அக்டோபர் 5, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 27வது ஞாயிறு
Isaiah 5:1-7
Ps 80:9, 12-16, 19-20 (with Is 5:7a)
Phil 4:6-9
Matt 21:33-43
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 21
33 ″ மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.பிழிவுக்குழி என்பது திராட்சைப் பழங்களை மிதித்துச் சாறு பிழிவதற்க்காகப் பாறையில் வெட்டப்படுவது. 34 பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். 35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். 36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். 37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். 38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ' இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். 40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்? ' என இயேசு கேட்டார். 41 அவர்கள் அவரிடம், ' அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் ' என்றார்கள். 42 இயேசு அவர்களிடம், ' கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? 43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com)
"இறையாட்சிக்கு யார் அதிக பழங்களை ஈட்டு கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு இறையாட்சி கிடைக்கும்" என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. நாம் இந்த பூமியில் இருக்கும்போது நமக்கு இறையாட்சி என்பது என்ன? அதனுடைய பழங்கள யாவை? நமது பூமி வாழ்வில் எப்படி ஈட்டு கொடுக்க போகிறோம்.
கிறிஸ்துவை போல நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுமே, நாம் ஈட்டும் பழங்களாகும், நாம் யேசுவோடு சேர்ந்து இறையரசுக்கு செல்லும் பயனத்தின் விளைவுகளாகும். நாம் யேசுவை போல் அன்பு செய்தால், அவரை போல் நாமும் மற்றவர்களை மன்னித்தால், உண்மையை போதிப்பதாலும், துவண்டு போனவர்களுக்கு ஆறுதலாயும் , இருந்தால், நாம் இறையரசில் வாழ்கிறோம்.
நான் கத்தோலிக்கர்களிடம், "நீங்கள் மோட்சத்திற்கு போவீர்கள் என்பதை நம்புகீறீர்களா? " என்று கேட்டால், அதிகம் பேர் நிச்சயமாக சொல்வதில்லை, சந்தேகத்துடனே சொல்கின்றனர். ஏனினில், வரும் காலங்களில், ஏதேனும் சாவான பாவம் பன்னிவிடுவோமோ என்ற பயம். அல்லது, "ஆம் போவோம்" என்று சொன்னால், அவ்வளவு அடக்கமான பதிலாக இருக்காது என்று நினைக்கின்றனர்.
நாம் யேசுவை போல முழுமையாக, நம்மால் செய்ய முடியாது. நம்மில் அதிகம் பேர், உத்தரிக்கிற் ஸ்தலத்தில் சில காலம் செலவழிக்கவேண்டும்.அங்கு நம்மிடம் உள்ள இறையாட்சிக்கு தேவையில்லாத விசயங்கள் நம்மிடமிருந்து களையப்படும். எல்லா கறைகளும் நீக்கப்பட்ட பின், நாம் நிச்சயம் மோட்சத்திற்குள் இருப்போம். நாம் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குள் சென்றுவிட்டால், நிச்சயம் மோட்சத்திற்குள் செல்வோம். நாம் கிற்ஸ்துவை போல இருக்க வேண்டும் என்ற ஆவல், நியாயமான ஆவலாயிருந்தால், நிச்சயம், மோட்சத்திற்குள் செல்வோம். இந்த ஆவலினால், நாம் ஒருபோதும் சாவான பாவம் செய்யமாட்டோம். அதனால், நாம் கிறிஸ்துவை விட்டு அகன்று செல்லமாட்டோம். அதைவிட நமது மரண நேரத்தில், யேசுவை மிகவும் மகிழ்ச்சியுடன், அவரோடு சேர்ந்து அனைப்போம்.
கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினால், அவருக்காக நீங்கள் எந்த காரியம் செய்தாலும், அதுவே நமக்கு சாட்சியாக, நாம் இறைவாழ்வில் வாழ்கிறோம் என்பதை குறிக்கும். மேலும் நாம் மோட்சத்தில் என்றென்றும் வாழ்வோம்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment