Saturday, January 30, 2010

ஜனவரி 31, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 31, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு

Jer 1:4-5, 17-19
Ps 71:1-6, 15, 17
1 Cor 12:31 -- 13:13
Luke 4:21-30

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 4

21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ' இவர் யோசேப்பின் மகன் அல்லவா? ' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.23 அவர் அவர்களிடம், ' நீங்கள் என்னிடம், ' மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும் ' என்னும் பழமொழியைச் சொல்லி, ' கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் ' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது ' என்றார்.28 தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வு+ரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்.30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியை கொஞ்சம் கூர்ந்து நோக்கி பாருங்கள். போன வார ஞாயிறின் நற்செய்தியை படித்து ( ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்) முடித்து, இந்த நற்செய்தி, அவர் மூலம் இன்று நிறைவேறியது என்று அந்த தொழுகை கூடத்தில் கூறினார். அங்கே அனைவரும் மிகவும் உயர்த்தி புகழ்ந்து கூறினார்கள். ஆனால், இன்றைய நற்செய்தியின் கடைசியில், ஏன் அவர்களெல்லாம், யேசுவின் மேல் சீற்றங் கொண்டனர். அவர்களின் குணத்தை எது மாற்றியது. ?


அவர்களின் அச்சமும், வியப்பும், "யேசு சூசையப்பரின் மகன் " என்று நினைத்து பார்த்த போது, இன்னும் குழம்பியும் போனார்கள். யேசு குழந்தையாக இருந்த பொழுது, அவரை அறிந்தவர்கள் தான் இப்படி குழம்பி போனார்கள். யேச் குழந்தையாக நடக்க முயற்சி செய்த பொழுது, கீழே விழுந்ததையும், இளமை பருவத்தில், தச்சு வேலை செய்யும் போது, தெரியாமல் , சுத்தியால் அடித்து கொண்டதையும் அறிந்தவர்கள், மேலும், யேசுவின் தந்தை இறந்த பொழுது, யேசு அழுததை பார்த்தவர்கள் தான் இன்னும் குழம்பி போனார்கள்.

அவர்களது ஆவியின் படி கேட்காமல், அவர்களின், ஏற்கனவே ஒரு முடிவோடு, கருத்தோடு ஒன்றிபோன மனசுடன், அவர்கள் யேசுவின் பேச்சை கேட்டார்கள், அப்பொழுது, அவர்களின் மனப்பான்மை மாறியது. இது தான், அவர்களை தெய்வத்திலிருந்து தூரம் போகம் வைத்தது. மேலும், அவர்களின் உணர்ச்சிகளை பலவிதமாக குழப்பியது.

உங்களின் குணம் அறிந்த ஒருவர், உங்களிடம் எப்போதும் எதிர்பார்க்கிற நடவடிக்கை களிலிருந்து, நீங்கள் மாறி நடந்து அவர்களை குழப்பினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். நீங்கள் மிகவும் இளையவர் , அல்லது மிகவும் வயதானவர், அதனால், உங்களால் இத்தகைய வேலைகளை செய்ய முடியாது, என்ற நினைப்பிலும், அல்லது, உங்கள் கல்வி தகுதி, அவர்கள் எதிர்பார்க்கிற அளவிற்கு இல்லை, அல்லது, நீங்கள் இதை தான் பேச போகிறீர்கள் என்று சொல்லாமல் பேசும்போது, அவர்கள் எப்படி குழம்பி போவார்கள் என்று நினைத்து பாருங்கள். எப்படி பட்ட உணர்ச்சி வசமான எதிர் விளைவுகள் ஏற்படும் என்று பாருங்கள்.
அவர்கள் நம்மை நம்ப வேண்டும், என்று நாம் எதிர்பார்க்கிறோம், அவர்கள் நம் மேல் நம்பிக்கை கொள்ளாமல் போகும்போது, நமது ஆச்சரியம், நம்மை உணர்ச்சி வசப்படவைத்து, அவர்கள் மேல் அதனை கான்பிப்போம். ஆனால், யேசு எப்படி இது மாதிரியான நிகழ்வை கையான்டார் என்பதை பாருங்கள், அவர் அமைதியாக உண்மையை உரைத்தார், அந்த உண்மை பரிசுத்த ஆவியினால் உருவாக்கப்பட்டது. யேசு உணர்ச்சி வசப்பட்டு பேசினாரா? அவரும் நம்மை மாதிரி மனிதனாக தான் இருந்தார்; நாம் அனைவருமே கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள், நம் அனைவருக்குமே உணர்ச்சி வசப்பட முடியும். உணர்ச்சிவசப்படுதலில் ப்ர்சனை இல்லை. நாம் உணர்ச்சி வயப்பட்டு கேட்க ஆரம்பிக்கும் போது தான், ப்ரச்ன்னை ஆரம்பமாகிறது, பரிசுத்த ஆவியின் துனையுடன் கேட்க ஆரம்பித்தால், ப்ரச்சினை வருவதில்லை.

© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain and may NOT be copied without permission.
You may print one copy for your own personal use.
For PERMISSION and info on how to copy this reflection for sharing, see:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, January 22, 2010

ஜனவரி 24, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 24, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆண்டின் 3ம் ஞாயிறு

Neh 8:2-6, 8-10
Ps 19:8-10, 15
1 Cor 12:4-11
Luke 1:1-4; 4:14-21


லூக்கா நற்செய்தி



அதிகாரம் 1

1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்: 2 தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

அதிகாரம் 4
14 பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.15 அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.17 இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.

(thanks to www.arulvakku.com)




இன்றைய நற்செய்தியில், "' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்" என்று யேசு சொல்வதாக நாம் கேட்கிறோம். நீங்கள் கேட்டது , அவரின் ஆசையை நிறிவேற்றிவிட்டீர்கள்.



இந்த இறைசேவை, யேசு மோட்சத்திற்கு சென்றவுடன், முடிந்து விட்டதா?

கொரிந்தியர் வாசகத்தில் கூறப்பட்டுள்ளது போல, நாம் கிறிஸ்துவின் உடலாய் இந்த உலகில் இருக்கிறோம். நாமெல்லாம், இந்த உடலின் முக்கிய பாகங்களாக இருக்கிறோம். நீங்கள் உங்களையே குறைந்து மதிப்பிட்டு கொள்ளாதீர்கள். கடவுள் உங்களை உருவாக்கி, திருச்சபைக்கு உங்களை கொண்டுவந்துக், உங்களால் நிச்சயம் ஒரு மாறுபாட்டை திருச்சபைக்கு கொண்டுவரம் முடியும் என்று நம்பி உங்களிடம் எதிர்பார்க்கிறார். உங்களால் செய்ய முடிவதை வேறு யாரும் செய்ய முடியாது. கடவுளின் திட்டத்தில், உங்களால், இந்த உலகை, நல்ல நிலைக்கு கொண்டு போக முடியும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.


கிறிஸ்தவர்கள் அனைவரும், விசுவாசமிக்க குழுவாக, கிறிஸ்துவின் உடலாக இந்த உலகில் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும், திவ்ய நற்கருணையை நாம் பெறும்போது,கிறிஸ்துவின் உடலை, அவர் உடலாக நாம் பெற்று கொள்கிறோம். அதன் மூலம், நமது இறைசேவையை மீண்டும் புதுப்பித்து கொள்கிறோம். கிறிஸ்துவின் நோக்கம் தான், நமது நோக்கமாக இருக்கிறது.


யேசுவை திவ்ய நற்கருணையில் பெரும்போது, யேசுவை, முழு மனிதனாகவும், முழு தெய்வமாகவும் பெறுகிறோம். அவரின் சேவையையும், முழுதும் பெறுகிறோம். ஆண்டவரின் ஆவியையும் பெற்றுகொள்கிறோம். ஒவ்வொரு திருப்பலியும், நமது இறைசேவையை புதுபிக்கும் கருவியாக உள்ளது. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைபட்டோர் விடுதலை அடையவும், குருடர்கள் கண் திறக்கவும், இறைவனுக்கு ஏற்றதை, அனைவருக்கும் அறிவிக்கவும். நாம் நமது இறைசேவையை தொடர வேண்டும்.


இதனையே வேறு மாதிரியாக சொல்வதானால், ஒவ்வொரு முறையும், கிறிஸ்துவின் திவ்ய நற்கருணை நாம் பெறும்போது, இன்றைய நற்செய்தியில், யேசு சொல்வது நமக்கும் நடக்கிறது.

இப்படி நடக்காமல் இருக்க , பாவம் தான் தடுக்கிறது.

மற்றவர்களின் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காத பொழுது, பாவங்கள் இந்த உலகில் மேலோங்கி இருப்பதற்கும், நற்செய்தியை , யேசுவின் மீட்பை கேட்காமல், துன்புறும் ஆன்மாக்களும் அதிகம் இருப்பதற்கு காரனம், கிறிஸ்துவின் உடல் பாகங்களாகிய நாம், நமது இறைசேவையை சரியாக செய்ய வில்லை என்று அர்த்தம். இந்த உலகிற்கு தேவைசெய்கிறார். யான அனைத்தையும் நம் மூலம் கடவுள் கொடுக்கிறார். யேசு அவரின் இறைசேவையை, நம் மூலம் தொடர்ந்து

© 2010 by Terry A. Modica

Saturday, January 16, 2010

17 ஜனவரி 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

17 ஜனவரி 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

Isaiah 62:1-5
Ps 96:1-3, 7-10
1 Cor 12:4-11
John 2:1-11


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 2

1 மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″ திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ″ என்றார்.4 இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார். 5 இயேசுவின் தாய் பணியாளரிடம், ' அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் ' என்றார்.6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.7 இயேசு அவர்களிடம், ' இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் ' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.8 பின்பு அவர், ' இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,10 ' எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்? ' என்று கேட்டார்.11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

(thanks to www.arulvakku.com
)

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, மாறுபட்ட கருத்து கொண்டிருந்தால், எந்த பாவமும் இல்லாமல், அதனை எப்படி எதிர்கொள்வது, அந்த ப்ரச்னைக்கு நல்ல முடிவு கொடுப்பதற்கு ஒரு நல்ல எடுத்து காட்டாக உள்ளது.
மேரி திருமண வீட்டில் உள்ள தேவையை தெரிந்து கொண்டு, அந்த தேவையை யேசு பூர்த்தி செய்ய வேண்டும் என விரும்பினார்.தெய்வீக அற்புத நிகழ்ச்சி அன்றி வேறு எப்படியும், அவரால், இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பது மேரிக்கு தெரியும். அவருடைய வேண்டுதலுக்கு, யேசுவின் தெய்வீக அருளோடு அவர் செய்ய வேண்டும் என விரும்பினார். ஆனால், யேசு மனித குணத்தோடு, முதலில் மறுத்தார். அவர் அவருடைய தெய்வீக குணத்தை அங்கே வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்த மாதிரி அற்புதத்தை அவர் முதலில் செய்ய விரும்ப வில்லை. ஆன்மாக்களை குணப்படுத்தவே விரும்பினார். வெறும் தொட்டியில் திராட்சை ரசத்தை நிரப்ப அல்ல.

4 இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார், இது அவர் எப்படி சொல்கிறார் என்றால், "நான் உங்கள் வேண்டுதலை ஏற்கிறேன், ஏவாளின் பரிசுத்த மகளே, நான் செய்ய வேன்டிய இறை சேவை, இந்த சூழ்னிலையில், ஆரம்பிக்கமுடியுமா? நீங்களே யோசித்து சொல்லுங்கள், மக்கள் அனைவரும், பல விசேச நிகழ்ச்சிகளுக்கு என் உதவியை தேடி வருவார்கள், இவ்வுலக இன்பங்களுக்கு என்னை தேடுவார்கள், ஆனால், அவர்களின் இறுதி வாழ்க்கைக்கு மீட்பளிக்கவே வந்தேன்.

கத்தோலிக்கர்கள் நாம் அனைவரும், இன்றைய நற்செய்தியை, கன்னி மரியாளின் உதவிக்கு சாட்சியாக, நமது விசுவாச வாழ்வில் எடுத்து கொண்டு, அவர் எப்போதும், நமக்கு உதவி செய்வார் என்று நம்புகிறோம். யேசுவிடமிருந்து நமக்கு என்ன வேண்டுமோ, அதனை நம் அன்னை மரியாள் நமக்காக யேசுவிடம் வேண்டி பெற்று தருவார்.ஏனெனில், அன்னை மரியாளால், யேசுவின் மனதை மாற்றி, நமக்கு பெற்று தருவார். யேசு முடியாது என்று சொன்னார், ஆனால், அவர் கருத்தை மாற்றி, மரியாள், அவருக்கு தேவையானதை பெற்றார். இறுதியில் மரியாள் வென்றார். யேசு தோற்றார்.



இப்படித்தான் நாம் நமது கருத்து வேற்றுமைகளை பார்க்கிறோம்? எந்த ஒரு கருத்து வேற்றுமையிலும், ஒருவர் வெற்றியாளராகவும், ஒருவர் தோற்காவிட்டால், அந்த ப்ர்ச்னை என்றுமே முடியாது. நாம் கடவுளிடம் சில வேண்டுதல்களை கேட்டு, அது நமக்கு கிடைக்காத பொழுது, நாம் தோற்றவராக நாமே நினைக்கிறோம். அதனால், இன்னும் அதிகம் வேண்டுகிறோம், அதன் மூலம் கடவுளை தோற்பவராக ஆக்க நினைக்கிறோம். அதற்கும் ஒரு பதிலுமில்லை என்றால், அன்னை மரியாளை நம் பக்கம் இருந்து, அவர் மகனிடம் பரிந்து பேசி, அவர் விருப்பத்திற்கு மாறாக நமக்கு தேவையானதை கேட்கிறோம்.

ஆனால், கடவுள், தொடக்கத்தில் இருந்தே நாம் வெற்றியாளராக இருக்க வேண்டும் என விரும்புகிறார். நமக்கு எது நல்லதோ அதையே நமக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறார். திராட்சை ரசம் பரிமாறுபவரிடம் , கன்னி மரியாளும் கடவுளின் விருப்பத்தை அறிந்திருந்தாலும், "எனது மகன் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று கூறினார். கருத்து வேற்றுமைகள் எல்லாம் ஒன்றும் தப்பானது இல்லை. யேசு அந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மேல் யேசு அக்கறை அக்கறை கொண்டுள்ளார் என்று மேரி நம்பினார். யேசுவோ, கடவுள் அவரது மகனின் இறைசேவையிலும், மீட்பு செயலிலும், மக்கள் மேலும் அக்கறை கொண்டுள்ளார் என்று நம்பினார். இது இரண்டு பேருக்குமே வெற்றி - வெற்றி கிட்டும் சூழ்நிலை ஆகும்.

© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain, and should NOT be copied without permission. For PERMISSION and info on how to copy this reflection, g o to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, January 9, 2010

ஜனவரி 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்துவின் ஞானஸ்னானம்

Isaiah 42:1-4, 6-7
Ps 29:1-4, 9-11
Acts 10:34-38
Luke 3:15-16, 21-22


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 3

15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.19 குறுநில மன்னன் ஏரோது தன் சகோதரன் மனைவியாகிய ஏரோதியாவை வைத்திருந்ததன் பொருட்டும் அவன் இழைத்த மற்ற எல்லாத் தீச்செயல்கள் பொருட்டும் யோவான் அவனைக் கண்டித்தார்.20 எனவே அவன் தான் செய்த தீச்செயல்கள் எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலும் அடைத்தான்.21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

(thanks to www.arulvakku.com)


இன்றைய வாசகங்கள் அனைத்தும், எதிர்பார்ப்புகளை பற்றியே இருக்கிறது. நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு நடக்கும் அநீதியிலிருந்து கடவுள் உங்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? சாத்தானிடமிருந்து உங்களை எப்படி மீட்க வேண்டும் என நினைக்கிறீர்கள், உங்கள் அன்பிற்குரியவர்கள் கடவுளிடம் திரும்ப வேண்டும் , அவர்களுக்கு கடவுள் ஆறுதல் தரவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? உங்களுக்கு என்ன வழிகாட்டுதல் வேண்டும் என நினைக்கிறீர்கள் இருந்தும் இனும் குழப்பத்துடனும், நிச்சயமில்லாமலும் இருக்கிறீர்கள்?

நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும்போது , கிறிஸ்துவின் அன்பளிப்பான அமைதியை நீங்கள் உங்களுள் உணர்கிறீர்களா? அல்லது, பயத்திலும், கவலையிலும், அமைதியின்றியும் இருக்கிறீர்களா?

இன்றைய நற்செய்தியில், யோவானை சுற்றியிள்ளவர்கள் அனைவரும், அவர் தான் மெசியா என எதிர்பார்த்தனர். அநீதிக்கு எதிராக மெசியா வருவார் எனவும், அயல் நாட்டினரின் அடிமைதனத்திலிருந்து விடுதலை அளிப்பார் எனவும், பயத்துடனே , உற்சாகத்துடன் யோவானின் ஞானஸ்நானத்தில் பங்கு கொண்டனர். அவர்களின் உற்சாகம், அவர்களுடைய சொந்த பொறுமையின்மையின் மூலமாக வந்தது. தெய்வ வழிகாட்டுதலால் வந்ததில்லை.

ஆனால், கடவுள், அவர்கள் எதிர்பார்த்ததை விட வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார். உண்மையான மெசியா பரிசுத்த ஆவியின் நெருப்பு மூலம் ஞானஸ்நாணம் கொடுப்பார். ஆனால் யோவானோ, மக்களை மனந்திரும்ப செய்து, உண்மையான மெசியா, அவர்களை பரிசுத்த வாழ்வில் வளர செய்ய, அவருடைய ஆவியையே கொடுத்தார்.

யேசு யோவானிடம் ஞானஸ்நாணம் பெற்றது எதற்காக என்றால், மனந்திரும்ப வேண்டும் என்றில்லை, ஏனெனில், அவர் பாவமற்றவர். மக்களோடு தாமும், மனந்திரும்பும் செயலில் இறங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, யேசு யோவானின் ஞானஸ்நானத்தில் தம்மையும் இனைத்து கொண்டார். சாத்தானிடமிருந்து நம்மையெல்லாம் மீட்கும் இறைசேவையில் அங்கே ஆரம்பித்தார். மேலும், நம் பாவங்களை சிலுவையில் சுமந்து இறந்தார்.

கிறிஸ்துவ ஞானஸ்நாணத்தில், யேசுவின் பரிசுத்தத்தில் நாம் முழுவதுமாக நனைக்க படுகிறோம், மேலும் அதற்கு பிறகு வருவதெல்லாம்: அவர் இறைசேவை, அவரது குருத்துவம், அவரின் நற்செய்தி அறிவுப்பு, பணியாளராக இருந்து நம்மையெல்லாம் தலைமையேற்று அழைத்து சென்றது, மேலும், மற்றவர்களின் மீட்புக்காக, அவர் வேதனை அனுபவித்தது எல்லாம் நமக்கு கிடைத்தது. பரிசுத்த ஆவி நாமும் இதையெல்லாம் செய்ய அதிகாரம் அளிக்கிறார். கடவுள் "நீங்கள் என் அன்பார்ந்த மகன், உன் பொருட்டு நாம் பூரிப்படைகிறேன்" என்று கூறுகிறார்.

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் தின வாழ்வில் உங்கள் ஞானஸ்நானத்தால் என்ன நடக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? எதிர்பார்ப்பது என்பது ஒரு நல்ல குணாதிசயம் ஆகும், எதிர்பார்ப்புகள் அதிகமாக ஏமாற்றத்தையே கொடுக்கின்றன. கடவுளின் நல்ல சூழலில், அவர் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாரோ, அது என்றுமே நாம் எதிர்பார்த்ததை விட குறைவாக கொடுத்ததில்லை.

© 2009 by Terry A. Modica
This work is NOT in Public Domain, and should NOT be copied without permission. For PERMISSION and info on how to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm