Friday, August 27, 2010

ஆகஸ்டு 29, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 29, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு

Sirach 3:17-18, 20, 28-29
Ps 68:4-7, 10-11
Hebrews 12:18-19, 22-24a
Luke 14:1, 7-14

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 14


1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
விருந்தினருக்கும் விருந்தளிப்போருக்கும் ஒரு போதன
7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:8 ' ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ' இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் ' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ' நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் ' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். ' 12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ' நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். 13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் ' என்று கூறினார்.
(www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி நம்மில் ஒரு கேள்வியை எழுப்புகிறது: நான் ஒரு நல்ல விசயம் செய்யும்பொழுது, என்னுடைய நோக்கம் என்ன? என்னுடைய எதிர்பார்ப்பு என்ன? நான் சுய நலத்துக்காக செய்தேனா? அல்லது மற்றவர்களின் நலனுக்காக செய்தேனா?


மற்றவர்கள் பலனடைந்து , அதன் மூலம் நமக்கு திரும்பி ஏதாவது கிடைக்கும் என்ற என்னத்தில் செய்தோமானால், அது தவறானது. அது கிறிஸ்துவை போல நாம் செய்ய வில்லை என்று அர்த்தம்.
இதனைதான், யேசு ஒரு உவமையாக சொல்கிறார், யாரெல்லாம் உங்களுக்கு திருப்பி செய்ய முடியாமல் இருக்கிறார்களோ? அவர்களை உங்கள் விருந்திற்கு அழையுங்கள் என்று கூறுகிறார். நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டுமானால், இதனை செய்ய வேண்டும் என்று யேசு கூறவில்லை. அப்படி நாம் அர்த்தம் எடுத்து கொள்ள கூடாது.

உண்மையான செய்தி என்னவென்றால், நாம் என்ன செய்தாலும், அதனை அன்பினாலும், அன்பிற்காகவும் செய்தோமானால், அது நல்லது என்பது ஆகும். நமக்கு பலன் கிடைக்கும் என்று எதையும் செய்ய கூடாது. மற்றவர்கள் பலன் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதனால் நமக்கு ஒன்றும் பலன் இல்லை. ஆனால் கொஞ்ச நேரம் யோசித்தால், உங்களுக்கு புரியும், இதனால், நம்மை எவ்வளவு நன்றியோடு அவர்கள் கான்பார்கள். இதை விட வேறு என்ன உங்களுக்கு வேண்டும்.
யாராவது நமக்கு எதிராக பாவம் செய்தால் கூட, நாம் அவர்கள் மாற வேண்டும் என வேண்டிகொள்வோம். அவர்களின் ஆண்ம நலனுக்காக நமது ஜெபம் இருக்க வேண்டும். நமது வாழ்வு ப்ர்ச்னை இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் நாம் அக்கறை கொள்கிறோம். ஆனால் இது தான் நமது முக்கிய நோக்காமாக இருக்க கூடாது.

கிறிஸ்துவை பின் பற்றுவர்களாக நாம் இருப்பதால், நாம் செய்யும் நல்ல விசயங்களுக்கு நாம் ஏதாவது பலன் அடைந்தால், அது நமக்கு கிடைக்கும் கூடுதல் ஊக்கமாகும். நாம் இந்த கூடுதல் ஊக்கத்திற்காக எதிர்பார்ப்போடு இருக்கலாம், ஆனால் நமது சந்தோசம் அதில் இருக்க கூடாது.
நமது நோக்கமும், எதிர்பார்ப்பும் தெளிவாக இருக்கும்பொழுது, நாம் யேசுவை போல இருக்க அதிக சுதந்திரத்துடன் தெரிந்து கொள்கிறோம். இயேசு ஏற்கனவே கூறியது போல, "உங்கள் பரிசும், மீட்பும், சரியான நேரத்தில் உங்களை வந்தடையும்". அந்த வாக்குறுதியின் பலன் இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்கிறது. நாம் யேசுவை போல மாற , நாமும் மீட்படைந்து விட்டோம் என்ற என்னத்துடன், ஆரம்பிதால், கண்டிப்பக அந்த வாக்குறுதி நமக்கு கிடைக்கும்.

நமக்கு இப்பொழுது கிடைக்கும் பரிசு என்னவென்றால், கடவுள் நமக்கு கொடுக்கும் தெய்வ கிருபை, அதன் மூலம், அவர் கேட்கும் எல்லாவற்றையும் செய்யும் ஆற்றல்: சுயநலமில்லாமல், பரிசுத்தத்துடனும், தாராள குணத்துடனும் இருத்தல் வேண்டும். இது இல்லாமல் மேலும் பல ஆசிர்வாதங்களை நாம் பெறுவோம். ஆனால், அந்த மற்ற பலனுக்காக கிறிஸ்துவை போல நாம் இருப்பதாக கூடாது.

© 2010 by Terry A. Modica

http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/

No comments: