Friday, January 23, 2009

ஜனவரி 25, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 25, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3 வது ஞாயிறு


The Feast of the Conversion of Saint Paul
Acts 9:1-22 (or Acts 22:3-16)
Ps 117:1bc, 2 (with Mark 16:15)
1 Cor 7:29-31
Mark 16:15-18

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் பணி)

அதிகாரம் 9
1 இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி,2 இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.3 இவ்வாறு அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.4 அவர் தரையில் விழ, சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.5 அதற்கு அவர், ஆண்டவரே நீர் யார்? எனக்கேட்டார். ஆண்டவர், நீ துன்புறுத்தும் இயேசு நானே.6 நீ எழுந்து நகருக்குள் செல்: நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர்.8 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.9 அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.10 தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, அனனியா என அழைக்க, அவர், ஆண்டவரே, இதோ அடியேன் என்றார்.11 அப்போது ஆண்டவர் அவரிடம், நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார் என்று கூறினார்.13 அதற்கு அனனியா மறுமொழியாக, ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்றார்.15 அதற்கு ஆண்டவர் அவரிடம், நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்.16 என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன் என்றார்.17 அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார் என்றார்.18 உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.19 பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார்.20 உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.21 கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய், எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கே வந்தவன் தானே இவன் என்றார்கள்.22 சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், இயேசுவே கிறிஸ்து என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்.

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 16
15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார்.



(thanks to www.arulvakku.com)


இன்றைய திருத்தூதர் பணிகளில் வரும் யூதாவும், அனனியாவும் சாதாரன மனிதர்கள். ஆனாலும், திருச்சபையின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர். ஏனெனில், திருச்சபையின் மிக பெரிய எதிரியாக இருந்தவருக்கும், மிகவும் கருனையுடன் பவுலுக்கு உதவு புரிந்தனர்.

முதலில், யூதா பவுலுக்காக அவருடைய வீட்டை மிகவும் அதிமுக்க்கியமான காரனத்திற்காக, திறந்தார். அப்படி திறந்தால், பல விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று தெரிந்தும், கிறிஸ்துவின் மிக முக்கிஅ எதிரியாக இருந்த பவுலுக்காக திறந்து உதவினார்.

பிறகு அனனியா, அவர் வீட்டில் அமைதியாக ஜெபித்து கொண்டு இருக்கும்போது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, அனனியா என அழைக்க, அவர், ஆண்டவரே, இதோ அடியேன் என்றார்.11 அப்போது ஆண்டவர் அவரிடம், நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார் என்று கூறினார்


"கண்டிப்பாக செய்கிறேன், எப்படி நான் அவருக்கு உதவவேண்டும்" என்று அனனியா கேட்டார்.
"அவர் கன்கள் கட்டப்பட்டுள்ளன, நீ போய் அவரது கண்களில், உனது கையை வை, அப்போது அவர் கண்கள் திறக்கபடும்" என்று கூறினார்.

அனனியா இந்த செயலை செய்வதற்கு போதிய தகுதி இல்லாதவர். எனினும், யேசுவின் மூலமாக பல அருஞ்செயல்கள் செய்ய முடிந்ததால், அவர் இதனை ஏற்றார்.

"நான் செய்கிறேன், ஏற்கனவே, என் மூலம் நீங்கள் நோயுற்று இருப்போரை குணமாக்கி உள்ளீர்கள்" என்று கூரினார்.
"ஆமாம், ஆனால், நீ குணமாக்க வேண்டிய நபர் டார்சஸ் நகரின் சவுல் " என்று கடவுள் கூறினார்.
ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்றார்
அதற்கு ஆண்டவர் அவரிடம், நீ செல். என்று கூறினார். அனனியா சென்றார்.

யூதாவும், அனனியாவும் தூய பவுலை மனம் மாற்றினார்கள். யேசுவிற்காக அதனை செய்தனர். அதற்கு பிறகு நற்செய்தியில் அவரிக்ள் பெயர் குறிப்பிடபடவில்லை. அவர்கள் தூய பவுலுக்க என்ன செய்தார்களோ, அது அகில உலகிற்கும்,பெரிய நல்ல விளைவை ஏற்படுத்தியது. இன்றும் அதன் பலனை நாம் அனுபவித்து வருகிறோம். யேசு பவுலை மிகப்பெரிய இறைதூதராக , பலரை மனமாற்றுபவராக ஆக்குவதற்கு துனை நின்றார்கள்.

நாமும் அனைவரையும் மணமாற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். நாமும் தூய பவுலை போல, மிக பெரிய ப்ர்சங்கம் செய்ய வேண்டும் என்றோ, மிகபெரிய பேச்சாளரகவோ இருக்க வேண்டும் என்றில்லை. அல்லது, தினமும் நாம் செய்யும் முயற்சி, மணம் மாறுதலாக இருக்க வேண்டும் என்றில்லை.

மணம் மாற்றுதல் என்பது, தினமும் நாம் செய்கிற சாதாரன செயல்களில் யேசுவை போல் நாம் நடந்து கொண்டு, நம்மிடம் நற்செய்தி கேட்பவர்கள் ஆர்வம் கொண்டிருந்தால், அவர்களுக்கு யேசுவை நாம் வெளிப்படுத்தி, மணம் மாற்ற வேண்டும்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: