ஆகஸ்டு 29, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு
Sirach 3:17-18, 20, 28-29
Ps 68:4-7, 10-11
Hebrews 12:18-19, 22-24a
Luke 14:1, 7-14
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 14
1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
விருந்தினருக்கும் விருந்தளிப்போருக்கும் ஒரு போதன
7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:8 ' ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ' இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் ' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ' நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் ' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். ' 12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ' நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். 13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் ' என்று கூறினார்.
(www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி நம்மில் ஒரு கேள்வியை எழுப்புகிறது: நான் ஒரு நல்ல விசயம் செய்யும்பொழுது, என்னுடைய நோக்கம் என்ன? என்னுடைய எதிர்பார்ப்பு என்ன? நான் சுய நலத்துக்காக செய்தேனா? அல்லது மற்றவர்களின் நலனுக்காக செய்தேனா?
மற்றவர்கள் பலனடைந்து , அதன் மூலம் நமக்கு திரும்பி ஏதாவது கிடைக்கும் என்ற என்னத்தில் செய்தோமானால், அது தவறானது. அது கிறிஸ்துவை போல நாம் செய்ய வில்லை என்று அர்த்தம்.
இதனைதான், யேசு ஒரு உவமையாக சொல்கிறார், யாரெல்லாம் உங்களுக்கு திருப்பி செய்ய முடியாமல் இருக்கிறார்களோ? அவர்களை உங்கள் விருந்திற்கு அழையுங்கள் என்று கூறுகிறார். நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டுமானால், இதனை செய்ய வேண்டும் என்று யேசு கூறவில்லை. அப்படி நாம் அர்த்தம் எடுத்து கொள்ள கூடாது.
உண்மையான செய்தி என்னவென்றால், நாம் என்ன செய்தாலும், அதனை அன்பினாலும், அன்பிற்காகவும் செய்தோமானால், அது நல்லது என்பது ஆகும். நமக்கு பலன் கிடைக்கும் என்று எதையும் செய்ய கூடாது. மற்றவர்கள் பலன் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதனால் நமக்கு ஒன்றும் பலன் இல்லை. ஆனால் கொஞ்ச நேரம் யோசித்தால், உங்களுக்கு புரியும், இதனால், நம்மை எவ்வளவு நன்றியோடு அவர்கள் கான்பார்கள். இதை விட வேறு என்ன உங்களுக்கு வேண்டும்.
யாராவது நமக்கு எதிராக பாவம் செய்தால் கூட, நாம் அவர்கள் மாற வேண்டும் என வேண்டிகொள்வோம். அவர்களின் ஆண்ம நலனுக்காக நமது ஜெபம் இருக்க வேண்டும். நமது வாழ்வு ப்ர்ச்னை இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் நாம் அக்கறை கொள்கிறோம். ஆனால் இது தான் நமது முக்கிய நோக்காமாக இருக்க கூடாது.
கிறிஸ்துவை பின் பற்றுவர்களாக நாம் இருப்பதால், நாம் செய்யும் நல்ல விசயங்களுக்கு நாம் ஏதாவது பலன் அடைந்தால், அது நமக்கு கிடைக்கும் கூடுதல் ஊக்கமாகும். நாம் இந்த கூடுதல் ஊக்கத்திற்காக எதிர்பார்ப்போடு இருக்கலாம், ஆனால் நமது சந்தோசம் அதில் இருக்க கூடாது.
நமது நோக்கமும், எதிர்பார்ப்பும் தெளிவாக இருக்கும்பொழுது, நாம் யேசுவை போல இருக்க அதிக சுதந்திரத்துடன் தெரிந்து கொள்கிறோம். இயேசு ஏற்கனவே கூறியது போல, "உங்கள் பரிசும், மீட்பும், சரியான நேரத்தில் உங்களை வந்தடையும்". அந்த வாக்குறுதியின் பலன் இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்கிறது. நாம் யேசுவை போல மாற , நாமும் மீட்படைந்து விட்டோம் என்ற என்னத்துடன், ஆரம்பிதால், கண்டிப்பக அந்த வாக்குறுதி நமக்கு கிடைக்கும்.
நமக்கு இப்பொழுது கிடைக்கும் பரிசு என்னவென்றால், கடவுள் நமக்கு கொடுக்கும் தெய்வ கிருபை, அதன் மூலம், அவர் கேட்கும் எல்லாவற்றையும் செய்யும் ஆற்றல்: சுயநலமில்லாமல், பரிசுத்தத்துடனும், தாராள குணத்துடனும் இருத்தல் வேண்டும். இது இல்லாமல் மேலும் பல ஆசிர்வாதங்களை நாம் பெறுவோம். ஆனால், அந்த மற்ற பலனுக்காக கிறிஸ்துவை போல நாம் இருப்பதாக கூடாது.
© 2010 by Terry A. Modica
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
Friday, August 27, 2010
Friday, August 20, 2010
ஆகஸ்டு 22, 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆண்டின் 21ம் ஞாயிறு
Isaiah 66:18-21
Ps 117:1, 2 (with Mark 16:15)
Hebrews 12:5-7, 11-13
Luke 13:22-30
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 13
இடுக்கமான வாயில்
22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.23 அப்பொழுது ஒருவர் அவரிடம், ' ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? ' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:24 ' இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ' 25 ' வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் ' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது ' எனப் பதில் கூறுவார்.26 அப்பொழுது நீங்கள், ' நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே ' என்று சொல்வீர்கள்.27 ஆனாலும் அவர், ' நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் ' என உங்களிடம் சொல்வார்.28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.29 இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியின் வாசகங்கள், மோட்சத்தின் கதவுகள் மிகவும் குறுகியது என்று கூறும் சாலையோர போர்டுகளாகும். கடவுளுக்கு நமது செயல்களும், எண்ணங்களும் தெரியும் என்று இசையா கூறுகிறார். நமது செயல்களை புனிதமாக்கவும், எண்ணங்களை தூய்மையாக்கவும், அதன் மூலம், நாம் இறக்கும்பொழுது, கடவுளின் முழு புகழொளியை நாம் முழுமையாக பார்க்க முடியும் . அதற்காக கடவுள் நமக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தார், அது தான் இயேசு. அவரின் வாழ்வு, எப்படி வாழ்ந்தார், எப்படி இறந்தார் என்பதெல்லாம், நமக்கு பல அடையாளங்களாக, நம்மை மோட்சத்திற்கு செல்லும் வழியாகும். அதன் மூலம், நாம் மோட்சதிற்கு சென்று நமது முழு வாழ்வை வாழ்வோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கிறார்: தகுதியற்று , போதுமான ஆற்றலுடன் நிறைய பேர் மீட்பிற்காக முயற்சிப்பார்கள் என்று சொல்கிறார். அந்த போதுமான தகுதி என்ன?
நற்செய்தியில் எல்லா இடத்திலும் இயேச் இதற்கு பதில் சொல்கிறார்: நமது அன்பில் பரிசுத்தமான முழுமையான அன்பாக இருக்க வேண்டும். மோட்சத்தை திறக்கும் சாவி அன்பு தான். நாம் அதனை தூக்கி எறிந்தால், நாம் சாவியையும் தூக்கி எறிகிறோம்.
நாம் எப்பொழுதுமே அன்பினை தூக்கி எறிவதில்லை, நாம் பாவியாக இருந்தாலும். ஆனாலும், நாம் நமது அன்பில் பரிசுத்தமாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், எப்பொழுதுமே, எவ்வித நிபந்தனையுமின்றி , தியாகத்துடனும் அன்பு செய்ய வேண்டும்.
முழுமையான அன்பு செய்ய வேண்டும் என்றால், நாம் கடவுளின் அன்பை கொண்டிருக்க வேண்டும். யேசு நம்மில் வசித்து , அதன் மூலம், மற்றவர்களிடம் அவர் சென்றடைய வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமையான அன்பாகும்.
ஆண்டவரின் அன்பில் நாம் திளைக்க வேண்டும் என்றால், அவரின் அன்பை தடுக்கும் எதனையும் நாம் தூக்கி எறிய வேண்டும்: மன்னிக்காமல் இருப்பது, பழிவாங்குதல், நீடித்து இருக்கும் கோபம், மகிழ்ச்சியை வெறுப்பது, மேலும் மற்றவர்களின் தேவைகளை நிராகரிப்பது.
கடவுளின் ஒழுங்கை அவமதிக்க வேண்டாம் என்று இன்றைய வாசகம் கூறுகிறது. நமக்கு கஷ்டமாகவும், சோதனையாகவும் இருப்பவற்றை , கடவுள் உபயோகப்படுத்தி, நமது அன்பு முழுமையாக இருக்க உதவுகிறார். இதனையெல்லாம், நாம் அன்பினில் வளரும் வாய்ப்பாக நாம் எடுத்து கொண்டு , கடவுளின் உதவியை நாடி, அவர் நம்மை அன்பு செய்ய வைப்பார். அப்பொழுது, நாம் யேசுவை போல் மாறுவோம். மோட்சத்திற்கு நேரான பாதையை ஏற்படுத்து கிறோம்.மேலும் நமது பரிசுத்த வாழ்வில் உள்ள குறைகளும் குணமாக்கபடுகின்றன.

Saturday, August 7, 2010
ஆகஸ்டு 8, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆண்டின் 19ம் ஞாயிறு
Wisdom 18:6-9
Ps 33:1, 12, 18-22
Heb 11:1-2, 8-19
Luke 12:32-48
2 ' சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
(மத் 24:45 - 51)
35 உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ' 41 அப்பொழுது பேதுரு, ' ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா? ' என்று கேட்டார்.42 அதற்கு ஆண்டவர் கூறியது: ' தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.45 ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.47 தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.48 ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், கடவுள் அவரது இறையரசை நமக்கும் தர திருவுளம் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த இறையரசு, நமது மோட்சத்திற்கும் , கடவுளின் நம் மேல் கொண்டுள்ள அன்பினால் நமக்கு இவ்வுலகில் கிடைக்கும் பயன்கள் பல.
கடவுள் நமக்காக எவ்வித நல்ல விசயங்களையும், பலன்களையும் அவருக்குள் வைத்து கொண்டு, நம்மை காத்திருக்க சொல்ல வில்லை. ஆனால், அதனை நாம் பயன்படுத்துகிறோமோ?
இயேசு இவ்வாறு விளக்குகிறார்: கடவுளின் அன்பையும், தாராள அன்பளிப்புகளையும், மற்றவர்களோடு பகிராமால், இந்த உலகின் செல்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், உங்கள் கைகளில் இருப்பவை அனைத்தும், சிறிது காலம் கூட உங்களுடன் இருக்காது. உங்கள் பணப்பைகள், இவ்வுலக நோக்கத்தால், கடவுளை வெளியே தள்ளுகிறீர்கள், மற்றவர்களையும் ஒதுக்குகிறீர்கள், கடவுளுக்கு உதவாத உறுவுகளால், நம் பரிசுத்த வாழ்விலிருந்தும் விலகுகிறோம். கடவுளின் அற்புதமான மற்றும், நித்திய அன்பளிப்புகளுக்கும் நாம் இடம் கொடுக்காமல் இருக்கிறோம். "உங்கள் மதிப்பும், பொருட்செல்வமும் எதனை பற்றி இருக்கிறதோ, அதில் தான் உங்கள் மனசும் செல்லும்."
கடவுளுக்கு உதவாத , ஒத்து வராத எதுவும் நமக்கு தீங்கிழைக்க கூடியது, மேலும் இறுதியாக நாம் விரும்பும் எதுவும் ஒன்றுமில்லாமல் போகும். ஏனெனில், அது நம்மை கடவுளோடு இனைப்பதில்லை, நம்மை மோட்சத்திற்கும் அழைத்து செல்வதுமில்லை. நாம் இந்த அழியும் விருப்பங்களையும், கடவுளின் அழியாத செல்வங்களுக்காக நாம் விட்டு விட வேண்டும்.
இயேசு ஒன்றும் நமது செல்வங்கள் அனைத்தையும், கடவுளின் செல்வங்களுக்காக நாம் விற்று விட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், கடவுளின் செல்வங்களை நோக்கி நமது எண்ணம் இருக்கவேண்டும். அது தான் முக்கியம். அந்த செல்வங்கள் எல்லாம் கடவுளரசிற்காக உபயோகப்படவேண்டும்.
நம்மை கடவுளோடு இனைப்பது எதுவெல்லாமோ, அதெல்லாம் தான் நமது செல்வமாகும், அதன் பலனை நித்திய வாழ்விலும் நாம் அனுபவிப்போம்.
நாம் இவ்வுலக ஆசைகளினால், நமது நேரத்தை செலவிட்டு வீணாக்க வேண்டாம் என்று யேசு நம்மை எச்சரிக்கிறார். நமது கடவுள் எப்பொழுது நம்மை இவ்வுலகை விட்டு அழைத்து செல்வார் என்று நமக்கு தெரியாது. அவர் நம்மை எடுத்து சென்று , மோட்சத்தில் நம்மை அவரோடு இனைத்து கொள்வார். நாம் தயாராய் இருக்கிறோமோ? அல்லது, இவ்வுலக செல்வங்களுக்காக நாம் விரும்பி, அதற்காக உழைக்கிறோமோ?
அதனால் தான், கடவுள் அவரது இரக்கத்தினால், நமக்கு உத்தரிக்கிரஸ்தலத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். நமது இவ்வுலக செல்வங்களை, ஆசைகளை ஒழித்தொழிக்க தான், உத்தரிக்கிறஸ்தலத்தை நமக்கு கடவுள் கொடுத்துள்ளார். அதை தான் சிறிதே கடவுளிடமிருந்து அடிபடுவான் என்று இயேசு சொல்கிறார். அதற்காக ஏன் காத்திருக்க வேண்டும், இன்றே நாம் கடவுளரசின் செல்வத்திற்காக உழைத்து , எந்த ஒரு திருடனும் திருட முடியாத நித்திய செல்வங்களை சேர்ப்போம்.

Subscribe to:
Posts (Atom)