Saturday, June 2, 2007

மறையுரை: ஞாயிறு ஜுன் 3

மறையுரை:
ஞாயிறு ஜுன் 3

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 16

12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. 13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். 14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். 15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.

http://www.arulvakku.com/

உங்களுக்கு என்ன தெரியவில்லை? யேசுவிடம் நீங்கள் என்ன கேட்டு இன்னும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. திருச்சபையின் பரிந்துரைகளிலிருந்து உங்களால் ஏற்றுகொள்ள முடியாத விசயம் அல்லது புரியாத விசயம் என்ன? இன்றைய நற்செய்தியில் "நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது" என்று கூறுகிறார்.

ஏன் நாம் இன்னும் அதற்கு தயாராகவில்லை? ஏனெனில், பரிசுத்த ஆவியிடம் நம்மை தயார்படுத்த அனுமதிக்க வேண்டும். கடவுள் நம்மில் மாற்றம் ஏற்படுத்த அனுமதிக்கவேண்டும். அந்த மாறுதல் முயற்சிக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.உண்மை என்றும் சுமை தருவது, கடினமானது, அதனால் நாம் ஒதுக்கிவிடுகிறோம்.

யேசு சொன்னது எல்லாமே பரிசுத்த ஆவியின் மூலமாக கடவுளிடம் இருந்து வந்தது. கடவுள் அதே ஆவியை நமக்கும் தருகிறார். அதே ஞானம், அதே உண்மை தருகிறார். ஆனால் பரிசுத்த ஆவியிடம் நம்மை ஒப்படைத்து நம்மை புனிதப்படுத்தாவிட்டால் அந்த அன்பளிப்பு உபயோகமில்லை.

இந்த திரித்துவ கடவுள் மூவருள், கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம் ஆன்ம பாவங்களை கழுவுகிறார். பாவசங்கீர்த்தனத்தில் யேசு கிறிஸ்து குருவானவரின் பிரசன்னத்தில் இருந்து கொண்டு, திருச்சபையின் உடலாக இருக்கிறார். மன்னிப்பு என்பது பரிசுத்த ஆவியின் செயல் ஆகும். இது குற்ற உணர்வை நீக்குவது மேலான ஓர் செயலாகும். இது பாவப்பட்ட வாழ்க்கையை மாற்றி அதே பாவங்களை மீண்டும் செய்யாமல் இருக்க செய்கிறது. பாவசங்கீர்த்தனத்தில் நாம் செய்யும், பரிகார ஜெபமானது நம்மை நேராக திரித்துவ கடவுளிடம் சேர்ந்து நம் மாற்றத்திற்கு வித்திடுகிறது.

இந்த மாற்றத்திற்கும், போதனைகளை ஏற்று கொள்வதற்கும் நமக்கு தாழ்மை வேண்டும். நம்முடைய வாழ்கையில் பதில் கிடைக்காத கேள்விகளுக்கெல்லாம், நாம் கடவுளின் திருவுளத்தை தெரிந்து அதனை யேசுவோடு இணைந்து, பரிசுத்த ஆவியின் ப்ரசன்னத்தில் நாம் அதனை செய்தோமானால், நமக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் நம்முள்ளே கிடைக்கும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி

யேசுவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எழுதுங்கள். இதனை புரிந்து கொள்வதற்கு எது ப்ரச்னையாக இருக்கிறது. இந்த கேள்வி பட்டியலை வைத்துகொண்டு பரிசுத்த ஆவியிடம் கேளுங்கள். யேசுவிடம் அதனை போதிக்கும்படி வேண்டுங்கள்.


--------------------------------------------------------------------------------

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: