம் வெளி வர முடியும்.
© 2018 by Terry A. Modica