பிப்ரவரி 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4 வது ஞாயிறு
Deut 18:15-20
Ps 95:1-2, 6-9
1 Cor 7:32-35
Mark 1:21-28
அதிகாரம் 1
21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22 அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24 அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25 ' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார்.26 அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28 அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறு நற்செய்தி, யேசுவின் அதிகாரத்தை தெளிவுபடுத்துகிறது. நாமும் அவருடைய அதிகாரத்தை புரிந்து கொண்டு, அதனை ஏற்றுகொண்டால், நாம் இறைவனில் மகிழ்ச்சியோடு இருக்கலாம், என்ன கஷ்டம் நமக்கு வந்தாலும், நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்ளலாம். ஏன்? ஏனெனில், அவருடைய அதிகாரம் தான் எல்லாவற்றிற்கும் மேலானது என்று நமக்கு தெரியும். அதன் அர்த்தம் என்னவென்றால், அவர் அதிகாரத்தின் கீழ் இருக்கும் எல்லாமே, கெட்டதாக இருந்தாலும், நல்லதாக மாற்றப்படும். சோகத்தில் முடியும் எந்த ஒரு நிகழ்வும், வெற்றியாக மாற்ற்ப்படும். கவலைகள் சந்தோசமாக மாறும். செயலற்று போகும் நிலை, நமக்கு புது வளர்ச்சிக்கு திறவுகோலாக மாறும். புதிய அறிவாற்றலையும், மற்றவர்களை மனம் மாற்றக்கூடிய செயல்கள் செய்ய புதிய தெம்பையும் தரும்.
எனினும், கிறிஸ்துவின் அதிகாரத்தை நாம் நிராகரித்தால், (நாம் தான் நமது செயல்களுக்கு பொறுப்பானவர்கள் என்று நினைத்து கொண்டு, நமது ப்ரச்னைகளுக்கு முடிவெடுப்பதிலும், கடனமான தருனத்திலிருந்து வெளியே செல்ல நினைப்பதும்) இன்னும் ப்ரச்னையை தீவரப்படுத்தும்.
சந்தோசத்தின் வழியானது யேசுவின் காலடிதடங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தீயனவற்றிற்கும், நமது துன்பங்களிலிருந்து வெளியே வர , நாம் கிறிஸ்துவின் அதிகாரம் மூலம், பயன் பெற, நாம் அவருடைய முன் மாதிரியை பார்த்து பின செல்லவேண்டும் மேலும், அவரது போதனைகளின் படி வாழவேன்டும்.இதன் அர்த்தம் என்ன வெனில், நாம் அவரை நம்ப வேண்டும். அவருடைய வழிகள் தான் சரியானவை என்று புரிந்து கொண்டு, (கொஞ்சம் கடினமாக இருந்தாலும்), அதன்படி நடக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால், யேசு யேசுவின் உயிர்ப்பை நாமும் யேசுவோடு சேர்ந்து அடைய விருப்பமாக உள்ளோம் என்று அர்த்தம்.
வெற்றியடைய, எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை. தீயவைகளை வென்றிட எந்த ஒரு சுலபமான வழியும் இல்லை. இவைகள யாவும் உன்மை இல்லையெனில், யேசு ஏன் சிலுவையில் இறக்க வேண்டும்?
நல்ல செய்தி - நாம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு என்ன காரனமெனில் - மிகவும் அதிகம் அன்பு செய்கின்ற, மிகவும் ஆற்றலுடைய, அதிக ஞானமுடைய கடவுள் அவருடைய வானளாவிய அதிகாரத்தை நமக்காக உபயோகிகிறார். கேள்வி என்னவென்றால்:நீங்கள் உங்களை அவர் முன் (அதிகாரத்தின்) சமர்ப்பீர்கள?
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment