ஜனவரி 31, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு
Jer 1:4-5, 17-19
Ps 71:1-6, 15, 17
1 Cor 12:31 -- 13:13
Luke 4:21-30
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 4
21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ' இவர் யோசேப்பின் மகன் அல்லவா? ' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.23 அவர் அவர்களிடம், ' நீங்கள் என்னிடம், ' மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும் ' என்னும் பழமொழியைச் சொல்லி, ' கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் ' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது ' என்றார்.28 தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வு+ரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்.30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியை கொஞ்சம் கூர்ந்து நோக்கி பாருங்கள். போன வார ஞாயிறின் நற்செய்தியை படித்து ( ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்) முடித்து, இந்த நற்செய்தி, அவர் மூலம் இன்று நிறைவேறியது என்று அந்த தொழுகை கூடத்தில் கூறினார். அங்கே அனைவரும் மிகவும் உயர்த்தி புகழ்ந்து கூறினார்கள். ஆனால், இன்றைய நற்செய்தியின் கடைசியில், ஏன் அவர்களெல்லாம், யேசுவின் மேல் சீற்றங் கொண்டனர். அவர்களின் குணத்தை எது மாற்றியது. ?
அவர்களின் அச்சமும், வியப்பும், "யேசு சூசையப்பரின் மகன் " என்று நினைத்து பார்த்த போது, இன்னும் குழம்பியும் போனார்கள். யேசு குழந்தையாக இருந்த பொழுது, அவரை அறிந்தவர்கள் தான் இப்படி குழம்பி போனார்கள். யேச் குழந்தையாக நடக்க முயற்சி செய்த பொழுது, கீழே விழுந்ததையும், இளமை பருவத்தில், தச்சு வேலை செய்யும் போது, தெரியாமல் , சுத்தியால் அடித்து கொண்டதையும் அறிந்தவர்கள், மேலும், யேசுவின் தந்தை இறந்த பொழுது, யேசு அழுததை பார்த்தவர்கள் தான் இன்னும் குழம்பி போனார்கள்.
அவர்களது ஆவியின் படி கேட்காமல், அவர்களின், ஏற்கனவே ஒரு முடிவோடு, கருத்தோடு ஒன்றிபோன மனசுடன், அவர்கள் யேசுவின் பேச்சை கேட்டார்கள், அப்பொழுது, அவர்களின் மனப்பான்மை மாறியது. இது தான், அவர்களை தெய்வத்திலிருந்து தூரம் போகம் வைத்தது. மேலும், அவர்களின் உணர்ச்சிகளை பலவிதமாக குழப்பியது.
உங்களின் குணம் அறிந்த ஒருவர், உங்களிடம் எப்போதும் எதிர்பார்க்கிற நடவடிக்கை களிலிருந்து, நீங்கள் மாறி நடந்து அவர்களை குழப்பினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். நீங்கள் மிகவும் இளையவர் , அல்லது மிகவும் வயதானவர், அதனால், உங்களால் இத்தகைய வேலைகளை செய்ய முடியாது, என்ற நினைப்பிலும், அல்லது, உங்கள் கல்வி தகுதி, அவர்கள் எதிர்பார்க்கிற அளவிற்கு இல்லை, அல்லது, நீங்கள் இதை தான் பேச போகிறீர்கள் என்று சொல்லாமல் பேசும்போது, அவர்கள் எப்படி குழம்பி போவார்கள் என்று நினைத்து பாருங்கள். எப்படி பட்ட உணர்ச்சி வசமான எதிர் விளைவுகள் ஏற்படும் என்று பாருங்கள்.
அவர்கள் நம்மை நம்ப வேண்டும், என்று நாம் எதிர்பார்க்கிறோம், அவர்கள் நம் மேல் நம்பிக்கை கொள்ளாமல் போகும்போது, நமது ஆச்சரியம், நம்மை உணர்ச்சி வசப்படவைத்து, அவர்கள் மேல் அதனை கான்பிப்போம். ஆனால், யேசு எப்படி இது மாதிரியான நிகழ்வை கையான்டார் என்பதை பாருங்கள், அவர் அமைதியாக உண்மையை உரைத்தார், அந்த உண்மை பரிசுத்த ஆவியினால் உருவாக்கப்பட்டது. யேசு உணர்ச்சி வசப்பட்டு பேசினாரா? அவரும் நம்மை மாதிரி மனிதனாக தான் இருந்தார்; நாம் அனைவருமே கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள், நம் அனைவருக்குமே உணர்ச்சி வசப்பட முடியும். உணர்ச்சிவசப்படுதலில் ப்ர்சனை இல்லை. நாம் உணர்ச்சி வயப்பட்டு கேட்க ஆரம்பிக்கும் போது தான், ப்ரச்ன்னை ஆரம்பமாகிறது, பரிசுத்த ஆவியின் துனையுடன் கேட்க ஆரம்பித்தால், ப்ரச்சினை வருவதில்லை.
© 2010 by Terry A. Modica
This work is NOT in Public Domain and may NOT be copied without permission.
You may print one copy for your own personal use.
For PERMISSION and info on how to copy this reflection for sharing, see:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment