அக்டோபர் 19, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 29வது ஞாயிறு
Is 45:1, 4-6
Ps 96:1, 3-5, 7-10
1 Thes 1:1-5b
Matt 22:15-21
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 22
15 பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள். 16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, ' போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். 17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும் ' என்று அவர்கள் கேட்டார்கள். 18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, ' வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? 19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள் ' என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். 20 இயேசு அவர்களிடம், ' இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ' என்று கேட்டார். 21 அவர்கள், ' சீசருடையவை ' என்றார்கள். அதற்கு அவர், ' ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், யேசு பரிசேயரை பார்த்து "வரி செலுத்தும் நாணயத்தில் யாருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது ?" என்று கேட்கிறார். இந்த நிகழ்ச்சியை வைத்து, யாருடைய உருவம் நம் இதயத்தில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நமக்கு கற்பிக்கிறார். நம்முடைய இதயம் கடவுளுக்கு உரித்தானது. அவருக்கு மட்டுமே உரித்தானது.
ரோமானியர்கள், அவர்களுடைய அரசர்களை தெய்வீகமானவர்கள் என்று நினைத்தனர். அதனால், அந்த அரசர் பொறித்த நாணயத்தை எப்போதும் எடுத்து செல்வது என்பது, அவர்கள் மனித கடவுளை எப்போதுமே தம்மிடம் வைத்து கொள்வதாகும். யேசுவிடம் அவர்கள் இந்த கேள்வியை கேட்கும்போது, அவர்கள் நாணயத்தை வைத்து கொண்டேதான் கேட்டனர்.
சீசருக்கு வரி செலுத்துவது என்பது, ஒரு அயல் நாட்டிற்கு வரி செலுத்துவது என்பதை விட, அதற்கு மேலான, ஒரு சமய மறைபொருளை எடுத்து காட்டுவதாகும். யேசு ஒரு இறைவாக்கினராக இருந்தால், அவர் யூதர்கள் இது மாதிரியான பொற்காசுகளை வைத்து கொள்ள கூடாது என்று பேசியிருக்க வேன்டும். அல்லது அவர் உண்மையான மெசியாவாக இருந்தால், அயல் நாட்டின், வரிகளுக்கும், அடிமைதனத்திற்கும், அவர் விடுதலை வாங்கிகொடுக்க வேண்டும். அப்படித்தான் பரிசேயர்கள் எதிர்பார்த்தனர்.
பரிசேயர்கள், யேசுவிடம் காமிக்கும்போது, அந்த பொற்காசை எங்கேயிருந்து எடுத்தார்கள் என்று நமக்கு தெரியாது. அவர்கள் பைகளில் இருந்து எடுத்திருந்தால் (அப்படிதான் இருந்திருக்கும்) அவர்கள் கபட வேடம் போடுகின்றனர் என்று நமக்கு தெரிகிறது. ஆனால் யேசுவிற்கு அவர்கள் கபட வேடத்தை வெளிக்காட்டவேண்டும் என்ற விருப்பம் இல்லை. உண்மையான மெசியாவின் இலக்கு என்ண என்று காட்ட விரும்பினார்.
நாம் கடவுளின் பிள்ளைகளாக இருந்தால், யேசு தான் நமது இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ளார். மேலும், உண்மையான மெசியாவின் மூலம் நாம் மீட்கப்பட்டுள்ளோம். நமது பாவங்களால், நாம் சாத்தானின் அடிமைகளாக இருந்தோம், அந்த அடிமைத்தனத்திலிருந்து, யேசு நம்மை மீட்டுள்ளார்.
மற்றவர்கள் உங்களை பார்க்கும்போது, யாருடைய அடையாளமாக, நீங்கள் காட்சியளிக்கிறீர்கள்? மற்றவர்கள் உங்களை பார்க்கும்போது, உங்கள் இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ள யேசுவை பார்க்கிறார்களா? எந்த அளவிற்கு அவர்கள் பார்க்கிறார்களோ? அந்த அளவிற்குள் தான் நீங்கள் இறையட்சியில் இருக்கிறீர்கள்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, October 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment