Friday, September 19, 2008

செப்டம்பர் 21, 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஞாயிறு நற்செய்தி, மறையுரை
செப்டம்பர் 21, 2008
ஆண்டின் 25வது ஞாயிறு

Is 55:6-9
Ps 145:2-3, 8-9, 17-18
Rom 1:20c-24, 27a
Matt 20:1-16a


எசாயா

அதிகாரம் 55
6 ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்: அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். 7 கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக: அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்: அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்: அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்: ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். 8 என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். 9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

உரோமையருக்கு எழுதிய திருமுகம்

அதிகாரம் 1
20 ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள்-அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும்-உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை. 21 ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை: நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. 22 தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. 23 அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப்போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர். 24 ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து, தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள்


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 20


1 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். 2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.
ஒரு தெனாரியம் ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இனையான உரோமை வெள்ளி நாணயம்.
3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். 4 அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் ' என்றார். 5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். 6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ' நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? ' என்று கேட்டார். 7 அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை ' என்றார்கள். அவர் அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் ' என்றார். 8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ' வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் ' என்றார். 9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். 10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். 11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, 12 கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே ' என்றார்கள். 13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ' தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? 14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். 15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ' என்றார். 16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் ' என்று இயேசு கூறினார்.

(thanks to www.aruvakku.com )



கடவுள் நியாயமாக நடப்பதில்லை! இவ்வாறு எத்தனை முறை நாம் நினைத்திருப்போம்? நம்முடைய நிலைப்பாட்டின் படி, இது உண்மையாகும்!. இன்றைய நற்செய்தியின் உவமை, இதற்கு சரியான உதாரணமாகும்.

யேசு இன்றைய நற்செய்தியில் குறிப்பிடும், நிலக்கிழார், நியாயமாக நடக்கவில்லை என்று எப்படி யூதர்கள் நினைத்தார்களோ? அப்படியே நாமும் நினைக்கிறோம். இதனை புரிந்து கொள்ள, நாம் பெற்றோர்களை இதனோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டு. ஒரு அன்பான அம்மா எல்லா குழந்தைகள் மேலும் ஒரே மாதிரி அக்கறையுடன் தான் இருப்பார். எந்த குழந்தைக்கு அதிக கவனம் தேவையோ அதற்கு அதிக அக்கறையுடன் பார்த்து கொண்டாலும், அந்த தாய் மற்றவர்கள் மேலும் அதே அன்புடன் இருப்பாள்.

தந்தை கடவுளும் இந்த நிலக்கிழார் போல தான், எல்லாருக்கும் ஒரே அளவுடன் கொடுப்பவர் ஆவார். நாம் மோட்சத்திற்கு செல்லும் வழியை நம்மால் மட்டுமே அடைய முடியாது. சரி சமமான நன்மை, உதவியும் அதிமாக உழைப்பவர்க்கு கிடைப்பது என்பது அநீதி கிடையாது. மாறாக, கடைசி நிமிடத்தில் கூட கடவுளோடு நட்பு கொண்டு அவரிடம் சேர்ந்தால், கடவுள் முழுமையான அன்பை அவரிடமும் கொடுப்பார். அவர் எதிலும் குறைவாய் இருப்பதில்லை.

முதல் வாசகம் "9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன" என்று சுட்டி காட்டுகிறது. நமக்கு நீதி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான நடைமுறை தான் என்று நினைக்கிறோம். ஆனால் பழைய ஏற்பாட்டில் பார்த்தோமானால், "கண்ணுக்கு கண்" என்பது தான் நீதி. ஆனல், யேசு நீதியை மிக உயரத்திற்கு கொண்டு சென்றார். அவரின்படி நீதி என்பது, எல்லோருக்கும் சமமான அன்பும், இரக்கமும் கொடுக்கபடவேண்டும். அவர்கள் அதற்கு தகுதியானவர்களோ இல்லையோ? அன்பும் இரக்கமும் எல்லோருக்கும் கொடுக்கப்படவேண்டு.

கடவுளின் உயர்ந்த வழிமுறைகளை நாம் தெரிந்து கொள்ள வேன்டும் என்று அவசியமில்லை. நாம் கடவுளுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும், நாம் அவரின் அன்பிற்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும், அவர் நம் மேல் மிகவும் அன்பு கூறுகிறார். நாம் நம்மில் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது, நாம் எவ்வளவு தகுதி இல்லாமல் இருந்தாலும், கடவுள் எல்லா புனிதர்களுக்கும், கிறிஸ்துவைன் தாய் மரியாளுக்கும் கொடுத்த அதே அன்பை உங்களுக்கும் கொடுக்கிறார். "எனது அன்பை நாம் எப்படி கொடுக்க வேன்டும் என்கிற உரிமை எனக்கில்லையா? " என்று யேசு நம்மிடம் கேட்கிறார்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: