Friday, September 12, 2008

செப்டம்பர் 14, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
செப்டம்பர் 14, 2008


Numbers 21:4b-9
Ps 78:1bc-2, 34-38 (with 7b)
Phil 2:6-11
John 3:13-17


எண்ணிக்கை (எண்ணாகமம்)

அதிகாரம் 21
4 ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் செங்கடல் சாலை வழியாகப் பயணப்பட்டனர்: அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர். 5 மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது என்றனர். 6 உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்: அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர்.
எபிரேயத்தில் 'சேராபின்கள்' எனவும் பொருள்படும்.
7 அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, நாங்கள் பாவம் செய்துள்ளோம் நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்: அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும் என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். 8 அப்போது ஆண்டவர் மோசேயிடம், கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து: கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான் என்றார். 9 அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்: பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.


பிலிப்பியருக்கு திருமுகம்

அதிகாரம் 2
6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 9 எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். 10 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்: 11 தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்.


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. 14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். 15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். 16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

(thanks to www.arulvakku.com)

யேசு எவ்வளவு தாழ்மையுடன் இருந்தார்? யேசு நமது கடவுள், அதனால், நாம் அவர் முன் தாழ்மையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தும், அவர் நம் முன் தாழ்மையுடன் இருக்கிறார். இது இரண்டாவது வாசகத்தில் விளக்கப்பட்டுள்ளது.


யேசு மோட்சத்திலிருந்து நமக்காக இந்த பூமிக்கு இறங்கி வந்தார் என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. அதுவே ஒரு தாழ்மையாகும். பணிவுடன் அதை செய்தார். நீங்களோ அல்லது நானோ, நிறைவான் இன்பத்தையும், பேரானந்தத்தையும் கொடுக்கும் மோட்சத்தை விட்டு, தீமைகள் உள்ள மனித உலகிற்கு வருவோமோ?

நாமெல்லோருமே விண்ணகத்திற்காக ஆசைபட்டு இருக்கிறோம். அதுதான் நம் உண்மையான வீடு, நமது உள் உணர்வு அதை தான் தேடும். அதனால் தான், இந்த பூமியில் விண்ணகத்திற்கு ஒவ்வாத செயல்கள் நடக்கும்போது, குறை கூறுகிறோம், அதனை முறையிட்டு வருத்தபடுகிறோம். நாம் "இந்த சோதனைகளால், தளர்ந்து விட்டேன், கடவுளே இதற்கு ஒரு முடிவு கட்டு" என்று கூறி அவரிடம் முறையிடுகிரோம். (இதை தான் இஸ்ரேயலர்களும், பாலைவனத்தில் கூறினார்) "கடவுளே, எவ்வளவு கஷ்டமானது எங்கள் ப்ரச்னை என்று உமக்கு தெரியவில்லை"


ஓ, இஸ்ரேயல் செய்த பாவம் அதுதான் (முதல் வாசகம்), அந்த பாவத்தினால் தான், அவர்களுக்கு ப்ரச்னை உண்டானது. கடவுளிடம் குறை கூறுவது என்பது, நாம் விண்ணக தேவைகளில் எதிர்பார்த்து, இந்த பூமியின் ஆசைகளை ஒதுக்கி தள்ளுவதற்கான சமிஞ்கை ஆகும். அந்த குறைகள் மூலம், நாம் கடவுளை நம்புகிறோம் என்பதை குறிக்கும். "கடவுளின் பணிகளை, நாம் மறந்து விட கூடாது" என்று இந்த பதிலுரை நமக்கு நினைவூட்டுகிறது. கடவுளிடம் குறை கூறுவது என்பது, அதற்கு முன் நாம் அவரை மறந்து விட்டோம் , என்பதை குறிக்கும்.

யேசு ஏதாவது குற்றம் சாட்டினாரா? குறை கூறினாரா?, சில நேரங்களில் மனத்துயரம் கொண்டார். ஆனால், ஒருபோது அவர் குறை கூறியதில்லை. அவரை அடித்து, சிலுவையில் அறைந்த போதும், அவர் குறை கூறவில்லை. அதற்கு பதிலாக, அவரை கொடுமை படுத்தினவர்களுக்காக அவர் இறைவனிடம் வேண்டினார். ஏனெனில் அவரின் முழுமையான் அன்பினால், அப்படி செய்தார். எந்த வித சந்தேகமும் இன்றி, "கடவுள் அவர் தம் மகனை 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, மாறாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்"
கடவுளே, நான் குறை கூறுவதையும், நிந்தனை செய்பதையும் நிறுத்துவதற்கு எனக்கு துனை செய்யும், அதன் மூலம், யேசுவை போல் பரிசுத்தமாக இருக்க முடியும். ஆமென்!

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: