Friday, March 6, 2009

மார்ச் 8, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 8, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 2 வது ஞாயிறு

Gen 22:1-2, 9-13, 15-18
Ps 116:10, 15-19
Rom 8:31b-34
Mark 9:2-10

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 9
2 ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.3 அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.4 அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.5 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்றார்.6 தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.7 அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ″ என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது.8 உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், ' மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ' இறந்து உயிர்த்தெழுதல் ' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
(thanks to www.arulvakku.com)

பைபிளில் குறியீடுகளில் பெரிய மலை என்றால், கடவுளோடு மிகவும் நெருங்கி செல்வதற்கு சமமாகும். அந்த டபோர் மலையில் தான், யேசு அவரின் நெருங்கிய நன்பர்களிடம் கடவுள் புகழொளியை காட்டினார்.

மிக "பெரிய மலை" என்று பைபிளில் குறிப்படப்பட்டுள்ளது போல, அது ஒன்றும் மிகப்பெரிய மலை அல்ல. எது மிகப்பெரிய விசயம்/நிகழ்ச்சி என்றால், அந்த மூன்று சீடர்களும், யேசுவின் தோற்றம் மாறுதலை அடைந்ததை, அவர்கள் கண் முன்னெ பார்த்தார்கள். அவர்கள் பார்க்க வேண்டிய தேவையாக இருந்தது. ஏன்? ஏனெனில், சில நாட்களுக்கு பிறகு, யேசு செய்த இறைசேவையை இவர்கள் இந்த உலகில் தொடர வேண்டும்.

தந்தை கடவுள் " என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று கூறினார். நாம் யேசுவின் போதனையை செவிசாய்த்தால், நாமும் தோற்றம் மாறுகிறோம். இந்த தவக்காலம், நமக்கும் தோற்றம் உருமாரும் காலம், நமக்கு மலை உச்சியில் நடந்த உருமாற்றாம் போல நடக்கும். நாம் யேசுவை அவரின் ஒளியை நம்மில் வர வழி விட்டே ஆக வேன்டும். அந்த ஒளி நம்மில் உள்ள இருளை அனைத்து விடும்.

எவ்வளவுக்கு அதிகமாக நாம் யேசுவின் போதனைகளை கேட்டு, அதனை நம் வாழ்விலும் இறைசேவையிலும் நடைமுறைபடுத்துகிறோமோ, அவரை போல நாமும் மாறுகிறோம். மேலும் யேசுவை போல நாம் மாற, நமது வாழ்வும் தோற்றம் மாறி, நம்மை சுற்றியும் உள்ள வாழ்வு மாறுகிறது.

முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல, ஆப்ரகாம் எப்படி அவரது மகனை அவரோடு வைத்து கொள்ளாமல், கடவுளுக்கு கொடுக்க முன்வந்தாரோ, அதனை போல, அவரது மகனை அவரோடு வைத்து கொள்ளாமல், நமக்காக கொடுத்தார்.

அதே போல , கிறிஸ்துவ வாழ்வில் உள்ள பொருப்புகளை உணர்ந்து, நாம் நமது விசுவாச வாழ்வில் சந்திக்கும் சகோதரர்களிடம் கிறிஸ்துவை கொடுக்க வேன்டும். இது ஒரு சின்ன சினேகமான சிரிப்பாக இருக்கலாம், சின்ன உதவியாக இருக்கலாம், இரக்கமும் அக்கறையும் கொண்டு அவர்கள் ப்ரச்னை செவிமடுத்தலாக இருக்கலாம், மன்னிப்பு, உதவும் கரங்கல், கொஞ்சம் பண உதவி, இதெல்லாம் செய்தால், நாம் கிறிஸ்துவின், கரங்களாக , காலாக இந்த உலகில் இருப்போம். நாம் கிறிஸ்துவின் குரலாகவும், அவரின் குணப்படுத்தலின் அன்பளிப்பகவும் இருப்போம். நாம் அவரின் இந்த உலகத்தின் உடலாக இருக்கிறோம். மக்களின் வேண்டுதலுக்கு நாம் கொடையாக இருக்கிறோம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: