Friday, February 22, 2019

பிப்ரவரி 24 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை



பிப்ரவரி  24 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 7ம் ஞாயிறு
1 Samuel 26:2,7-9,12-13,22-23
Ps 103:1-4,8,10,12-13
1 Corinthians 15:45-49
Luke 6:27-38

லூக்கா நற்செய்தி
பகைவரிடம் அன்பு காட்டுதல்
(
மத் 5:38-48; 7:12)
27“நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்; உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.

28உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

29உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்;

30உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.
31“பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

32உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.

33உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே.

34திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

35நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.

36உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
தீர்ப்பிடுதல்
(
மத் 7:1-5)
37“பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

38கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.

(thanks to www.arulvakku.com)

கடவுளின் அன்பு அதிக அளவில், நிரம்பி வழிகிறது
இன்றைய ஞாயிறு நற்செய்தி, நமது பரிசுத்த வாழ்வு எப்படி பட்டது என்று அளக்க சொல்லி கொடுக்கிறது. கிறிஸ்தவ வாழ்வு எப்படி இருக்க வேண்டும், மிக சரியாக செல்கிறார். எப்படி அன்பு செய்யவேண்டும் என்று கிற்ஸ்து சொல்கிறார். -- நம்பிக்கையுடனும், எவ்வித நிபந்தனையுமின்றி அன்பு செய்ய சொல்கிறார். இப்படி செய்வதற்கு நாம் சில தியாகங்கள் செய்ய வேண்டும்.
கண்டிப்பாக, அவ்வளவு சுலபமாக அன்பு செய்ய முடியாது. ஆனால் இது கடவுளின் அன்பு. இப்படித்தான் கடவுள் நம்மை அன்பு செய்கிறார். அவரின் அன்பில் நிலைத்திருக்க, கடவுளை போல நாமும் அன்பு செய்தல் வேண்டும். அப்படி செய்யாத பொழுது, நாம் கடவுளை விட்டு பிரிகிறோம். அதனால் தான் பாவ சங்கீர்த்தனம் என்பதை திவ்ய அருட்சாதனமாக நாம் சொல்கிறோம். இது நம்மை கடவுளோடு மீண்டும் இணைக்கிறது. பாவத்தினால் கடவுளை விட்டு பிரிந்தவர்களை பாவ சங்கீர்த்தனம் கடவுளோடு இணைக்கிறது.
உங்கள் பகைவரை அன்பு செய்யுங்கள் என்று இயேசு சொல்கிறார். 'பகைவர்'  என்பவர், நம்மை எதோ ஒரு விசயத்தில் எதிர்ப்பவர்கள் தான் - நமது விருப்பத்தை எதிர்ப்பவர்கள், நமது தேவைகள் எதிர்ப்பவர்கள், இன்னும் பல.
பரிசுத்த வாழ்வு, நம்மை இந்த உலகினை விட்டு கடவுளோடு இணைக்கிறது. கிறிஸ்தவம் என்பது, ஒரு வாழ்வின் முறையை மாற்றி நடப்பது, மேலும் புது வாழ்வின் முறையை புகுத்துவது ஆகும். நமது வாழ்வின் இயல்புக்கு எதிரானது-- நமது பாவ வாழ்வு, கடவுளின் இயல்புக்கு எதிராக நம் வாழ்வு செல்கிறது. ஞானஸ்நானத்தில் நாம் கடவுளின் இயல்பை பெறுகிறோம். அப்படிஎன்றால், கடவுள் அன்பு செய்வது போல, நம்மாலும் அன்பு செய்ய முடியும். கடவுளின் உதவியை (பரிசுத்த ஆவி) நாம் நம்பி, பாவத்தை விட்டு காடவுளின் இயல்போடு இருக்க முடியும்.
"உங்களுக்கு நல்லது செய்தவர்களுக்கு நீங்கள் நல்லது செய்வதால், என்ன பயன்? பாவிகள் கூட  அதிகம் செய்கிறார்கள்." கடவுளோடு இணைந்திருக்க, நாம் எல்லோருக்கும் நல்லது செய்தல் வேண்டும், அவர்கள் அதற்கு தகுதி உள்ளவர்களா இல்லையா என்பது வேறு விஷயம்.
பரிசுத்த ஆவியின் உதவியுடன், நாம் ஒழுங்காக அனைவரையும் அன்பு செய்தோமானால், இயேசு நம் மேல் கொண்ட அன்பு போல அது இருக்கும். - அதிக அளவோடும், நிரம்பி வழியும். ஏனெனில் அவரின் அன்பை தான் நாம் மற்றவர்களிடம் கொடுக்கிறோம் , அதனை பகிர்ந்து கொள்கிறோம்.
© 2019 by Terry A. Modica