ஏப்ரல் 7 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு
Isaiah
43:16-21
Ps 126:1-6
Phil 3:8-14
John 8:1-11
Ps 126:1-6
Phil 3:8-14
John 8:1-11
யோவான் நற்செய்தி
விபசாரத்தில் பிடிபட்ட பெண்
1இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.
2பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
3மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,
4“போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.
5இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர்.✠
6அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.
7ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து,
“உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்”
என்று அவர்களிடம் கூறினார்.
8மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.
9அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
10இயேசு நிமிர்ந்து பார்த்து,
“அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?”
என்று கேட்டார்.
11அவர், “இல்லை, ஐயா” என்றார். இயேசு அவரிடம்
“நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்”
என்றார்.]✠
(thanks
to www.arulvakku.com)
கிறிஸ்துவின் பேரிரக்கம்
மத்தேயு நற்செய்தி 25ல்
இயேசு சொல்வது போல, "மிக சிறியோராகிய இவர்கள்" என்பதற்கு சரியான உதாரணம்
இன்று நற்செய்தியில் வரும் பெண் ஆவாள். அவர்களை நாம் எவ்வாறு நடத்த வேண்டும்
என்றும் இயேசு சொல்கிறார். அந்த பெண், தான் வாழ்வதற்கே தகுதி இல்லதாவள் என நினைத்து
கொண்டு இருப்பவர், அவருக்கும் கிறிஸ்துவின் பேரிரக்க்கம், கருணையும் கிடைத்தது.இந்த
பெண்ணை தான் சமூகம் ஆணுக்கு மதிப்பில் குறைவானவள் பெண் என்று சொல்லியது முதல்
எடுத்து காட்டாக இருக்கிறது. அவள் பாவி,
அவளுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கவேண்டும். அவர் ஒருத்தியாக, அவளை கண்டிக்கும்
கூட்டம் முன்பு நின்றிருந்தாள், இதனை விட எவ்வளவு மிகசிரியோர் உங்களுக்கு வேண்டும்?
நீங்கள் தனியாகவும்,
யாரும் மதிக்காமலும் இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள்? அதே போல எல்லோரும் உங்களை
கண்டனம் செய்யும் சம்பவங்களும் கூட நடந்திருக்கலாம். இதே போல நீங்கள் யாரையாவது
ஒதுக்கி இருக்கிறீர்களா? நம்மில் யாருமே முதல் கல்லை எடுக்க முடியாது.
நமது திருச்சபையிலும்,
பலரை நாம் நிராகரிக்கிறோம், அவர்களை பற்றியே மறந்து விடுகிறோம். சிலரை நமக்கும்
தெரிந்திருக்கும், அவர்களின் தனிமை நமக்கு தெரியாமல் போகலாம், நாம் பல வேளைகளில்
பொறுப்புகளில் இருக்கும் போது, அவர்களை தேடி, அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது என்பது
கொஞ்சம் அதிகமாக தெரிய கூடும். அவர்களின் தேவைக்கு நமது நேரத்தை செலவழிக்கும்
அளவிற்கோ, அல்லது, நமது சொந்த கார்யங்களை செய்யமால், அவர்களுக்கு ஓடோடி செல்லும்
அளவிற்கு முக்கியமானதாக நமக்கு
தோன்றவில்லை.
விவாகரத்து பெற்ற
கத்தோலிக்கர்கள், பலர், நம்மை கண்டனம் செய்கிறார்கள், என்று நினைக்கிறார்கள்,
அவர்கள் திவ்ய நற்கருணை பெற தகுதி அற்றவர் என நினைக்கும் அளவிற்கு நமது
திருச்சபையின் போதனைகள் தவறாக ஊட்டபடுகிறது. ஆனால், அவர்களை கண்டு, அவர்களுக்கு நல
நிலைக்கு கொண்டு வர யாரும் இல்லை.
அவர்களை ஒதுக்கியே
வைத்திருக்கிறோம். அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்கி நல்ல வழியில் வாழ வைக்க நாம்
முற்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் "சிரியோருள்" உள்ளவர்கள் இல்லை என நாம்
ஒதுக்கி வைத்துள்ளோம்.
இப்படி பட்டி சிறியோரை
நாம் கண்டு , அவர்களிடம் சென்றி, இறையரசை நாம் பரப்பி, அவர்களும் அதில்
முக்கியமானவர்கள் என எடுத்து சொல்ல வேண்டும். இது தவக்காலத்தின் நல்ல முயற்சி
ஆகும், ஆனால் இந்த முயற்சி ஆண்டு முழுதும் தொடர்தல் வேண்டும்.
© 2019 by Terry A. Modica
No comments:
Post a Comment