பிப்ரவரி 17 2008, நற்செய்தி & மறையுரை:
தவக்கால 2 வது ஞாயிறு
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 17
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். 2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. 3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். 4 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? ' என்றார். 5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று ஒரு குரல் ஒலித்தது. 6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். 7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் ' என்றார். 8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. 9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ' மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது ' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
thanks to www.arulvakku.com
மறையுரை
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து கதிரவனை போல ஒளி வெள்ளத்தில் காட்சி அளித்தார் என்று கூறப்படுகிறது. கடவுள் "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் " என்று கூறுகிறார். இதனை கேட்கும்போது, இந்த உறுமாறுதல், ஒவ்வொரு முறையும் திருப்பி நடக்கிறது. இதன மூலம் நம் விசுவாசம் இன்னும் அதிகமடைகிறது. எப்படியிருந்தாலும், இப்போது, நாம் தான் உருமாறப்படுகிறோம்.
இந்த தவக்காலத்தில், நமது பாவங்களுக்காக வருத்தப்பட்டு திருந்தும் நேரத்தில், யேசுவின் ஒளி, நமது பாவ இருட்டில், முழுமையாக ஒளிரச் செய்து அவரை நம் உள்ளத்தில் ஏற்று கொள்ளும்போது, நம்மை சுற்றி இருக்கும் நம் சகோதரர்கள் நம்மில் யேசுவை காண்பர். நாமும் யேசுவோடு சேர்ந்து ஒளிர்வோம்.
கிறிஸ்துவின் உருமாறுதலால், நாம் நமது உண்மையான அடையாளத்திற்கு மாற்றபடுகிறோம். நமது உண்மையான அடையாளம் என்ன? நமது உள்ளே உள்ள உண்மையான இருப்பிடம். கடவுளின் பிம்பம் போல உருவாக்கப்பட்டுள்ளது!
மலை உச்சியில் நடந்த அனுபவித்திற்கு பிறகு, யேசு தான் துண்பமும் வேதனையும் உள்ள சேவைக்கு தயாராகிறார். நாம் கிறிஸ்துவின் ஒளியால், உருமாறப்படும்போது, நாமும் நமது மலை உச்சியிலிருந்து வெளியில் வந்து, யேசுவை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். திமோத்தி கூறுவது போல ஒவ்வொரு முறையும் நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்போது, நமக்கு பல துன்பங்கள நடக்கலாம், கஷ்டப்படலாம், ஆனால், ஒவ்வொரு கல்வாரிக்கு பிறகும் , ஒரு ஈஸ்டர் உள்ளது என்பது நமக்கு பெரும் பலமாகும்.
முதலில் நாம், மலையில் நம் நேரத்தை செலவிட வேண்டும், அங்கேயே நாம் இருந்து, வேண்டி, "நமக்கு தேவையான சக்தி கடவுளிடமிருந்து வரவேண்டும்" அந்த சக்தியை பெற வேண்டும். அதன் பிறகு, நாம் தயாராகி விட்டொம், நாம் ஊக்குவிக்கபட்டு, நமது சேவையை தொடங்கலாம், அப்போது நமக்கு ஏற்படும் கஷ்டங்களை நம்மால் தாங்கிகொள்ள முடியும்.
கடவுள் உன்னை பற்றி என்ன சொல்கிறார் என்று தெரியுமா? கேள். யேசுவை பற்றி என்ன சொன்னார அதையே தான் உனக்கும் சொல்கிறார். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் " சில பேர் கேட்கலாம், சிலர் கேடகாமல் போகலாம். ஆனால், நாம் யேசுவோடு சேர்ந்து ஒளிர்வது, இவைகளால் தடைபடாது. யேசு நம்மை அழைத்ததால், அவரின் பரிசுத்த வாழ்வில் சேர்ந்து, நாமும் அவரோடு சேர்ந்து ஒளிர்வோம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment