Saturday, January 9, 2010

ஜனவரி 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 10, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்துவின் ஞானஸ்னானம்

Isaiah 42:1-4, 6-7
Ps 29:1-4, 9-11
Acts 10:34-38
Luke 3:15-16, 21-22


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 3

15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.19 குறுநில மன்னன் ஏரோது தன் சகோதரன் மனைவியாகிய ஏரோதியாவை வைத்திருந்ததன் பொருட்டும் அவன் இழைத்த மற்ற எல்லாத் தீச்செயல்கள் பொருட்டும் யோவான் அவனைக் கண்டித்தார்.20 எனவே அவன் தான் செய்த தீச்செயல்கள் எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலும் அடைத்தான்.21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

(thanks to www.arulvakku.com)


இன்றைய வாசகங்கள் அனைத்தும், எதிர்பார்ப்புகளை பற்றியே இருக்கிறது. நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு நடக்கும் அநீதியிலிருந்து கடவுள் உங்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? சாத்தானிடமிருந்து உங்களை எப்படி மீட்க வேண்டும் என நினைக்கிறீர்கள், உங்கள் அன்பிற்குரியவர்கள் கடவுளிடம் திரும்ப வேண்டும் , அவர்களுக்கு கடவுள் ஆறுதல் தரவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? உங்களுக்கு என்ன வழிகாட்டுதல் வேண்டும் என நினைக்கிறீர்கள் இருந்தும் இனும் குழப்பத்துடனும், நிச்சயமில்லாமலும் இருக்கிறீர்கள்?

நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும்போது , கிறிஸ்துவின் அன்பளிப்பான அமைதியை நீங்கள் உங்களுள் உணர்கிறீர்களா? அல்லது, பயத்திலும், கவலையிலும், அமைதியின்றியும் இருக்கிறீர்களா?

இன்றைய நற்செய்தியில், யோவானை சுற்றியிள்ளவர்கள் அனைவரும், அவர் தான் மெசியா என எதிர்பார்த்தனர். அநீதிக்கு எதிராக மெசியா வருவார் எனவும், அயல் நாட்டினரின் அடிமைதனத்திலிருந்து விடுதலை அளிப்பார் எனவும், பயத்துடனே , உற்சாகத்துடன் யோவானின் ஞானஸ்நானத்தில் பங்கு கொண்டனர். அவர்களின் உற்சாகம், அவர்களுடைய சொந்த பொறுமையின்மையின் மூலமாக வந்தது. தெய்வ வழிகாட்டுதலால் வந்ததில்லை.

ஆனால், கடவுள், அவர்கள் எதிர்பார்த்ததை விட வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார். உண்மையான மெசியா பரிசுத்த ஆவியின் நெருப்பு மூலம் ஞானஸ்நாணம் கொடுப்பார். ஆனால் யோவானோ, மக்களை மனந்திரும்ப செய்து, உண்மையான மெசியா, அவர்களை பரிசுத்த வாழ்வில் வளர செய்ய, அவருடைய ஆவியையே கொடுத்தார்.

யேசு யோவானிடம் ஞானஸ்நாணம் பெற்றது எதற்காக என்றால், மனந்திரும்ப வேண்டும் என்றில்லை, ஏனெனில், அவர் பாவமற்றவர். மக்களோடு தாமும், மனந்திரும்பும் செயலில் இறங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, யேசு யோவானின் ஞானஸ்நானத்தில் தம்மையும் இனைத்து கொண்டார். சாத்தானிடமிருந்து நம்மையெல்லாம் மீட்கும் இறைசேவையில் அங்கே ஆரம்பித்தார். மேலும், நம் பாவங்களை சிலுவையில் சுமந்து இறந்தார்.

கிறிஸ்துவ ஞானஸ்நாணத்தில், யேசுவின் பரிசுத்தத்தில் நாம் முழுவதுமாக நனைக்க படுகிறோம், மேலும் அதற்கு பிறகு வருவதெல்லாம்: அவர் இறைசேவை, அவரது குருத்துவம், அவரின் நற்செய்தி அறிவுப்பு, பணியாளராக இருந்து நம்மையெல்லாம் தலைமையேற்று அழைத்து சென்றது, மேலும், மற்றவர்களின் மீட்புக்காக, அவர் வேதனை அனுபவித்தது எல்லாம் நமக்கு கிடைத்தது. பரிசுத்த ஆவி நாமும் இதையெல்லாம் செய்ய அதிகாரம் அளிக்கிறார். கடவுள் "நீங்கள் என் அன்பார்ந்த மகன், உன் பொருட்டு நாம் பூரிப்படைகிறேன்" என்று கூறுகிறார்.

நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் தின வாழ்வில் உங்கள் ஞானஸ்நானத்தால் என்ன நடக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? எதிர்பார்ப்பது என்பது ஒரு நல்ல குணாதிசயம் ஆகும், எதிர்பார்ப்புகள் அதிகமாக ஏமாற்றத்தையே கொடுக்கின்றன. கடவுளின் நல்ல சூழலில், அவர் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாரோ, அது என்றுமே நாம் எதிர்பார்த்ததை விட குறைவாக கொடுத்ததில்லை.

© 2009 by Terry A. Modica
This work is NOT in Public Domain, and should NOT be copied without permission. For PERMISSION and info on how to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: