Friday, September 26, 2008

28 செப்டம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை

28 செப்டம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை:
ஆண்டின் 26வது ஞாயிறு

Ezek 18:25-28
Ps 25:4-5, 8-10, 14
Phil 2:1-11
Matt 21:28-32

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21

28 மேலும் இயேசு, ' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார். 29 அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். 30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை. 31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை ' என்றார்.
(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் நற்செய்தி நம்மில் பலருக்கு அதிர்ச்சியை அளிக்கும்!, பலர் இறைவாழ்வில் நேர்மையாகவும் ஒழுங்காகவும் நல்லொழுக்கத்துடனும் நடந்து கொள்வதாக நினைக்கும் பலருக்கும் இந்த நற்செய்தி அதிர்ச்சியை அளிக்கும். ஆனால் அவர்கள அவரகளது செயல்களை நியாயமாக பரிசோதித்து பார்த்தால், அவர்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்களா? என்பது தெரியும். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் (அந்த இரு தொழில்கள் தான் உலகில் மிகவும் அவமானகரமான செயல்கள்/தொழில்கள்) உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று சமய வல்லுனர்களை பார்த்து கூறுகிறார்.

இந்த சமய வல்லுனர்கள் யேசு கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்திருந்தும், அவர்கள் யேசுவிற்கு "சரி/ஆமாம்" என்று சொல்வதற்கு பதில், நல்ல விசயங்களை பேசுவதற்கு பதில் அதை செய்ய வேண்டியது தான், செயலில் காமிக்க வேண்டியது தான் யேசுவிற்கு நாம் சொல்லும் பதிலாகும். அவருக்கு சரியான பதில், மோட்சத்திற்கும், நரகத்திற்கும் நடுவில் உள்ள இடைப்பட்ட கோடு ஆகும்.

கடவுளுக்கு சரியான பதில் தேவையில்லை. ஆனால் அவருக்கு சரியான நியாயமான அன்பான செயல்களே தேவை. திருச்சபையின் சட்டங்களை கடைபிடிக்கவேண்டிய செயல்கள் கடவுளுக்கு தேவையில்லை, ஆனால் அன்பினால் ஊக்கப்படுத்தபட்ட கீழ்பபடிதலும், உற்சாகமான உந்துதலுடனும் கடவுளின் தேவைகளுக்கு ஏற்ப ஊழியம் செய்வது தான் கடவுளுக்கு தேவை.

கோவிலுக்கு வெளியே நாம் திருச்சபையின் தேவகளோடு, பரிசுத்தத்தோடும் நடந்து கொள்ளவில்லையென்றால், திருப்பலி பூசைக்கு செல்வதனால் உள்ள பயன் என்ன? ஏன் சிலர் கோவிலுக்கு வருவதில்லை என்று உங்களுக்கு தெரியுமா? ஏனெனில், திருச்சபைக்கும், கிறிஸ்துவின் சரிரத்திற்கும் வெளியே இருப்பது பாவம் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. இயல்பாக அவர்கல் நல்ல செய்லகள் செய்து கொண்டிருந்தாலே , யேசுவின் உண்மையான அன்பை வழிகொண்டிருந்தாலே அவர்கள் கடவுளோடு நெருக்கமானவர்கள் ஆவர். இவர்கள் தினமும் திருப்பலிக்கு சென்று வரும் பக்தர்களை விட, (வெளியே எந்த ஒரு நல்ல செயல்களும் செய்யாமல் இருப்பவர்கள்) சீக்கிரம் கடவுளோடு இனைவர்.

கடவுள் வேண்டாம் அல்லது இல்லை என்று சொல்பவர்களை கண்டனம் செய்வது என்பது நாம் அவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்கிறோம். இந்த செயலை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது. ஒப்பிட்டு பார்ப்பது நம்மை நல்ல மனிதனாக் ஆக்கலாம் அல்லது தீயவர்களாக ஆக்கலாம். நாம் நேற்று எப்படி இருந்தோம் என்று அல்லது , முன்னர் எப்படி இருந்தோம் என்று நாம் நம்மையே ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம். அது என்னவெனில், நாம் கடவுளோடு எப்படி நெருக்கமாக முன்னரும் , தற்போதும் எப்படி இருந்தோம் என்று ஒப்பிட்டு கொள்ளலாம்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 19, 2008

செப்டம்பர் 21, 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஞாயிறு நற்செய்தி, மறையுரை
செப்டம்பர் 21, 2008
ஆண்டின் 25வது ஞாயிறு

Is 55:6-9
Ps 145:2-3, 8-9, 17-18
Rom 1:20c-24, 27a
Matt 20:1-16a


எசாயா

அதிகாரம் 55
6 ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்: அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். 7 கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக: அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்: அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்: அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்: ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். 8 என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். 9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

உரோமையருக்கு எழுதிய திருமுகம்

அதிகாரம் 1
20 ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள்-அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும்-உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை. 21 ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை: நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. 22 தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. 23 அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப்போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர். 24 ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து, தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள்


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 20


1 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். 2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.
ஒரு தெனாரியம் ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இனையான உரோமை வெள்ளி நாணயம்.
3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். 4 அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் ' என்றார். 5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். 6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ' நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? ' என்று கேட்டார். 7 அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை ' என்றார்கள். அவர் அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் ' என்றார். 8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ' வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் ' என்றார். 9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். 10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். 11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, 12 கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே ' என்றார்கள். 13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ' தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? 14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். 15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ' என்றார். 16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் ' என்று இயேசு கூறினார்.

(thanks to www.aruvakku.com )



கடவுள் நியாயமாக நடப்பதில்லை! இவ்வாறு எத்தனை முறை நாம் நினைத்திருப்போம்? நம்முடைய நிலைப்பாட்டின் படி, இது உண்மையாகும்!. இன்றைய நற்செய்தியின் உவமை, இதற்கு சரியான உதாரணமாகும்.

யேசு இன்றைய நற்செய்தியில் குறிப்பிடும், நிலக்கிழார், நியாயமாக நடக்கவில்லை என்று எப்படி யூதர்கள் நினைத்தார்களோ? அப்படியே நாமும் நினைக்கிறோம். இதனை புரிந்து கொள்ள, நாம் பெற்றோர்களை இதனோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டு. ஒரு அன்பான அம்மா எல்லா குழந்தைகள் மேலும் ஒரே மாதிரி அக்கறையுடன் தான் இருப்பார். எந்த குழந்தைக்கு அதிக கவனம் தேவையோ அதற்கு அதிக அக்கறையுடன் பார்த்து கொண்டாலும், அந்த தாய் மற்றவர்கள் மேலும் அதே அன்புடன் இருப்பாள்.

தந்தை கடவுளும் இந்த நிலக்கிழார் போல தான், எல்லாருக்கும் ஒரே அளவுடன் கொடுப்பவர் ஆவார். நாம் மோட்சத்திற்கு செல்லும் வழியை நம்மால் மட்டுமே அடைய முடியாது. சரி சமமான நன்மை, உதவியும் அதிமாக உழைப்பவர்க்கு கிடைப்பது என்பது அநீதி கிடையாது. மாறாக, கடைசி நிமிடத்தில் கூட கடவுளோடு நட்பு கொண்டு அவரிடம் சேர்ந்தால், கடவுள் முழுமையான அன்பை அவரிடமும் கொடுப்பார். அவர் எதிலும் குறைவாய் இருப்பதில்லை.

முதல் வாசகம் "9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன" என்று சுட்டி காட்டுகிறது. நமக்கு நீதி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான நடைமுறை தான் என்று நினைக்கிறோம். ஆனால் பழைய ஏற்பாட்டில் பார்த்தோமானால், "கண்ணுக்கு கண்" என்பது தான் நீதி. ஆனல், யேசு நீதியை மிக உயரத்திற்கு கொண்டு சென்றார். அவரின்படி நீதி என்பது, எல்லோருக்கும் சமமான அன்பும், இரக்கமும் கொடுக்கபடவேண்டும். அவர்கள் அதற்கு தகுதியானவர்களோ இல்லையோ? அன்பும் இரக்கமும் எல்லோருக்கும் கொடுக்கப்படவேண்டு.

கடவுளின் உயர்ந்த வழிமுறைகளை நாம் தெரிந்து கொள்ள வேன்டும் என்று அவசியமில்லை. நாம் கடவுளுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும், நாம் அவரின் அன்பிற்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும், அவர் நம் மேல் மிகவும் அன்பு கூறுகிறார். நாம் நம்மில் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது, நாம் எவ்வளவு தகுதி இல்லாமல் இருந்தாலும், கடவுள் எல்லா புனிதர்களுக்கும், கிறிஸ்துவைன் தாய் மரியாளுக்கும் கொடுத்த அதே அன்பை உங்களுக்கும் கொடுக்கிறார். "எனது அன்பை நாம் எப்படி கொடுக்க வேன்டும் என்கிற உரிமை எனக்கில்லையா? " என்று யேசு நம்மிடம் கேட்கிறார்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 12, 2008

செப்டம்பர் 14, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
செப்டம்பர் 14, 2008


Numbers 21:4b-9
Ps 78:1bc-2, 34-38 (with 7b)
Phil 2:6-11
John 3:13-17


எண்ணிக்கை (எண்ணாகமம்)

அதிகாரம் 21
4 ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் செங்கடல் சாலை வழியாகப் பயணப்பட்டனர்: அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர். 5 மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது என்றனர். 6 உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்: அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர்.
எபிரேயத்தில் 'சேராபின்கள்' எனவும் பொருள்படும்.
7 அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, நாங்கள் பாவம் செய்துள்ளோம் நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்: அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும் என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். 8 அப்போது ஆண்டவர் மோசேயிடம், கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து: கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான் என்றார். 9 அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்: பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.


பிலிப்பியருக்கு திருமுகம்

அதிகாரம் 2
6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 9 எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். 10 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்: 11 தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்.


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. 14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். 15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். 16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

(thanks to www.arulvakku.com)

யேசு எவ்வளவு தாழ்மையுடன் இருந்தார்? யேசு நமது கடவுள், அதனால், நாம் அவர் முன் தாழ்மையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தும், அவர் நம் முன் தாழ்மையுடன் இருக்கிறார். இது இரண்டாவது வாசகத்தில் விளக்கப்பட்டுள்ளது.


யேசு மோட்சத்திலிருந்து நமக்காக இந்த பூமிக்கு இறங்கி வந்தார் என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. அதுவே ஒரு தாழ்மையாகும். பணிவுடன் அதை செய்தார். நீங்களோ அல்லது நானோ, நிறைவான் இன்பத்தையும், பேரானந்தத்தையும் கொடுக்கும் மோட்சத்தை விட்டு, தீமைகள் உள்ள மனித உலகிற்கு வருவோமோ?

நாமெல்லோருமே விண்ணகத்திற்காக ஆசைபட்டு இருக்கிறோம். அதுதான் நம் உண்மையான வீடு, நமது உள் உணர்வு அதை தான் தேடும். அதனால் தான், இந்த பூமியில் விண்ணகத்திற்கு ஒவ்வாத செயல்கள் நடக்கும்போது, குறை கூறுகிறோம், அதனை முறையிட்டு வருத்தபடுகிறோம். நாம் "இந்த சோதனைகளால், தளர்ந்து விட்டேன், கடவுளே இதற்கு ஒரு முடிவு கட்டு" என்று கூறி அவரிடம் முறையிடுகிரோம். (இதை தான் இஸ்ரேயலர்களும், பாலைவனத்தில் கூறினார்) "கடவுளே, எவ்வளவு கஷ்டமானது எங்கள் ப்ரச்னை என்று உமக்கு தெரியவில்லை"


ஓ, இஸ்ரேயல் செய்த பாவம் அதுதான் (முதல் வாசகம்), அந்த பாவத்தினால் தான், அவர்களுக்கு ப்ரச்னை உண்டானது. கடவுளிடம் குறை கூறுவது என்பது, நாம் விண்ணக தேவைகளில் எதிர்பார்த்து, இந்த பூமியின் ஆசைகளை ஒதுக்கி தள்ளுவதற்கான சமிஞ்கை ஆகும். அந்த குறைகள் மூலம், நாம் கடவுளை நம்புகிறோம் என்பதை குறிக்கும். "கடவுளின் பணிகளை, நாம் மறந்து விட கூடாது" என்று இந்த பதிலுரை நமக்கு நினைவூட்டுகிறது. கடவுளிடம் குறை கூறுவது என்பது, அதற்கு முன் நாம் அவரை மறந்து விட்டோம் , என்பதை குறிக்கும்.

யேசு ஏதாவது குற்றம் சாட்டினாரா? குறை கூறினாரா?, சில நேரங்களில் மனத்துயரம் கொண்டார். ஆனால், ஒருபோது அவர் குறை கூறியதில்லை. அவரை அடித்து, சிலுவையில் அறைந்த போதும், அவர் குறை கூறவில்லை. அதற்கு பதிலாக, அவரை கொடுமை படுத்தினவர்களுக்காக அவர் இறைவனிடம் வேண்டினார். ஏனெனில் அவரின் முழுமையான் அன்பினால், அப்படி செய்தார். எந்த வித சந்தேகமும் இன்றி, "கடவுள் அவர் தம் மகனை 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, மாறாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்"
கடவுளே, நான் குறை கூறுவதையும், நிந்தனை செய்பதையும் நிறுத்துவதற்கு எனக்கு துனை செய்யும், அதன் மூலம், யேசுவை போல் பரிசுத்தமாக இருக்க முடியும். ஆமென்!

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 5, 2008

செப்டம்பர் 7, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 7, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23வது ஞாயிறு
Ezek 33:7-9
Ps 95:1-2, 6-9
Rom 13:8-10
Matt 18:15-20
http://vailankannishrine.org/live/vailailivetelecast.html
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 18

15 ' உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். 16 இல்லையென்றால் ' இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் ' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். 17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். 18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். 20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். '
(thanks to www.arulvakku.com)
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, பரிசுத்தத்திற்கும், உண்மைக்கும், எல்லா சரியான செயல்களுக்கும், நாம் துணை நிற்க வேண்டும், நாம் அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும், பாவ உலகில் உள்ளவர்களை மாற்றுவதற்கும் நாம் துணை செய்ய வேன்டும் என்று கூறுகிறது. நாம் அவ்வாறு செய்யவில்லையென்றால், நாமும் அந்த பாவிகளை போல பாவம் செய்பவர்கள் ஆவோம். நமக்கும் அந்த பொறுப்பிருக்கிறது (முதல் வாசகம்)

நாம் கருனையுடனும், இரக்கத்துடனும் , பாவிகளை அனுகவில்லையென்றால், அதுவும் ஒரு பாவமாகும். (இரண்டாவது வாசக்கம்).

திருச்சபை சமூகத்துடனும், உங்கள் கோரிக்கைகளை வைத்து, அவர்களும் உங்களோடு இனைந்து, அவர்களையும் உங்களுக்காக பேச அழைக்க வேன்டும், என இன்றைய நற்செய்தியில், யேசு அறிவுறுத்துகிறார். அவர்களுடைய ஜெபத்துக்காகவும் நாம் அவர்களோடு சேரவேன்டும் என வலியுறுத்துகிறார்.


முதலில், நாம் பாவிகளுடன் பேசவேண்டும். பாவிகள் அவர்களையும் மற்றும் பலரையும் அவர்கள் பாவத்தினால் பாதிக்கிறார்கள் என்று நாம் அறிந்தால்,(எல்லா பாவங்களும் துன்பத்தை கொடுக்கும். நாம் அதை அறிந்தாலும், அறியாவிட்டாலும், நிச்சயம் பாதிப்பு இருக்கும்), நாம் அதன் விளைவுகளை , அவர்களிடத்தில் சொல்லவில்லையென்றால், நமது அமைதி அன்பிற்கு எதிரானது ஆகும், அக்கறையில்லாமயை காட்டுகிறது.

நாம் உண்மையை பகிர்ந்து கொண்டால், நாம் குற்ற உணர்விலிருந்து, விடுபட்டுவிடுகிறோம். ஆனால், நாம் அவர்களை அன்பு செய்வதை மட்டும் நிறுத்தி விட கூடாது. அதனால், நாம் சிலரை அழைத்து கொண்டு, மேலும் அதிக முயற்சிஉடன் பாவிகளை அவர்கள் பாவங்களிலிருந்டு விடுபட வைக்க வேண்டும். அந்த முயற்சி தோல்வியடந்தால்,மேலும் பலரை சேர்த்து கொண்டு நமது முயற்சியை தொடரவேண்டும்.

எல்லா முறையும் நமது முயற்சி தோல்வியடைந்தால், நாம் நமது முயற்சியை கைவிட்டுவிடவேண்டும். மற்றும் அவர்களிடமிருந்து தள்ளியிருக்க வேண்டும். உண்மையில் அவர்கள் தான் நம்மிடமிருந்து பிரிந்து இருக்கிறார்கள். அவர்கள் தான் நம்மை விட்டு விலகி செல்கின்றனர். யேசு எவ்வாறு யூதரல்லாதவர்களையும், வரி வசூலிப்பவர்களை (அன்புடன்) நடத்தினார் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எப்போதுமே அவர்கள் மேல் அன்பு கொள்வதில் எந்த தடுமாற்றமும் யேசுவிடம் இல்லை. மேலும் அவர்களுக்காக மரணமடைய ஆவல் கொண்டார். தன்னையே தயார்படுத்கிகொண்டார்.