Friday, November 16, 2018

நவம்பர் 18 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை


நவம்பர் 18 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Daniel 12:1-3
Ps 16:5, 8-11
Hebrews 10:11-14, 18
Mark 13:24-32

மாற்கு நற்செய்தி

மானிடமகன் வருகை
(
மத் 24:29-31; லூக் 21:25-28)
24“அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.

25விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.

26அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.

27பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
அத்தி மர உவமை
(
மத் 24:32-35; லூக் 21:29-33)
28“அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.

29அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

30இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

31விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(
மத் 24:36-44)
32“ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை ?
உங்களுக்கு தீராத பிரச்சினை எதுவும் இருக்கிறதா? இயேசு எங்கே? இன்றைய ஞாயிறின் நற்செய்தியில் இயேசு அவரின் இரண்டாம் வருகையை பற்றி பேசுகிறார். ஆனால் அவரின் முதல் வருகையே இன்னும் முடிக்கவில்லை.! அவரின் சீடர்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணியது.
இயேசு இறந்த பிறகும், அவர் உயிர்த்தேழுந்தும், மோட்சத்திற்கு எழுந்தருளியும் , பார்த்த சீடர்கள்,  இன்னும் குழப்பமான மனதோடு அவர்கள் இருந்தார்கள். "இந்த தலைமுறை" கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிறைவேறும் வரை அழியாது என்று அவர் சொன்ன்னதை இன்னும் நினைவில் வைத்தருந்தனர். இருந்தும் காலங்கள் ஓடின. அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவராக இறந்தனர். இயேசு இன்னும் மேகத்தின் நடுவே வரவில்லை.   இந்த வாழ்வின் துயரம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
உங்கள் வாழ்வில் இன்னும் தீர்க்கபடாத பிரச்சினை ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இயேசு இரண்டாம் முறை வந்து அணைத்து சாத்தான்களையும் ஒழித்து விட வேண்டும் என ஆசை  படுகிறீர்களா? இயேசு என்ன சொன்னார் என்று பாருங்கள்: "இந்த விஷயங்கள் நடக்கும் பொழுது, நான் நெருங்கி விட்டேன் , கதவின் அருகில் இருக்கிறேன்"  ஆனால் அவர் ஒரு தேதியை சொல்ல வில்லை. அவர் சீடர்களுக்கும் சரி, நமக்கும் சரி, கடவுளின் நேரத்தை, ஒரு துப்பு கூட கொடுக்கவில்லை. (அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது)  இயேசு இங்கே என்ன சொல்ல வருகிறார். ?
அவரின் அருகாமை!
கடந்த 2000ம் வருடங்களாக, நாம் அனைவரும் "இந்த தலைமுறையின்" மக்களாக இருக்கிறோம். இயேசுவின் இரண்டாம்  வருகை வரும் வரை நாம் ஒழிந்து போகமாட்டோம். கிறிஸ்து மனிதராக இருந்த தலைமுறையை சார்ந்தவர்கள் கிறிஸ்துவின் உடலாக இந்த திருச்சபையில் நாம் இருக்கிறோம். கடவுளின் மகனின் தியாகத்தால், நாம் தந்தை கடவுளின் மகனாக இந்த தலைமுறையின் குழந்தைகளாக உள்ளோம்.
மீட்பின் இறுதி நாட்கள் முதல் பரிசுத்த ஆவியின் கொடை பெற்ற நாளில் இருந்து துவங்குகிறது. இந்த காலம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை தொடரும். இது பரிசுத்த ஆவியின் காலம் ஆகும். இங்கே கிறிஸ்துவின் இறைபணி நம் மூலம், பரிசுத்த ஆவியுடன் தொடர்கிறது.
அத்தி மர கதையின் மூலம் நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம், கோடை காலம் வரும்போது நாம் பிரித்தறியும் ஆற்றல் பெற வேண்டும். இதையே மாற்றி சொல்வதனால், நல்ல நேரத்தையும், கேட்ட நேரத்தையும் பிரித்தறிதல் வேண்டும். இயேசு அருகில் இருக்கிறாரா என்பதை  அறிதல் வேண்டும். திவ்ய நற்கருணையில் நம்மோடு அவர் இருப்பதை அறிதல் வேண்டும். மற்ற எல்லா நேரங்களிலும் பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார்.
இயேசு உங்களின் அடுத்த முயற்சியின் வாயிலில் இருக்கிறார், மோட்சத்தின் பயணத்தில் நமது அடுத்த தடத்தில் இயேசு இருக்கிறார். வாயில் கதவு திரைப்பட வேண்டும். அதன் மூலம் நாம் உள்ளே செல்ல முடியும். இயேசு தான் அந்த கதவை திறக்கிறார். பரிசுத்தத்தின் வாயில், அன்பின் வாயில் அது தான்.  அதனுள் சென்று நமக்கான இறைபணியை இந்த உலகில் தொடர்வோம்.
© 2018 by Terry A. Modica


No comments: