பிப்ரவரி 17 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 6ம்
ஞாயிறு
Jeremiah 17:5-8
Ps 1:1-4,6
1 Corinthians 15:12,16-20
Luke 6:17,20-26
Ps 1:1-4,6
1 Corinthians 15:12,16-20
Luke 6:17,20-26
லூக்கா
நற்செய்தி
திரளான மக்களுக்குப் பணிபுரிதல்
(மத் 4:23-25)
(மத் 4:23-25)
17இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில்
நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும்
எருசலேமிலிருந்தும் தீர், சீதோன்
கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.
சமவெளிப்பொழிவு
பேறுபெற்றோரும்
கேடுற்றோரும்
(மத் 5:1-12)
(மத் 5:1-12)
20இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை:
“ஏழைகளே,
நீங்கள்
பேறுபெற்றோர்; ஏனெனில்
இறையாட்சி
உங்களுக்கு உரியதே.
21இப்பொழுது பட்டினியாய் இருப்போரே,
நீங்கள் பேறு
பெற்றோர்; ஏனெனில்
நீங்கள் நிறைவு
பெறுவீர்கள்.
இப்பொழுது
அழுதுகொண்டிருப்போரே,
நீங்கள்
பேறுபெற்றோர்; ஏனெனில்
நீங்கள் சிரித்து
மகிழ்வீர்கள்.
22மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர்
என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.✠
23அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில்
விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும்
இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.✠
24ஆனால் செல்வர்களே
ஐயோ! உங்களுக்குக்
கேடு!
ஏனெனில் நீங்கள்
எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.✠
25இப்போது உண்டு கொழுந்திருப்போரே,
ஐயோ! உங்களுக்குக்
கேடு! ஏனெனில்
பட்டினி
கிடப்பீர்கள்.
இப்போது சிரித்து
இன்புறுவோரே,
ஐயோ! உங்களுக்குக்
கேடு! ஏனெனில்
துயருற்று
அழுவீர்கள்.
26மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ!
உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே
செய்தார்கள்.
இயேசு எளியோர் பக்கம்
அவர்கள் சார்பாக இருக்கிறார்
இன்றைய நற்செய்தியில்
இயேசு அடித்தட்டு மக்களோடு நான் இருப்பேன் அவர்கள் பேறுபெற்றோர் என்று சொல்கிறார்:ஏழைகள்
( செல்வத்திலும், ஆன்மிகத்திலும் ), பசியுற்றோர் (ஆன்மீக பசி, வயிற்று பசி);
தன்னிடம் ஒன்றும் இல்லை என்று நினைப்பவைகள் அனைவரையும் ஆண்டவர் கவனித்து
கொள்வார்.அழுபவர்களையும், வெறுப்புக்கு ஆளானவர்களையும், கேலிக்கு உள்ளானோரையும்,
ஆண்டவர் மேல் விசுவாசம் இல்லாதவரையும் கூட கடவுள் அக்கறையுடன் கவனித்து
கொள்கிறார்.
மற்றவர்கள் கவலையில் நாம்
பங்கு கொண்டு அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் போது, நாமும் கடவுளோடு ஒன்றினைகிறோம்.
மற்றவர்களை பற்றி தவறாக பேசுபவர்கள், அந்த தவறு உண்மையானதாக இருந்தால் கூட,
இயேசுவிற்கு எதிரான செயல் ஆகும்.
ஒழுக்க கேடான விசயங்களை
பேசுவதும், அநிதிகளுக்காக வழக்காடுவதும், நமது பார்வையில் வந்தும் ஒருவர் கஷ்டப்படும்போது,நம்மில்
உள்ளதை நாம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும், இயேசுவிற்கு எதிராக நாம் இருக்கிறோம்
என்பதை காமிக்கிறது.
அதே போல, வேலை
செய்யுமிடத்தில் மிரட்டுவதோ அல்லது வாழ்க்கை துனையை வேண்டுமென்றே மிரட்டுவதும்,
அல்லது தொடர்ந்து லேட்டாக வருவதும், மற்றவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு தருவதும், அல்லது
மற்றவர்கள் அதிக வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அல்லது நம்மையே அதிகம்
துன்புறுத்தி வேலை செய்வதும், இதனால் கடவுளுக்கு நாம் நேரம் ஒதுக்காமல்
இருப்பதும், நம்மள் அருகில் உள்ளவருக்கும் நாம் நேரம் ஒதுக்காமல் இருப்பதும்,
கடவுளுக்கு எதிரானது ஆகும்.
மற்றவர்களின்
கவலைகளுக்கு, துன்பங்களுக்கு நாம் காராணமாக இருந்தால், நாம் கிறிஸ்துவிற்கு எதிராக
இருக்கிறோம்.
கடவுளுக்கு எதிராக இருப்பவர்கள்,
மனம் திருந்தாதவர்கள், இப்படியே இயேசுவிற்கு எதிராக இதே நிந்தனை செய்பவர்கள், அனைவருக்கும்
என்ன ஆகும். ஐயோ கேடு!, கடவுளை நம்பியவர்கள் (இன்றைய வாசகங்களில் குறிப்பிடபடுவது
போல ) ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால்
மனிதனை நம்பியிருப்பவர்கள் அனைவருக்கும் கேடு விளையும்.
செல்வந்தர்கள், அவர்கள்
சொத்துகளை மோட்சத்திற்கு எடுத்து செல்ல முடியாது. மேலும், அவர்கள் மோட்சம்
செல்லும் வழியிலும் எதுவும் வாங்க முடியாது. இதனிடையே கடவுள் இந்த சொத்துக்கள்
எல்லாம் பகிரபடாதவர்கள் பக்கம் நின்று கொண்டுள்ளார்.
அதே போல, ஒருவர் அழுகையை
பார்த்து, சிரிப்பவர்கள், அதிக
காலம் சிரிக்கமாட்டார்கள். மற்றவர்களின் துன்பத்தை கண்டு சிர்ப்பவர்களின் சந்தோசம்
தற்காலிகமானது, மேலும் உண்மையிலே அவர்கள் சந்தோசம் என்றும் நிலைக்காது.
புகழ் மிக்கவர்களும்,
பெரியவர்களையும் மிக முன்னே புகழ்பவர்கள், முதுகுக்கு பின்பு இகழ்வார்கள்.
கிழே விழுந்தவர்களை இயேசு
மேலே தூக்கி விடுவார். ஆனால் , அவர்களாகவே எழுந்து வந்தவர்கள் ரொம்ப நாள் நீடித்து
நிற்க முடியாது, அவர்கள் சிரிப்பும் நீண்ட நாள் நீடிக்காது.
© 2019 by Terry A. Modica
No comments:
Post a Comment