Friday, April 2, 2010

ஏப்ரல் 4 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 4 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு
Acts 10:34a, 37-43
Ps 118:(24) 1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 20

1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.4 இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை

(thanks to www.arulvakku.com)

புனித வாரத்தில், நாம் யேசுவோடு சேர்ந்து அவரோடு அவரது பாடுகளின் வழியில் நாமும் பங்கு பெற்றால் ஒழிய இன்றைய ஈஸ்டரின் வெற்றியை நாம் கொண்டாட முடியாது. மோட்சத்தின் வழி இந்த சிலுவை தான். எந்த மனிதரும், இவ்வாழ்க்கையின் துன்பத்தையும் , கவலைகளையும் ஏற்று கொண்டு, அதனை அவர்கள் யேசுவோடு உள்ள தொடர்புடன் ஏற்று , தியாகம் செய்தால் ஒழிய அவர்களால் இந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாது.


இந்த ஈஸ்டர் சந்தோசம், யேசு நமக்கு என்ன செய்தார் என்பதை ஏற்று கொள்வதால் வருவது அல்ல. அவரது வழியில் நாம் சேர்ந்து நடந்து, அவரோடு ஒவ்வொரு அடியாக எடுத்து நடந்தால் தான் நமக்கு அந்த சந்தோசம் நிலைத்திருக்கும். நாம் மனப்பூர்வமாக யேசுவை பின் செல்ல வேன்டும் என்று நினைத்தோமானால், யேசு செய்வதையெல்லாம் நாம் செய்வோம். மற்றவர்களுக்கு சேவை செய்யும் அவரது இறைசேவையில் நாமும் இனைந்து நித்திய வாழ்வில் நாம் கடவுளோடு இனைவோம். இந்த இறை சேவையில் நாம் சிலுவகளை அடிக்கடி சந்திக்க வேண்டி இருக்கும். தியாகம் மூலம் வரும் அன்பினாலும், வலியினாலும் நாம் மீட்பின் பலனை அடைய முடியாது.


யாராவது நம்மிடம் கோபமாக பேசினால், நமக்கு கோபம் வந்தாலும், அவர்களிடம் நாம் கனிவாக பேசுவது நமது சிலுவையாகும். துன்பத்திற்கு உள்ளானவர்களை நாம் அரவணைக்காமல், நமது கைகளை விடுவித்து கொள்ளலாம் என்று நாம் நினைக்காமல், அவர்களுக்கு ஆறுதலாக இருந்தால், அதுதான் நமது சிலுவையாகும். நம்மை அநீதியுடன் நடத்துபவர்களிடம், திருப்பி நாமும் அதே போல் நடக்கலாம் என்று நினைக்காமல், அவர்களுக்கு நாம் செய்யும் நல்லது, நமது சிலுவையாகும். இறயரசிற்காக நாமும் அவரோடு இனைந்து மற்றவர்களின் வாழ்வில், நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கோமே என்று நாம் தெரிந்து கொள்ளும்பொழுது, நமக்கு இறைவனின் உயிர்த்தெழுதல் சந்தோசத்தை கொடுக்கிறது.


துன்பத்தில் இருக்கும்போது, நமக்கு அன்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, அது வேதனையின் அன்பு , ஆழ்ந்த அன்பு, மீட்பின் அன்பு. அது என்ன வென்றால், நம் அனைவரின் நித்திய வாழ்விற்கு பயனளிக்க கூடியதாக இருக்கிறது. நமது தியாகங்கள் முடிவில்லா செல்வமாக இருக்கும். இது நமது சுலபமான வாழ்வை விட, மிக பெரிய மதிப்புடையதாகும். நித்திய வாழ்வில் முடிவில்லா செல்வம் ஆகும். ஈஸ்டர் ஞாயிறு திருப்பலியானது, யேசுவோடு நாம் உயிர்த்தெழுதலை கொண்டாடும் கொண்டாட்டம் ஆகும். அது சாத்தானை வெற்றி கொண்ட விழாவாகும்.

© 2010 by Terry A. Modica

No comments: