மார்ச் 22, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4 வது ஞாயிறு
2 Chronicles 36:14-16, 19-23
Ps 137:1-6
Ephesians 2:4-10
John 3:14-21
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 3
14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.19 ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.20 தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.21 உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.
(thanks to www.arulvakku.com)
நாம் எல்லாம் ஏன் இருளிலேயே ஒளிந்திருக்கிறோம்? நாம் ஏன் நம் பாவங்களை மூடி மறைக்கிறோம், அவைகளை வெளியே காட்டாமால், பாவசங்கீர்த்தனம் செய்து, நற்கருணை யேசுவிடம் நாம் என்ன பாவம் செய்தோம் என சொல்லி மன்னிப்பு கேட்பதில்லை.
பாவசங்கீர்த்தனத்தில், நம்மை சந்திப்பது யேசு கிறிஸ்து தான், குருவானவராக அங்கே நமக்கு காட்சி அளிக்கிறார். எல்லா குருவானவர்களும் இரகசியத்தை காக்க வேண்டும் என்று உறுதி மொழி அளித்துள்ளனர். இன்றைய நற்செய்தியில், யேசு "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல" என்று நமக்கு நினைவுறுத்துகிறார். நமது பாவங்கள் வெளியே தெரியும்போது, நாம் ஒளியில் வருவது நல்லது தான்.
எப்படி இருந்தாலும், நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய விரும்புவதில்லை. நமது பாவங்களால், நாம் குற்ற உணர்வு அதிகமாகி, சுய கொளரவம் குறைந்து , நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய செல்வதில்லை. மேலும், மற்றவர்கள் நம்மை இந்த பாவங்களால் நேசிக்க மாட்டார்கள், நாம் நம்மையே மன்னித்து கொள்ள முடிவதில்லை,, என்று நினைத்து நாம் பாவசங்கீர்த்தனம் செய்வதில்லை.
குற்ற உணர்வு, நாம் மணம் திரும்பி, மாற்றம் அடைவதற்கு பெரிய தூண்டுதலாக இருக்கும், ஆனால், ந்ம்முடைய குறைவான சுய மதிப்பீட்டினாலும், நாம் மன்னிப்பு பெற தகுதி இல்லாதவர்கள் என நினைக்கிறோம். நாம் நமது பாவங்களை நினைத்து அவமானம் அடைகிறோம், அதனால், நமது பாவங்கள வெளியே தெரிந்துவிடும் என நாம் பயப்படுகிறோம்.
எனினும், நாம் யேசுவிடம், நம் குறைவான சுய கொளரவத்தையும், நமது பயத்தையும், போக்க அனுமதித்தால், யேசு அதனையெல்லாம் போக்கி சந்தோசமாக்கி விடுவார். உங்களின் முதல் படி, சமய ஆலோசனை வழங்குபவர் அல்லது பாவசங்கீர்த்தனத்தில் குருவானவராக இருக்கட்டும். உங்களுடைய குணமடைதல், பாவசங்கீர்த்தனத்தில் என்ன கிடைக்கிறதோ அதன மூலம் கிடைக்கும்.
குருவானவர் மூலமாக யேசு உங்களிடம் பேசி, உங்களுக்கு மன்னிப்பையும், இரக்கத்தையும், நிபந்தனையற்ற அன்பையும் உங்களுக்கு வழங்குகிறார்.
இன்றைய நற்செய்தியில், யேசு " உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். ", அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை" என்று நினைவூட்டுகிறார். நாம் தப்பு செய்துவிட்டோம், என்று ஒத்து கொள்ளும்போது, கிறிஸ்துவின் வேலையாளிடம் (குருவிடம்) சத்தமாக சொல்லும்போது, நாம் யேசுவினால் காப்பாற்றபடுகிறோம். குருவின் குரல்கள் மூலம் யேசு நமக்கு பேசுவதை கேட்கிறோம். மேலும் அதே பாவங்களை செய்யாமல் இருக்க யேசுவிடமிருந்து, ஆற்றலை பெறுகிறோம்.
இருளிலேயே ஏன் இன்னும் துன்புற்று இருக்க வேண்டும். யேசு உங்களை மீட்க வந்துள்ளார்!.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment