Friday, April 30, 2010

மே 2, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 2, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Acts 14:21-27
Ps 145:8-13
Rev 21:1-5a
John 13:31-35

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 13

31 அவன் வெளியே போனபின் இயேசு, ' இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.34 ' ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் ' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.35நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் ' என்றார்.



(thanks to www.arulvakku.com)

நீங்கள் இப்போது மரணமடைய போகிறீர்கள் என்று தெரிந்தால் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு என்ன சொல்வீர்கள்? என்ன அறிவுரை கூறுவீர்கள்? உங்களிடமிருந்து மிகவும் முக்கியமான ஒன்றை அவர்கள் கற்று கொள்வார்கள்?


இன்றைய நற்செய்தியில், யேசுவுக்கு அவரது காலம் மிகவும் குறைவு என்று தெரியும். அவரது நண்பர்களிடம் , யேசு சொல்லும் முதல் வார்த்தையே கடவுளை புகழ்வது தான். கடவுளையும் , தம்மையும் மாட்சிமைபடுத்துவது பற்றி தெரிவிக்கிறார். அவருடைய நண்பர்களை 'குழந்தைகள்' என்று கூட யேசு அழைக்கிறார். அவரே தந்தை கடவுள் போல! இப்படி செய்வதால், அவர் கடவுளோடு இருக்கிறார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இதன் மூலம், தந்தை கடவுளுக்கும், மீட்பர் மகனுக்கும் இடையே உள்ள சின்ன கோடு தெளிவாக தெரிகிறது. இதனை மிகவும் பணிவுடனும், தாழ்மையுடனும் செய்கிறார். இயேசு இப்படி கூட சொல்லலாம், "நான் கடவுள் என்றும், தெய்வீகமானவன் என்றும் உங்களுக்கு நம்பிக்கை இல்லைஎனில், என்னை வழிபடுங்கள் " என்று சொல்லவில்லை. மாறாக தந்தை கடவுளை மாட்சிமைபடுத்துவை குறிக்கோளாக கொண்டிருந்தார்.


கடவுளின் ப்ரசன்னத்தை புகழொளியை மாட்சிமைபடுத்துவது: அவரின் அன்பை, அவரின் சந்தோசத்தை, அவரின் பரிசுத்ததை, அவரின் அமைதியையும், அவரின் படைப்பையும், மற்றும் பலவும் அவர் கொடுத்ததை, அவர் புகழொளியில் சேர்ந்தது ஆகும். நாம் கடவுளை மாட்சிமைபடுத்தும் பொழுது , அவரின் புகழொளியை நாம் திருப்பி காட்டுகிறோம். இந்த புகழொளி, உங்களில் எவ்வளவு வெளிச்சத்தை கொடுக்கிறது?

தந்தை கடவுள், மகன் யேசுவை மாட்சிமைபடுத்துவதும், மகன் இயேசு தந்தை கடவுளை மாட்சிமைபடுத்துவது உண்டு என்று கூறிய பிறகு, இவ்வுலகிற்கு தேவையான , மிக முக்கியமான அறிவுரை யேசு அவரது சீடர்களுக்கு கொடுக்கிறார்: கடவுளை மாட்சிமைபடுத்துவதில், யேசுவோடு சேர்ந்து கடவுளை போற்றுவதில் நாம் சேரவெண்டும் என்றால், கடவுள் எல்லோரையும் அன்பு செய்வது போல், நாமும் அன்பு செய்ய வேண்டும்..
எவ்வித சுயநலமின்றி கொடுக்கப்படு அன்பு தான் உண்மையான அன்பு ஆகும். இயேசு தன்னை முழுமையாக , எவ்வித சுய நலமின்றி நமக்காக கொடுத்தார். அவரின் மரணத்தையும் சேர்த்து நமக்காக கொடுத்தார். முழு உண்மையான அன்பின்றி யேசுவை பின் செல்பவர்கள், உண்மையாக யேசுவின் பின் செல்பவர்கள் அல்ல, சீடர்கள் உண்மையான சீடர்கள் இல்லை, குருவானவர்கள் உண்மையான குருவாவனவர்கள் இல்லை, பொது மக்கள் உண்மையான பொது மக்களாய் இருக்க மாட்டார்கள், ஒவ்வொருவரும் முழு அன்போடு, கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும்.



கடவுளை மாட்சிமைபடுத்துவதில், உண்மையான அன்பை முழுமையக கொடுத்தால் தான், தியாகத்துடன் கொடுத்தால் தான் அது கடவுளை மாட்சிமைபடுத்துவதாகும். நாம் ஈஸ்டர் காலத்தில் கொண்டாடிகொண்டிருக்கும் போது , நமக்கு ஏன் யேசுவின் பாடுகளை பற்றிய நற்செய்தி வாசகங்கள் இன்று கொடுக்கப்பட்டிருக்கின்றன? மற்ற வாசகங்கள் ஈஸ்டர் வெற்றியை பற்றி பேசுகின்றன. 'இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் ' இருந்தாலும், இயேசு, நம்பிக்கை துரோகத்திற்கும், வேதனைகளுக்கும், மரணத்திற்கும் தயாராகிறார். ஏன்?



கடவுளின் மாட்சிமையை, புகழை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதனை இயேசு தன் மரணத்தின் முன் நம் எல்லோருக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார். யேசு கடவுளை மாட்சிமைபடுத்துவதை ஆரம்பித்து வைத்து, நம்மையும் கடவுளை மாட்சிமைபடுத்த அழைக்கிறார். தியாகத்துடன், நாம் ஒவ்வொருவரையும் அன்பு செய்யும்போது, இயேசு உண்மையான கடவுள் என்பதன் நாம் இவ்வுலகிற்கு காமிக்கிறோம். அவர் உயிர்த்தெழுந்து விட்டார், நம்மில் வாழ்கிறார்.


© 2010 by Terry A. Modica

Friday, April 23, 2010

ஏப்ரல் 25, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் கால 4ம் ஞாயிறு
Acts 13:14, 43-52
Ps 100:1-3, 5
Rev 7:9, 14b-17
John 10:27-30


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 10

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.28நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 30நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ' என்றார்


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி மிகச் சிறியது மேலும், சரியான விசயத்தை நமக்கு எடுத்து காட்டுகிறது: யேசு , நமது நல்லாயன். அவரை மட்டும் தான், நாம் அவர் பின் செல்கிறோம். அவரை மட்டும் தான் நாம் கண் மூடித்தனமாக நம்புகிறோம். நம் வாழ்வில், நம் மேல் அக்கறை உள்ளவர்கள் நமக்கு நல்ல ஆயனாக இருக்கலாம், ஆனால் அவர்களை நாம் கன்மூடி தனமாக பின் பற்ற வேண்டியதில்லை. பிஷப்களையும், பங்கு குருக்களையும், முதலாளிகள், பெற்றோர்கள் அவர்கள் அனைவரையும், அவர்களின் பொறுப்புகளுக்காக நாம் மதிக்கிறோம். ஆனால் அவர்கள் அனைவரும் சில நேரஙளில் தவறு செய்பவர்கள். அவர்கள் பொறுப்புகளை விட்டு , எது சரி , தவறு என்று அவர்களால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.


ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், முடிவெடுக்கும் திறமையை நாம் பரிசுத்த ஆவியின் மூலம் பெற்று, நாம் நடந்து கொள்ள வேண்டும். அப்படி செய்ய வில்லையெனில், நமது தந்தை கடவுளை நாம் வருத்தப்பட வைக்கிறோம். யேசு ஒருவரை தான் நாம் கண்மூடித்தனமாக நாம் நம்ப வேண்டும். யேசு மட்டும் தான் மிகச் சரியானவர். அவருக்கு தான் எல்லாம் தெரியும். எல்லாவற்றையும் புரிந்து கொள்ளுபவர், மேலும் எந்த பாவமும் செய்யாதவர். யேசுவால் மட்டும் தான் வெற்றிகரமாக , மிக சரியான முடிவுகளை எடுக்க முடியும். எல்லா நேரங்களிலும், கடினமான நேரங்களிலும், எல்லா சமயஙளிலும், சாத்தானில் உதவியின்றி, யேசுவால் மட்டுமே முடியும். எல்லா திட்டங்களிலும், யாருமே பாதிக்கபடாமால், சரியான வழியை கொடுக்க முடியும். யேசுவால் மட்டுமே நம்மை மோட்சத்திற்கு நமது ஆபத்தான பயனத்திலிருந்து நம்மை அழைத்து செல்ல முடியும்.



யேசுவின் திட்டத்திலிருந்து, நாம் விலகி செல்கையில், நாம் தவறு செய்கையில் யேசுவினால் மட்டும் தான் நம்மை பார்த்து சிரிக்க முடியும். ஏனெனில், நாம் அவரை அன்பு செய்கிறோம், நல்லதைய செய்ய விரும்புகிறோம் என்று யேசுவிற்கு தெரியும். பாதுகாப்பான வழியில் நம்மை மீண்டும் அழைத்து செல்வார். இரக்கத்துடனும், அன்புடனும் நமது கைகளை பற்றி கொண்டு நம்மை யேசு அழைத்து செல்கிறார், அதனால், நாம் நமது தந்தை கடவுளின் கைகளை விட்டு விடாமல் பார்த்து கொள்கிறார்.



எப்பொழுதாவது நீங்கள் யாரையாவது நம்ப வில்லையென்றால் -- நம்மையும் சேர்த்து தான் -- கண்டிப்பாக யேசு நம்முடன் இருக்கிறார் என்று நாம் நம்பலாம். ஒவ்வொரு நிலைகளிலும், நம்மை வழி நடத்தி செல்வார், நாம் அவரை விட்டு விலகி சென்றாலும், மீண்டும் வந்து நம்மை மீட்டு நல் வழியில் வழி நடத்தி செல்வார். ஏனெனில், நாம் அவரை உண்மையாகவே அன்பு செய்கிறோம். மேலும், நல்லதையே செய்ய விரும்புகிறோம். என்று அவருக்கு தெரியும். நமது பாதுகாப்பை உறுதி படுத்துகிறார். நமது தவறுகளிலிருந்து நம்மை மீட்டு , நாம் நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் போது, நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்கிறார்.

© 2010 by Terry A. Modica

Friday, April 16, 2010

ஏப்ரல் 18 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 18 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 3வது ஞாயிறு
Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Rev 5:11-14
John 21:1-19

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 21

1 பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், ' நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள்.6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.7 இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ' அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.8 மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.9 படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.10 இயேசு அவர்களிடம், ' நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார்.11 சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.12 இயேசு அவர்களிடம், ' உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், ' நீர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.13 இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.14 இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! 'என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' என்றார். 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆடுகளை மேய் ' என்றார்.17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? 'என்று கேட்டார். ' உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ' ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? ″ என்றார். இயேசு அவரிடம், ″ என் ஆடுகளைப் பேணிவளர். ″ 18 ' நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், ' என்னைப் பின் தொடர் ' என்றார்.



(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியை மீண்டும் படித்து பாருங்கள். சீடர்கள் கரைக்கு வரும்போது, இயேசு எப்படி மீனை சுட்டு கொண்டிருந்தார், அவருக்கு அந்த மீன்கள் எங்கிருந்து வந்தது? அவரிடம் வலை இருந்ததா? அல்லது ரொட்டி துன்டுகளை வாங்கும்போது, மீனையும் அந்த நகரத்தில் வாங்கினாரா? அப்படி இருந்திருக்குமேயானால், அவரை யாரும் கண்டுபிடிக்க வில்லையா? யேசு தான் அவர் என்று யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா? அல்லது அந்த மீன்கள் நீரிலிருந்து குதித்து வந்ததா? மேலும், யேசுவே, கற்களை ரொட்டி துண்டுகளாக மாற்றினாரா? சாத்தான் பாலைவனத்தில் அவரை சோதித்த போது ரொட்டி துண்டுகளாக மாற்றியதை போல இயேசு மாற்றினாரா?


ரொட்டி துன்டுகளையும் மீன்களையும் பல மடங்காக யேசு பெருக்கியதை நினைத்து பாருங்கள். அதே உணவு தான்: ரொட்டியும் மீனும். அதே அற்புதம் இங்கும் நடந்துள்ளது. சிறியதாக இருக்கிறதே என்பது ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை. கடவுள், இந்த உலகை படைத்தவர், நமக்கு என்னிலடங்கா பொருட்களை கொடுத்தவர் ஆவார். அவரால் தேவையான அளவு உருவாக்க முடியும். நம்மிடம் என்ன இருக்கிறது என்பதால் அவர் கொடுப்பதில்லை, நம் மேல் உள்ள அன்பினால், அவர் நமக்கு கொடுக்கிறார்.


கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் , அவர் நமக்கு கொடுத்ததை மற்றவர்களிடமும் பகிரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார். கூட்டத்தினருக்கு தேவையான உணவை பல மடங்காக பெருக்கிய அற்புதத்தில், சீடர்களை கூப்பிட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்க சொன்னார். இன்றைய அற்புதத்தில், சீடர்களிடம் மீனை பிடித்து வந்து , அவர் சமைத்து கொண்டிருக்கும் உணவோடு சேர்க்க சொல்கிறார்.

அதற்கு பிறகு, இராயப்பரிடம் ,யேசுவின் அன்புக்கு பாத்திரமான ஆடுகளுடன் , யேசுவின் அன்பை பகிரிந்து கொள்ள சொல்கிறார். அன்பு எங்கிருந்து வருகிறது. இராயப்பர் அவருடைய சொந்த முயற்சியில் யாரையும் அன்பு செய்ய வில்லை. நாமும் அப்படி செய்வதில்லை. இராயப்பர் , கடவுளின் அன்பால் உருவாக்கப்பட்டவர், அந்த அன்பு இராயப்பரிடம் உள்ளது. அதே போல், நம்மிடமும் கடவுளின் அன்பு உள்ளது. முழு அன்பாய் இருக்கிற கடவுளின் உருவத்தை போல நாமும் படைக்கப்பட்டிருக்கிறோம். அளவுக்கு அதிகமான கடவுளின் அன்பை நாமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என இராயப்பர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். அதன் மூலம், கடவுளரசு இந்த பூமி முழுதும் பரவட்டும்.

கடவுள் உன்னிடம் என்ன செய்ய சொல்கிறார்? எதனை பகிர்ந்து கொள்ள சொல்கிறார். அதற்கு பதில், உன்னிடம் என்ன உள்ளது என்பது இல்லை, ஆனால், கடவுளிடம் உள்ளதை வைத்து நீ பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறாயா, உளப்பூர்வமான ஆர்வத்துடன் உள்ளாயா என்பது தான்.

© 2010 by Terry A. Modica

Friday, April 2, 2010

ஏப்ரல் 4 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 4 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு
Acts 10:34a, 37-43
Ps 118:(24) 1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 20

1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.4 இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை

(thanks to www.arulvakku.com)

புனித வாரத்தில், நாம் யேசுவோடு சேர்ந்து அவரோடு அவரது பாடுகளின் வழியில் நாமும் பங்கு பெற்றால் ஒழிய இன்றைய ஈஸ்டரின் வெற்றியை நாம் கொண்டாட முடியாது. மோட்சத்தின் வழி இந்த சிலுவை தான். எந்த மனிதரும், இவ்வாழ்க்கையின் துன்பத்தையும் , கவலைகளையும் ஏற்று கொண்டு, அதனை அவர்கள் யேசுவோடு உள்ள தொடர்புடன் ஏற்று , தியாகம் செய்தால் ஒழிய அவர்களால் இந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாது.


இந்த ஈஸ்டர் சந்தோசம், யேசு நமக்கு என்ன செய்தார் என்பதை ஏற்று கொள்வதால் வருவது அல்ல. அவரது வழியில் நாம் சேர்ந்து நடந்து, அவரோடு ஒவ்வொரு அடியாக எடுத்து நடந்தால் தான் நமக்கு அந்த சந்தோசம் நிலைத்திருக்கும். நாம் மனப்பூர்வமாக யேசுவை பின் செல்ல வேன்டும் என்று நினைத்தோமானால், யேசு செய்வதையெல்லாம் நாம் செய்வோம். மற்றவர்களுக்கு சேவை செய்யும் அவரது இறைசேவையில் நாமும் இனைந்து நித்திய வாழ்வில் நாம் கடவுளோடு இனைவோம். இந்த இறை சேவையில் நாம் சிலுவகளை அடிக்கடி சந்திக்க வேண்டி இருக்கும். தியாகம் மூலம் வரும் அன்பினாலும், வலியினாலும் நாம் மீட்பின் பலனை அடைய முடியாது.


யாராவது நம்மிடம் கோபமாக பேசினால், நமக்கு கோபம் வந்தாலும், அவர்களிடம் நாம் கனிவாக பேசுவது நமது சிலுவையாகும். துன்பத்திற்கு உள்ளானவர்களை நாம் அரவணைக்காமல், நமது கைகளை விடுவித்து கொள்ளலாம் என்று நாம் நினைக்காமல், அவர்களுக்கு ஆறுதலாக இருந்தால், அதுதான் நமது சிலுவையாகும். நம்மை அநீதியுடன் நடத்துபவர்களிடம், திருப்பி நாமும் அதே போல் நடக்கலாம் என்று நினைக்காமல், அவர்களுக்கு நாம் செய்யும் நல்லது, நமது சிலுவையாகும். இறயரசிற்காக நாமும் அவரோடு இனைந்து மற்றவர்களின் வாழ்வில், நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கோமே என்று நாம் தெரிந்து கொள்ளும்பொழுது, நமக்கு இறைவனின் உயிர்த்தெழுதல் சந்தோசத்தை கொடுக்கிறது.


துன்பத்தில் இருக்கும்போது, நமக்கு அன்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, அது வேதனையின் அன்பு , ஆழ்ந்த அன்பு, மீட்பின் அன்பு. அது என்ன வென்றால், நம் அனைவரின் நித்திய வாழ்விற்கு பயனளிக்க கூடியதாக இருக்கிறது. நமது தியாகங்கள் முடிவில்லா செல்வமாக இருக்கும். இது நமது சுலபமான வாழ்வை விட, மிக பெரிய மதிப்புடையதாகும். நித்திய வாழ்வில் முடிவில்லா செல்வம் ஆகும். ஈஸ்டர் ஞாயிறு திருப்பலியானது, யேசுவோடு நாம் உயிர்த்தெழுதலை கொண்டாடும் கொண்டாட்டம் ஆகும். அது சாத்தானை வெற்றி கொண்ட விழாவாகும்.

© 2010 by Terry A. Modica